ஃபன் பண்ண ரெடியா சென்னை.. இன்று தொடங்குகிறது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர்! எந்தெந்த அணிகள் மோதல்?
சென்னை: ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் டிராபி தொடர் போட்டி பல்வேறு எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தொடங்குகிறது.
ஹாக்கி இந்தியாவுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடத்தும் 7 வது ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் டிராபி தொடர் போட்டி இன்று முதல் 12 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. புகழ்பெற்ற இந்த ஹாக்கிப் போட்டி சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடைபெற உள்ளது விளையாட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், மலேசியா, சீனா மற்றும் தென் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் 2023 போட்டியினை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இருந்தார்.
இப்போட்டியினை சர்வதேச தரத்தில் சிறப்பாக நடத்தும் வகையில் பாரிஸ் ஒலிம்பிக் டர்ஃப் அமைக்கப்பட்டது. அதேபோல் மைதானம் புனரமைப்பு, மேம்பாட்டு பணிகளுக்கு மட்டும் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி இந்த மைதானத்தை புனரமைத்து மேம்படுத்தும் பணிகள் தொடங்கின. பாரிஸ் ஒலிம்பிக் தரத்திலான முதன்மை ஹாக்கி செயற்கை இழை ஆடுகளம், வீரர்கள் பயற்சி செய்வதற்கான செயற்கை இழை ஆடுகளம் மற்றும் இணைப்பு பணிகள், மின்னொளி வசதிகள், பார்வையாளர்களுக்கான இருக்கை வசதிகள், விளையாட்டு வீரர்ககள் தங்கும் அறைகள், நவீன கழிப்பிட வசதிகள், சிறப்பு விருந்தனர்கள் அமர்வதற்கான பார்வையாளர் மாடம் மற்றும் பிற சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று நிறைவடைந்து உள்ளன.
இந்த போட்டிகளில் கலந்துகொள்ள வரும் சர்வதேச ஹாக்கி வீரர்கள் தங்கும் நட்சத்திர விடுதிகள், போக்குவரத்து வசதிகள், உணவு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.
ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் 2023 கோப்பை மற்றும் லோகோவும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. யானை வடிவில் பொம்மன் என்ற லோகோ அமைக்கப்பட்டு உள்ளது. விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதனை அறிமுகம் செய்து, ஆசிய ஹாக்கி கோப்பையினை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் "பாஸ் தி பால்" கோப்பை சுற்றுப் பயணத்தை கடந்த மாதம் தொடங்கி வைத்தார்.
முதல் நாளான இன்று மாலை 4 மணிக்கு கொரியா - ஜப்பான் அணிகளும், மாலை 6.15 மணியளவில் மலேசியா - பாகிஸ்தான் அணிகளும், இரவு 8.30 மணியளவில் இந்தியா - சீனா அணிகளும் ஒன்றை ஒன்று எதிர்த்து விளையாடுகின்றன. ஆகஸ்டு 12 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications