கனடா பெண்ணிடம் சென்னையில் நிர்வாண பூஜை.. அத்துமீறிய கிளி ஜோதிடர்.. தட்டி தூக்கிய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் கனடா பெண்ணிடம் தோஷம் கழிப்பதாகக் கூறி நிர்வாண பூஜை நடத்தி, அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கிளி ஜோதிடர் இசக்கி முத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவர் வேறு எதாவது பெண்ணை இதுபோல ஏமாற்றி பணம் பறித்துள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த காலத்தில் ஆன்மீகத்தில் நிஜமாகவே ஈடுபடு கொண்டு மக்களுக்கு ஜோதிடம் உள்ளிட்டவற்றில் உதவும் சிலர் இருக்கவே செய்கிறார்கள். இருப்பினும், பலர் அதை வைத்து ஏமாற்றவும் பணம் பறிக்கவுமே முயல்கிறார்கள். அப்படியொரு சம்பவம் தான் இப்போதும் நடந்துள்ளது. ஜோதிடம் பார்ப்பதாக சொல்லி, நிர்வாண பூஜை நடத்தி பணத்தை ஏமாற்றிய ஒருவர், இப்போது கம்பி எண்ணுகிறார்.

parrot astrologer

கனடா பெண்

கனடா குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழரான 37 வயது பெண், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார். சென்னையில் தங்கியிருந்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் சுமார் 10 நாட்களுக்கு முன்பு பெசன்ட் நகர் கடற்கரையில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இசக்கி முத்து என்ற கிளி ஜோதிடரை சந்தித்து ஜோதிடம் பார்த்துள்ளார். அப்போது அவர் பெண்ணின் வாழ்க்கை குறித்து பல்வேறு தகவல்களை சரியாக கூறியுள்ளார். விவகாரத்து, தாய்க்கு கேன்சர் இருப்பது என பல விஷயங்க் குறித்து சரியாக சொல்லியிருக்கிறார். இதனை நம்பிய அந்த பெண், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மேலும் புகழ் பெற வேண்டும் என ஜோதிடரிடம் கேட்டுள்ளார்.

நிர்வாண பூஜை

அப்போது இசக்கி முத்து, தான் கூறியபடி நிர்வாண பூஜை செய்தால் புகழ் பெற முடியும் என்று கூறியுள்ளார். இருப்பினும், நிர்வாண பூஜை என்பதால் அந்த பெண் தயங்கியுள்ளார். இதையடுத்து வீடியோ கால் மூலமாகவே பூஜையை செய்யலாம் என்று இசக்கி முத்து கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அந்தப் பெண்ணும் அவர் கூறியபடி பூஜைக்கு தயாராகியுள்ளார்.

ஜோதிடர் கூறிய பொருட்களை வாங்கி வைத்து, ஆடைகளை களைந்து நிர்வாணமாக வீடியோ காலில் தோன்றியுள்ளார். பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்தபடி இசக்கி முத்து அந்த பூஜையை நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் அந்தப் பெண்ணிடம் ரூ.20 ஆயிரம் பெற்றுள்ளார். பின்னர் சில நாட்கள் கழித்து அந்த பெண்ணை தொலைப்பேசியில் தொடர்புகொண்ட இசக்கி முத்து, நிர்வாண வீடியோவை செல்போனில் பதிவு செய்து வைத்திருப்பதாகவும், அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் இருக்க கூடுதல் பணம் தர வேண்டும் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

அதிர்ச்சி

இதனால் அந்த பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். இருப்பினும், கூடுதலாக பணத்தை கொடுத்து ஏமாறாமல், உடனடியாக மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பெண்ணை ஏமாற்றி நிர்வாண பூஜை நடத்திய ஜோதிடர் யார் என்பது குறித்து செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், அவர் குற்றாலம் பகுதியை சேர்ந்த இசக்கி முத்து என்பது தெரியவந்தது.

இதையடுத்து குற்றாலத்தில் பதுங்கியிருந்த அவரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். இசக்கி முத்து இதுபோன்று வேறு பெண்களையும் மிரட்டி வீடியோ எடுத்துள்ளாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+