"அது யார் அப்பா வீட்டு காசு?” செங்கோட்டையனுக்கு பதிலடி கொடுத்த நேரு.. சட்டுனு சிரித்த சபாநாயகர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கும் திட்டம் தொடர்பாகச் சட்டமன்றத்தில் திமுக - தவெக உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் செங்கோட்டையனுக்கு காட்டமாக பதில் கொடுத்தார் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு.

சட்டமன்ற விவாதத்தின்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பணிகளை ஆற்றுவதற்கு அரசின் சார்பாக வாகனங்கள் வழங்குகின்ற போது அதற்கு ஒரு தனி மரியாதை இருக்கிறது. நீங்கள் எத்தனை கோடியில் கார் ஓட்டினாலும் அரசு கொடுக்கும் காரில் போகும்போது தனி மரியாதை இருக்கிறது.

Assembly Heats Up Over MLA Cars KN Nehru s Sharp Reply to Minister Sengottaiyan

கார் ரேஸிற்கே நீங்கள் 24 கோடி ரூபாய் செலவு செய்தீர்கள். அதெல்லாம் யார் காசு? அதற்கெல்லாம் 24 கோடி செலவு செய்த நீங்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் வாகனம் வாங்கி தருவதைப் பற்றி நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்? என்பதுதான் என்னுடைய கேள்வி" என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "கார் வேண்டாம் என்பது எங்கள் திமுக எடுத்த முடிவு... யாருக்கெல்லாம் கார் தேவையோ அவர்களுக்கெல்லாம் கார் வாங்கிக்கொடுங்கள். திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தேவையில்லை என்று நாங்கள் தெளிவாகச் சொல்லிவிட்டோம். நீங்கள் யாரும் கார் வாங்கிக் கொள்ளக்கூடாது என்று நாங்கள் யாரும் சொல்லவில்லை. கார் வாங்கிக்கொள்ளுங்கள் எல்லாத் தொகுதியும் சுற்றிக்கொள்ளுங்கள்.

கார் ரேஸ் பற்றி இங்கு ஒரு விவாதம் வருகிறது. எங்கள் ஆட்சியில் நடத்தப்பட்டது இன்டர்நேஷனல் கார் ரேஸ். ஆசியாவிலேயே முதன் முதலாக நகரத்திற்குள் இரவு நேரத்தில் நடத்திக்காட்டுவோம் என்று நடத்திக்காட்டினோம். இதைத் தடுப்பதற்கு அப்போது வழக்குத் தொடர்ந்தார்கள். ஆனால் இன்டர்நேஷனல் அளவில் நடக்கக்கூடிய கார் ரேஸை நீங்கள் தடுத்து நிறுத்தக்கூடாது என்று நீதிமன்றம் கூறியது.

வெற்றிகரமாக எங்கள் ஆட்சியில் அந்த கார் ரேஸை நடத்திக்காட்டினோம். கார் ரேஸை நீங்கள் கொச்சைப்படுத்துவதன் மூலம் நீங்கள் எங்களைக் கொச்சைப்படுத்தவில்லை. கார் ரேஸ் வீரர்களை நீங்கள் கொச்சைப்படுத்துகிறீர்கள்" என்று பேசினார்.

அதைத்தொடர்ந்து செங்கோட்டையன் பேசுகையில், "நீங்கள் எத்தனை கோடியில் கார் ஓட்டினாலும், அரசு கார் கொடுக்கிற போது அதற்கு தனி மரியாதை இருக்கிறது. ஆனால், எங்களைப் பற்றி சொல்கிறீர்கள். தி.மு.க ஆட்சிக் காலத்தில் கார் பந்தயம் நடத்துவதற்காக ரூ.24 கோடி செலவிட்டார்களே, அது யார் அப்பா காசு?" எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு திமுக எதிர்கட்சித் துணைத் தலைவர் கே.என்.நேரு காட்டமாக பதிலளித்துப் பேசினார். "செஸ், ஹாக்கி போட்டிகளைப் போலத்தான் ஃபார்முலா கார் ரேஸ் போட்டியும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் நீங்கள் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது ரூ.10 கோடி செலவில் போட்டிகளை நடத்தினீர்கள், அது யார் வீட்டு பணம்? ஆனால், வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களைக் கூட வழங்கவில்லை, உங்களைப் போலவா நாங்கள் இருக்க முடியும்?" என்று கே.என்.நேரு காரசாரமாகப் பதிலடி கொடுத்தார். செங்கோட்டையனை நோக்கி கே.என்.நேரு எழுப்பிய கேள்வியால் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் சட்டென சிரித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+