2 பேர்.. டிக் அடிக்க போகும் ரோஹித் - ராகுல்.. என்னது அஸ்வினா? சூப்பர்.. இந்திய அணிக்கு குட்நியூஸ்!
ரோஹித் - ராகுல் டிராவிட் இணைந்து அடுத்த துணை கேப்டனை தேர்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: இந்திய அணியில் இளம் வீரர் கே. எல் ராகுல் தொடர்ந்து மோசமாக ஆடி வருகிறார். இந்த நிலையில் அவர் துணை கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வர தொடங்கி உள்ளன.
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக ஆடி வருகிறது. நேற்று நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றது.
இந்த இரண்டாவது டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் கே. எல் ராகுல் மீண்டும் சொதப்பி வெறும் 1 மட்டுமே எடுத்தார் . முதல் இன்னிங்சில் 17 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். நாக்பூர் டெஸ்டில் இவர் முதல் இன்னிங்சில் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

மோசமான பார்ம்
கே. எல் ராகுல் தற்போது அணியில் மிகவும் மோசமான பார்மில் இருக்கிறார். இந்திய அணியில் எந்த பார்மட்டிலும் சரியாக ஆடாத கே. எல் ராகுலை அணியில் இருந்தே நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுவாக வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 20 வருடத்தில் இவ்வளவு குறைவான ஆவரேஜ் கொண்ட ஒப்பனர் இந்திய அணியில் இருந்ததே இல்லை. இந்திய அணியில் ஷிகர் தவான் 40+ ஆவரேஜ் டெஸ்ட் போட்டிகளில் வைத்துள்ளார். மயங்க் அகர்வால் 41 + ஆவரேஜ் வைத்துள்ளார். அவர் இரண்டு இரட்டை சதம் வேறு அடித்தார். சுப்மான் கில் சிறப்பான பார்மில் இருக்கிறார்.

மோசமான நிலை
முதல் தர போட்டிகளில், ரஞ்சி போட்டிகளில் சர்ப்ராஸ் கான் மிக சிறப்பாக 100, 200 என்று 40+ ஆவரேஜில் அடித்து வருகிறார். ஆனால் இவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. முக்கியமாக நேற்று மேட்சில் அவர் ஆடிய விதம் கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. கடந்த 2017ல் இருந்து 49 டெஸ்ட் போட்டிகளில் கே. எல் ராகுல் ஆடி இருக்கிறார். இதில் 25 ஆவரேஜ் மட்டுமே வைத்துள்ளார். வாய்ப்பு வழங்குவதோடு இல்லாமல் இவருக்கு துணை கேப்டன் பொறுப்பையும் இந்திய அணி வழங்குவதுதான் மிகப்பெரிய காமெடியாக உள்ளது.

அஸ்வின்
அஸ்வின் போன்ற வீரர்கள் இருக்கையில் அவர்களுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படாமல் ராகுலுக்கு வழங்கப்படுகிறது. டெயில் என்டர் அஸ்வின் சிறப்பாக ஆடிய அளவிற்கு டாப் ஆர்டர் ஓப்பனர் ராகுல் சிறப்பாக ஆடவில்லை. டெஸ்ட் போட்டிகளில் குறைந்த ஆவரேஜ் வைத்து இருக்கும் தற்கால பேட்ஸ்மேன்களில் இவர்தான் முதலிடத்தில் உள்ளார். இந்த நிலையில்தான் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் லிஸ்ட் பிசிசிஐ மூலம் வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால் இந்த லிஸ்டில் கே எல் ராகுலின் பெயருக்கு பின் துணை கேப்டன் என்ற பெயர் இல்லை.

துணை கேப்டன்
இதனால் அவர் துணை கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வர தொடங்கி உள்ளன. அதோடு ரோஹித் - ராகுல் டிராவிட் இணைந்து அடுத்த துணை கேப்டனை தேர்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் அஸ்வின் - ஜடேஜா இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்திய டெஸ்ட் அணியில் மிக சிறப்பான மூளை கொண்டவர் அஸ்வின். அவர் களத்தை ஆராயும் விதமும், முடிவு எடுக்கும் திறனும் யாராலும் கணிக்க முடியாதது. அவர் துணை கேப்டனாகும் பட்சத்தில் இந்திய அணிக்கு அது சிறப்பான செய்தியாக இருக்கும். அதோடு துணை கேப்டன் என்ற பெயரில் அணியில் இடம்பிடித்துக்கொண்டு இருக்கும் கே எல் ராகுலும் தூக்கியடிக்கப்பட வாய்ப்பாக அமையும்.












Click it and Unblock the Notifications