சொத்து கணக்கை காட்டுவாரா சங்கீதா விஜய்? தவெக தலைவர் மொத்த மதிப்பும் இவ்வளவா? திமுக மாஸ்டர் பிளான்
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு உச்ச நட்சத்திரம் அரசியல் கட்சி தொடங்குவது என்பது புதிய விஷயமல்ல.. ஆனால், நடிகர் விஜய் தனது தவெக மூலம் அடியெடுத்து வைத்துள்ள சூழல், மற்றவர்களை விட அவருக்கு கூடுதல் நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது., குறிப்பாக, தற்போது அவர் எதிர்கொண்டு வரும் குடும்ப ரீதியான சொத்து மதிப்பு சர்ச்சைகள் மற்றும் திமுக போன்ற ஒரு மாபெரும் அரசியல் கட்டமைப்பின் பலமான வேட்பாளர்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஆகிய 2 முட்டுக்கட்டைகள் விஜய்யின் அரசியல் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் மிகமுக்கிய காரணிகளாக உருவெடுத்துள்ளன.
விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான சொத்து மதிப்பு விவகாரங்கள் மற்றும் அது தொடர்பான யூகங்கள் பொதுவெளியில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளன..

சங்கீதா விஜய் சொத்து கணக்கு
ஒரு தலைவர் பொதுவாழ்விற்கு வரும்போது, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வெளிப்படைத்தன்மை மிக முக்கியமாகப் பார்க்கப்படும். குறிப்பாக, எதிர்த்தரப்பினர் இந்த குடும்ப ரீதியான சிக்கல்களையும், சொத்து விவகாரங்களையும் விஜய்யின் நேர்மைக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தக்கூடும்.
சங்கீதாவுடனான சொத்து பகிர்வு அல்லது அது தொடர்பான சட்ட சிக்கல்கள் ஒருவேளை உண்மையாக இருக்கும் பட்சத்தில், அது விஜய்யின் கவனத்தை அரசியலில் இருந்து திசைதிருப்பும் காரணியாக அமையும். இந்த சிக்கலை விஜய் எப்படி சமாளிக்க போகிறார் என்று தெரியவில்லை..
தவெக தலைவர் விஜய்
விஜய் முன் உள்ள ஆப்ஷன் என்றால், முதலில் தனது சொத்து விவரங்களை முழுமையாக வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். சட்ட ரீதியான தெளிவு மற்றும் குடும்ப உறுப்பினர்களுடனான சுமூகமான தீர்வு மட்டுமே இத்தகைய விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்..
ஒருவேளை இதை அவர் முறையாகக் கையாளத் தவறினால், எதிர்க்கட்சிகள் இதனை ஒரு தனிப்பட்ட பலவீனமாகச் சித்தரித்து, வாக்காளர்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த முயல்வார்கள்.
அடுத்ததாக, விஜய்க்கு முன்னால் இருக்கும் இன்னொரு மிகப்பெரிய சவால் திமுகவின் தேர்தல் வியூகம் மற்றும் அதன் பலமான வேட்பாளர்கள்தான்.. அரை நூற்றாண்டு கால அரசியல் அனுபவம் கொண்ட திமுக, ஒவ்வொரு தொகுதியிலும் ஆழமான வேர்களை கொண்டுள்ளது.
திமுகவின் விஸ்வரூபம்
பணபலம், அதிகார பலம் மற்றும் பலமான வாக்கு வங்கி கொண்ட திமுக வேட்பாளர்களை, அரசியலுக்குப் புதியவரான விஜய் எப்படி எதிர்கொள்வார் என்பது மில்லியன் டாலர் கேள்விதான்..
திமுகவின் பூத் லெவல் நிர்வாகத்தை முறியடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல.. . இந்த முட்டுக்கட்டையைத் தாண்ட வேண்டுமானால், விஜய் வெறும் நட்சத்திர அந்தஸ்தை மட்டும் நம்பியிருக்க முடியாது. அவர் ஒவ்வொரு தொகுதியிலும் அந்தந்த பகுதி மக்களுடன் நெருங்கிய தொடர்புடைய, அதே சமயம் ஊழல் கறை படியாத புதிய முகங்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும்.
இந்த சவால்களை விஜய் சமாளிக்காவிட்டால் என்ன நடக்கும் என்பதை அலசிப் பார்த்தால், அது அவரது அரசியல் வாழ்வின் ஆரம்பத்திலேயே ஒரு பின்னடைவை தந்துவிடும்.. முக்கியமாக திமுகவின் பலமான வேட்பாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போனால், தவெக ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகளை பிரிக்கும் கட்சியாக மட்டுமே சுருங்கிவிடும்.
தூக்கத்தை கெடுத்த 2 விஷயம்
அதேபோல், குடும்ப சொத்து சிக்கல்களை தெளிவுபடுத்தாவிட்டால், நடுத்தர வர்க்க வாக்காளர்கள் மத்தியில் அவர் மீதான நம்பகத்தன்மை குறையக்கூடும். ஒருவேளை தேர்தல் முடிவுகள் சாதகமாக அமையாவிட்டால், கட்சியை தொடர்ந்து நடத்துவதில் தொண்டர்கள் மத்தியில் சோர்வு ஏற்படும் அபாயம் உள்ளதையும் இங்கு நாம் குறிப்பிட வேண்டிள்ளது.
எனவே, விஜய் இந்த நெருக்கடிகளை தனது முதிர்ச்சியான அணுகுமுறையால் கையாள வேண்டும். குடும்ப சிக்கல்களை, கமுக்கமாகவும், சுமூகமாகவும் முடித்துவிட்டு, அரசியல் களத்தில் திமுகவின் வியூகத்திற்கு இணையாக கிராமப்புறங்களில் தனது கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் விஜய்க்கு உள்ளது..
அனைத்தையும் விட முக்கியமாக, மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான தீர்வுகளைத் தனது கொள்கையாக முன்வைப்பதன் மூலமே, அவர் இந்த அரசியல் களத்தில் ஒரு கிங் மேக்கராகவோ அல்லது வெற்றியாளராகவோ உருவெடுக்க முடியும்...!!
-
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான்












Click it and Unblock the Notifications