2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி
சென்னை: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு சரியாக ஒரு மாதமே இருப்பதால் தொகுதிகளை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், வரும் தேர்தலில் மேற்கு மண்டலம் முழுவதும் திமுக முன்னிலை பெறும் என்றும், கடந்த 2021 இல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது என்றும் ஏஎன்எஸ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக கூட்டணியும் வியூகங்களை வகுக்கிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டுகிறார்கள்.

திமுக சுமார் 22 கட்சிகளுடன் பிரம்மாண்ட கூட்டணி அமைத்திருக்கிறது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி, தொகுதிகளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், வரும் தேர்தலில் மேற்கு மண்டலம் முழுவதும் திமுக முன்னிலை பெறும் என்று ஏஎன்எஸ் கருத்துக் கணிப்பு நிறுவனம் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னை, சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் அக்னி நியூஸ் சர்வீஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.சுரேஷ்குமார் தலைமையில் வெளியிடப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில், திமுக 180-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மண்டலத்தில் 42 தொகுதிகள், மேற்கு மண்டலத்தில் 32 தொகுதிகள் திமுக முன்னிலை வகித்துள்ளது. மொத்தத்தில் திமுக கூட்டணியே முன்னிலையில் இருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுக 54 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளதாகவும், அதன் கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு குறைந்த அளவு வாக்குகள் கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அதிமுகவைவிட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது. ஆனால், அந்தக் கட்சியின் மொத்த வாக்கு சதவீதம் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி 8 முதல் 9 சதவீதம் வரை வாக்குகள் பெறும் வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக அரசின் புதுமைப் பெண் திட்டம், விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை வழங்கல் போன்ற பல்வேறு திட்டங்கள் மகளிர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், பெண் வாக்காளர்களின் ஆதரவு திமுகவுக்கு அதிகளவில் இருக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் திமுகவுக்கு வாக்களிக்கலாம் என்று ஆய்வு கூறுகிறது.
அந்த வகையில், வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி மீண்டும் ஆட்சியை அமைக்கும் நிலை உள்ளதாக அக்னி நியூஸ் சர்வீஸ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அதிமுக) 66 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை அந்த தொகுதிகள் கூட கிடைக்காதது என்று கருத்துக் கணிப்பில் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications