சிபிஎம் அவசர செயற்குழு.. திடீரென என்ட்ரி கொடுத்த வைகோ.. திமுக கூட்டணியில் பரபரப்பு
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீடில் இழுபறி நீடித்து வருகிறது. சிபிஎம் செயற்குழு நடந்து கொண்டிருந்த போது அங்கு மதிமுக வைகோ திடீரென வருகை புரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. திமுக மற்றும் அதிமுக 2 கூட்டணிகளிலும் தொகுதி பங்கீடும் தீவிரமடைந்து வருகிறது.

திமுக - சிபிஎம் கூட்டணி
திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைந்திருப்பதால், கடந்தமுறை போட்டியிட்ட தொகுதிகளை விட குறைவான தொகுதிகளை பெற்று கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறார்கள். அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது என்பதற்காக எங்களுக்கு குறைவான தொகுதியை ஒதுக்குவது ஏற்க முடியாது என கூறி வருகிறார்கள்.
திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி இடையே நான்கு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனாலும் உடன்பாடு ஏற்படவில்லை. கூடுதல் தொகுதி வேண்டும் என சிபிஎம் கட்சியும், கடந்தமுறை போட்டியிட்ட தொகுதிகளை விட குறைவான தொகுதியில் போட்டியிட வேண்டும் என திமுகவும் கூறி வருகிறார்கள். இதனால் கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
அவசர செயற்குழுவில் வைகோ
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் சென்னை தியாகராயநகர் பகுதியில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலாளர் பேபி, சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது அங்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீரென அங்கு என்ட்ரி கொடுத்தார்.
பரபரப்பு விளக்கம்
கூட்டணி குறித்து அவர் ஆலோசனை நடத்த சென்றதாக தகவல் வெளியானது. இதுகுறித்து வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், "சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலாளர் பேபியை சந்திக்கவேக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு வந்தேன். அவர் என்னுடைய நீண்ட கால நண்பர். என் மீது அதிக எல்ல்லையற்ற அக்கறை கொண்டவர். அன்பானவர். எனவே இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டும் தான்.
இந்த அலுவலகத்தில் வைத்து நான் அரசியல் கேள்விகளுக்கு பதில் கூற மாட்டேன். நீங்கள் எது கேட்டாலும் சொல்ல மாட்டேன். தேர்தலுக்காக என்னிடம் பல கேள்விகளை கேட்பீர்கள் என்பது தெரியும். நான் எதுவும் சொல்ல மாட்டேன். நீங்கள் என்ன கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேன். எப்படி கேட்டாலும் பதில் இல்லை" என்று கூறி சென்றார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications