ஓ.பன்னீர்செல்வத்தை துரத்தும் சொத்துக் குவிப்பு வழக்கு! மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் பின்னணி விவரம் வருமாறு;
கடந்த 2001 - 2006 அதிமுக ஆட்சி காலத்தில் சிறிது காலம் முதல்வராகவும், வருவாய் அமைச்சராகவும் பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம் மீது சொத்துக்குவிப்பு வழக்குப் பதியப்பட்டது. அதிமுக ஆட்சிக்காலத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்து தனது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா, சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாரி குவித்ததாக ஓபிஎஸ் மீது தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கு விசாரணை தேனியில் நடைபெற்றால் முறையாக இருக்காது எனக் கருதி சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆவணங்கள் இல்லை என்பதால் மேற்கொண்டு வழக்கை நடத்தவில்லை என்று கூறி புகாரை திரும்ப பெற்றுக்கொள்வதாக நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு எதிரான வழக்குகளில் இருந்து அனைவரையும் சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் விடுவித்து. இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மிரண்டு போய்விட்டார்.
இதனால் தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடைக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் ஓ.பன்னீர்செல்வம். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன், வழக்கின் தன்மை, தகுதியின் அடிப்படையிலேயே தனி நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் இந்த வழக்கை விசாரிப்பதாகவும் கூறியுள்ளது. இதனால் இதில் தலையிட விரும்பவில்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்டு அரசியல் எதிர்காலமே சூனியமாக உள்ள நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு உயர்நீதிமன்றத்தால் தூசு தட்டி எடுக்கப்பட்டுள்ள சொத்துக்குவிப்பு வழக்கு மேலும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுத்துள்ளது. பாஜகவும் தன்னை கண்டுகொள்ளவில்லை, வழக்கும் துரத்துகிறது என்பதால் ஓ.பன்னீர்செல்வம் அப்செட் மனநிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications