40 ஆண்டுக்கு விஜய்தான் முதல்வர்! இதெல்லாம் 2000 வருஷத்திற்கு ஒரு வாட்டிதான்! சொல்வது யார்னு பாருங்க
சென்னை: அடுத்த 40 ஆண்டுகளுக்கும் விஜய்தான் என அவரது ஆஸ்தான ஜோதிடர் ராதன் பண்டிட் தெரிவித்துள்ளார். இது போல் ஒரு நல்ல தலைவர் 2000 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் வருவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: அரசியல் புயல் தற்போது தொடங்கியுள்ளது. 2000 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் அரசியலில் நல்ல தலைவர்கள் வருவார்கள். அப்படிதான் இப்போது விஜய் வந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக நாம் இந்த காலத்தில் பிறந்துள்ளோம்.

ராஜராஜ சோழன், சேரன் செங்குட்டுவன், அசோக சக்கரவர்த்தி ஆட்சியை பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் எங்கள் விஜய் சக்கரவர்த்தியின் ஆட்சியை பார்ப்பீர்கள். பொறுத்திருந்து பாருங்கள்.
குறைந்தபட்சம் அடுத்த 40 ஆண்டுகளுக்கு விஜய்தான் முதல்வர். இவ்வாறு ராதன் பண்டிட் தெரிவித்துள்ளது எந்த அளவுக்கு சாத்தியம் என தெரியவில்லை.
ராதன் பண்டிட், விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் மட்டுமல்லாமல், தவெகவின் செய்தி தொடர்பாளராகவும் இருந்து வருகிறார்.
விஜய் 150 -க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வார் என்றும் வாக்கு எண்ணிக்கையின் போது காலை 9.15 மணிக்கெல்லாம் தவெக முன்னணியில் இருப்பது தெரியவரும் என்றும் தெரிவித்திருந்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான விஜய் குறித்து கணிப்புகளை வெளியிட்டு வரும் ஜோதிடர் ராதன் பண்டிட் (Radhan Pandit), தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்படுபவராக உள்ளார். அவரைப் பற்றிய முக்கிய தகவல்களை பார்க்கலாம்.
யார் இந்த ராதன் பண்டிட்?
இவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஜோதிடம், எண் கணிதம் (Numerology) மற்றும் தியானம் ஆகியவற்றில் அனுபவம் பெற்றவர்.
ஆரம்பத்தில் பண்டிட் வெற்றிவேல் என்று அழைக்கப்பட்ட இவர், 2008-ல் டெல்லிக்கு இடம்பெயர்ந்த பிறகு தனது பெயரை ராதன் பண்டிட் என மாற்றிக் கொண்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மீக ஆலோசகராகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. 1991-ல் ஜெயலலிதாவின் வெற்றியை இவர் துல்லியமாகக் கணித்தவர்.
விஜய் குறித்த முக்கிய கணிப்புகள்: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் சூழலில், விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்து இவர் வழங்கிய கணிப்புகள் வைரலாகி வருகின்றன:
சுனாமி ஜாதகம்: விஜய்யின் ஜாதகம் மிகவும் வலிமையானது என்றும், அது தமிழக அரசியலில் ஒரு "சுனாமி" போன்ற மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் இவர் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றி கணிப்பு: 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 140 முதல் 170 இடங்களைப் பிடித்து ஆட்சி அமைக்கும் என்றும், விஜய் முதலமைச்சராவார் என்றும் இவர் கணித்துள்ளார்.
பெயர்ப் பொருத்தம்: 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியின் பெயர் விஜய்யின் பிறந்த தேதி மற்றும் எண் கணிதத்திற்கு மிகத் துல்லியமாகப் பொருந்துவதாக இவர் கூறுகிறார்.
ஆன்மீகப் பயணம்: விஜய் ஒரு தீவிரமான முருக பக்தர் என்றும், அவரது ஆட்சியில் தமிழகக் கோயில்கள் உலகத் தரத்திற்கு உயர்த்தப்படும் என்றும் இவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications