Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“எனக்கா வயசாகிருச்சு? என்னுடன் நடை போட்டிக்கு எடப்பாடி தயாரா?”.. துரைமுருகன் சவால்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக துரைமுருகன் மீண்டும் போட்டியிடுகிறார். இன்று வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த அமைச்சர் துரைமுருகன், "என்னுடன் நடைபோட்டி பந்தயத்திற்கு எடப்பாடியை வரச் சொல்லுங்கள் பார்ப்போம்" என சவால் விடுத்துள்ளார்.

ஆரணியில் நடந்த அதிமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துரைமுருகனுக்கு வயதாகிவிட்டது. அவரால் நடக்க முடியவில்லை. பெருமைக்காக தேர்தலில் போட்டியிடுகிறார். 2021 சட்டசபை தேர்தலில் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் நின்றார். அப்போது மக்களை சந்தித்து எனக்கு இதுதான் கடைசி தேர்தல், எனக்கு வயதாகி விட்டது, எனக்கு ஓட்டு போடுங்கள் எனக் கூறினார். மக்களும் வாக்களித்தனர். அதிமுக வேட்பாளர் ராமு 700 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

duraimurugan

இந்த முறையும் தேர்தலில் துரைமுருகன் போட்டியிடுகிறார். வெற்றி பெற்றால் இந்தியாவிலேயே அதிக முறை சட்டசபை உறுப்பினராக இருந்த பெருமை கிடைக்கும் என்கிறார். உங்களுக்கு பெருமை கிடைக்கிறதுக்காக, மக்களா கிடைச்சாங்க? அவருக்கு 88 வயதாகிவிட்டது. சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது அவருடைய சொந்த விருப்பம். அதில் தலையிடவில்லை. ஆனால் அவரால் நடக்கவே முடியவில்லை. எழுந்திருக்கவே முடியவில்லை. எப்படி மக்களுடைய குறைகளை கேட்பார்?

சட்டசபை உறுப்பினர் என்றால் சட்டசபை தொகுதி முழுவதும் சுழன்று மக்களின் குறைகளை கேட்டு தீர்க்க வேண்டும். நடந்து சென்றாலே பிடித்துக் கொண்டு செல்கிறார். நான் தவறாக சொல்லவில்லை. நான் அண்ணன் துரைமுருகனை மதிக்கக்கூடியவன். அவருடைய வயது மூப்பை பார்க்க வேண்டும். அதனால் காட்பாடியில் நிறுத்தப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் ராமுக்கு வெற்றிச் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசி இருந்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் 13வது முறையாக போட்டியிடும் திமுக பொதுச் செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் 11-வது முறையாக இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். செங்கோட்டையில் இருந்து திமுக கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாக வந்து காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலச்சந்தரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் துரைமுருகன்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், "ஆரணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பேச துரைமுருகனுக்கு வயதாகிவிட்டது. அவரால் நடக்கவே முடியவில்லை, பெருமைக்காக போட்டியிடுகிறார் என இபிஎஸ் பேசி இருக்கிறார். எடப்பாடி பேசும் பொய்களில் இதுவும் ஒன்று. வேண்டுமென்றால் எடப்பாடியை என்னோடு நடை போட்டிக்கு பந்தயத்துக்கு வர சொல்லுங்கள் பார்ப்போம்" எனத் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+