தலைமைச் செயலகத்தில் ஜோதிடருக்கு தடை? ரிக்கி ராதன் பண்டிட்டிற்கு நோ சொன்ன விஜய்? பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியல் களத்தில் திடீரென உச்சத்திற்கு செல்வதும், அடுத்த கணமே சத்தமில்லாமல் கீழே விழுவதும் புதிய விஷயம் அல்ல. ஆனால், தமிழ்நாடு தலைமைச் செயலக வட்டாரத்தில் பிரபல ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலின் திடீர் வெளியேற்றம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு மாதங்களாக தவெக அரசின் அதிகார மையத்தின் முக்கியப் புள்ளியாக வலம் வந்த இவர், தற்போது தலைமைச் செயலகத்திற்குள் நுழையவே தடை விதிக்கப்படும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது.

tvk

அதிகார மையத்தில் திடீர் வருகை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட பல முக்கிய அரசியல் தலைவர்களுக்கு ஜோதிட ஆலோசனைகளை வழங்கியதாகக் கூறி அரசியல் வட்டாரத்தில் அறிமுகமானவர் ராதன் பண்டிட். முக்கிய அரசியல் நிகழ்வுகள் மற்றும் மாற்றங்கள் குறித்து இவர் வெளியிட்ட கணிப்புகள் மூலம் அரசியல் பிரபலங்களின் கவனத்தை ஈர்த்தார். கடந்த தேர்தலுக்கு முன் விஜய்க்கு நெருக்கமாகி தவெக கட்சியில் முக்கிய அங்கமாக மாறினார்.

அந்த அளவிற்கு விஜய் நெருக்கம் என்றால் விஜய் வைக்கும் பொட்டு தொடங்கி அவர் வெள்ளிக்கிழமை அணியும் உடை வரை இந்த ஜோசியர் சொல்லியே நடந்தது. அதன் தொடர்ச்சியாக, முதல்வர் விஜய்யின் தனி அதிகாரியாகவும் (OSD), ஆலோசகராகவும் அவர் நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் மூத்த அரசு அதிகாரிகள் மத்தியிலும், அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிர்வாகப் பணிகளில் ஒரு ஜோதிடருக்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவம் கொடுப்பது சரியா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

கொள்கை முடிவுகளை எடுக்கும் இடத்தில் துறை சார்ந்த வல்லுநர்களும், அனுபவம் வாய்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளும் மட்டுமே இருக்க வேண்டும்.. அங்கு ஜோதிட ரீதியான ஆலோசனைகளுக்கு இடமில்லை என்ற கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

அறநிலையத்துறைக்கு மாற்றம்

எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனங்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தைத் தவிர்க்கும் வகையில் விஜய் அரசு ஒரு முடிவை எடுத்தது. அதன்படி, முதல்வர் அலுவலகத்தின் நேரடிப் பொறுப்பிலிருந்து ராதன் பண்டிட் விடுவிக்கப்பட்டார். ஆனால், முழுமையாக வெளியேற்றப்படாமல், இந்து சமய அறநிலையத்துறையின் சிறப்பு அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டார்.

கோவில்கள், ஆன்மிகம் சார்ந்த பணிகளில் இவரது அனுபவம் உதவும் என்பதால், அங்கு பெரிய அளவில் அரசியல் சர்ச்சை எழாது என்று கருதப்பட்டது. சில காலம் இந்த வியூகம் பலனளித்தது போலத் தெரிந்தது. அவரும் ஊடக வெளிச்சத்திலிருந்து விலகி, தனது பொறுப்பை அமைதியாகக் கவனித்து வந்தார்.

எல்லை மீறிய தலையீடுகள்

ஆனால், இந்த அமைதி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அறநிலையத்துறைக்குள் ராதன் பண்டிட்டின் செயல்பாடுகள் பல சர்ச்சைகளை உருவாக்கின. துறை சார்ந்த தினசரி நிர்வாக விவகாரங்கள் மற்றும் முக்கிய கோவில் விவகாரங்களில் அவர் தேவையின்றி தலையிடத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, அரசு விதிகளையும் நடைமுறைகளையும் மீறி சில முடிவுகளை எடுப்பதற்காக, முதலமைச்சரின் நேரடி ஆதரவு எனக்கு இருக்கிறது என்று கூறி அதிகாரிகளை வற்புறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகின. நிர்வாக நடைமுறையில் விஜய்யின் பெயரை அடிக்கடி பயன்படுத்தி அதிகாரத்தை செலுத்த முயற்சிப்பது மிகவும் தீவிரமான விதிமீறலாகும். இதனால் துறையின் மூத்த அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதுதொடர்பான முறையான புகார்கள் தலைமைச் செயலகத்தின் உயர் மட்டத்திற்கு சென்றன.

கறாரான நடவடிக்கை

விவகாரம் முற்றியதை உணர்ந்த விஜய் தரப்பு, உடனடியாகத் தீர்க்கமான நடவடிக்கை எடுத்தது. இந்து சமய அறநிலையத்துறையில் அவர் வகித்து வந்த சிறப்பு அதிகாரி பதவி உடனடியாக ரத்து செய்யப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், தலைமைச் செயலக வளாகம் மற்றும் முக்கிய அரசுத் துறை அலுவலகங்களுக்குள் அவர் இனி நுழையக் கூடாது என பாதுகாப்புப் பிரிவினருக்கு திட்டவட்டமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. . இதன் மூலம் அரசுக்கும் அவருக்கும் இருந்த அனைத்து தொடர்புகளும் அதிகாரப்பூர்வமாகத் துண்டிக்கப்பட்டன.

அரசியல் தலைவர்களுக்கு தனிப்பட்ட முறையில் வழிகாட்டுபவர்கள் பலர் இருக்கலாம். ஆனால், தனிப்பட்ட நம்பிக்கைகளை நிர்வாக அதிகாரத்தோடு கலக்கும்போது இதுபோன்ற வீழ்ச்சிகள் தவிர்க்க முடியாததாகி விடுகின்றன. கோட்டையில் நீடிக்கும் செல்வாக்கை எதிர்பார்த்து களம் இறங்கிய ஜோதிடர் ராதன் பண்டிட்டின் நட்சத்திரங்கள், இப்போது அவருக்கு சாதகமாக இல்லை என்பதையே இந்த நடவடிக்கை உணர்த்துகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+