விஜய், உதயநிதி ஜாதகத்தில் உள்ள ஒற்றுமை.. தேர்தல் முடிவுகள் ஜோதிடர் ஷெல்வீ கணிப்பு
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. மே 4 ஆம் தேதி முடிவுகள் வெளியாகவுள்ளன. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் பலத்துடன் நிற்கிறார்கள். வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் இன்று மாலை வெளியாகவுள்ளன. இந்த தேர்தலில் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய், உதயநிதி, அண்ணாமலை ஜாதகங்களை அலசி யாருக்கு சாதகமாக இருக்கும் என்று பிரபல ஜோதிடர் ஷெல்வீ கூறியுள்ளார்.
ஜோதிடர் ஷெல்வீ கூறுகையில், "குரு பெயர்ச்சி, குரு அதிசார பெயர்ச்சி, மாத கிரக பெயர்ச்சிகள் எல்லா நிலைகளும் அவசியம். இந்த தேர்தலில் கூட்டணி பலம் தான் முக்கியமானது. தேர்தலில் முதலாவதாக கூட்டணி அமைத்து களமிறங்குபவர்களுக்கு முன்னிலை உண்டு. கடைசியாக பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தவர்களுக்கு சிரமம். விஜய் வருகை இந்த தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

விஜய் பவர்புல்
விஜய் மற்றும் அண்ணாமலை கடக ராசியைச் சேர்ந்தவர்கள். எடப்பாடி பழனிசாமி கன்னி ராசிக்காரர். ஸ்டாலின் சிம்ம ராசிக்காரர். உதயநிதி ரிஷபம் ராசியைச் சேர்ந்தவர். நயினார் நாகேந்திரனுக்கான அமைப்புகளும் நன்றாக இருக்கிறது. தனிப்பட்ட ஜாதகத்தில் விஜய்யின் ஜாதகம் தான் பவர்புல்லாக உள்ளது. ஆனால் உடன் இருப்போர் ஒத்துழைப்பு கொடுத்து கொண்டு செல்ல போகிறார்கள் என்பது சந்தேகம்.
உதயநிதிக்கு கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ராகு புத்தி மாறி குரு புத்தி நடக்கிறது. இது அவருக்கு வலிமையை கொடுக்கும். அது ஸ்டாலினுக்கும் பெரிய பலம். வருகிற குருபெயர்ச்சிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு குரு பலத்தை கொடுப்பார். அது மே மாதத்திற்கு பிறகு தான். 10 ஆம் இடத்தில் உள்ள குரு பதவியை கெடுக்க பார்ப்பார். அதற்கேற்ப வகையில் அவர் செயல்பட வேண்டும்.
உதய்க்கு ராசி
கிரகங்களுக்கு ஏற்ப திட்டமிட்டு செயல்பட வேண்டும். நயினார் நாகேந்திரன் ஜாதகம் நின்று நிதானமாக முடிவு செய்து செயல்படக்கூடியவர். அதிமுக - பாஜக கூட்டணி அமைத்திருந்தாலும், திமுக கூட்டணிக்கு அசுர பலத்துடன் இருக்கிறது. பாஜகவின் அமைப்புகள் இந்தமுறை அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும்.
விஜய் பிரிக்க போகும் வாக்குகள் தான் இந்த தேர்தலில் திருப்பமாக இருக்கும். இந்த தேர்தலில் சீமான் பழையபடி வாக்கு வாங்குவது சந்தேகம். புரட்டாசியில் இருந்து விஜய்க்கு நல்ல காலம் தொடங்கிவிட்டது. நீட்சபங்க ராஜயோகம் இருக்கும் ஜாதகத்தை குறைத்து எடை போட முடியாது. விஜய் - உதயநிதி இருவருக்கும் அந்த யோகம் உள்ளது. விஜய்க்கு ராகு புத்தியும் பலம். அதை அவர் எப்படி பயன்படுத்தியுள்ளார் என்பதை பார்க்க வேண்டும்." என்றார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
ஜூன் 15-ல் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வருமா? விஜய் போட்ட பிளான்.. பலருக்கும் போன மெசேஜ் உண்மையா? -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. ஜூன் 15ல் நீதிமன்றத்தில் விசாரணை.. அடுத்தது என்ன? -
யாரு ஹீரோ? விஜய் Vs உதய்! பட்ஜெட் கூட்டத்தில் பட்டைய கிளப்புவது யார்? பரபரப்பாய் ரெடியாகும் லிஸ்ட்! -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு.. ஸ்டாலின் வைத்த டார்கெட்டை உயர்த்திய விஜய்.. மோடியிடம் சொன்னது என்ன? -
ஜான் ஆரோக்கியசாமியின் டெல்லி லாபி.. திமுகவுக்கு தூதுவிட்ட சுனில்.. சபரீசனுக்கு வந்துச்சே கோபம்












Click it and Unblock the Notifications