"நாம எப்போ தனியா இருந்துருக்கோம்?".. மலேசியாவில் சூசகமாக அரசியல் பேசிய விஜய்!
கோலாலம்பூர்: தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தனது அரசியல் நடவடிக்கைகள் பற்றி சூசகமாகப் பேசியுள்ளார்.
இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் 69வது படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களை தவிர மமிதா பைஜூ, நரேன், பிரியாமணி, பாபி தியோல் பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ரெபா மோனிகா ஜான் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

ஜனநாயகன் படம் பொங்கல் வெளியீடாக 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் கடைசி படம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் அவர் அரசியல் வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட உள்ளார். இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்காக விஜய், அவரது பெற்றோர், நடிகர்கள் நாசர், இயக்குநர்கள் அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் உள்ளிட்ட பலரும் மலேசியா சென்றனர். விஜய்யின் கடைசி சினிமா நிகழ்ச்சி என்பதால் அவர் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்நிலையில், இந்த இசை வெளியீட்டு விழாவின் இறுதியில் விஜய் பேசினார்.
இலங்கைக்குப் பிறகு, மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் உள்ளனர். இங்கு படமாக்கப்பட்ட சில தமிழ் படங்களை நான் நினைவு கூர விரும்புகிறேன். நம்ம நண்பர் அஜித் நடித்த பில்லா படமும் இங்க தான் எடுத்தாங்க, என்னுடைய காவலன், குருவி போன்ற எனது படங்களும் இங்குதான் எடுக்கப்பட்டது.
நான் சினிமாவுக்குள் நுழைந்தபோது, இந்தத் துறையில் ஒரு சிறிய மணல் வீடு கட்ட வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தது. ஆனால் நீங்கள் அனைவரும் எனக்கு ஒரு அரண்மனையைக் கொடுத்திருக்கிறீர்கள். என்னோட திரை வாழ்க்கையில் முதல் நாள்ல இருந்து பல விதமான விமர்சனங்கள சந்திச்சுட்டு வரேன். 33 வருஷம் தொடர்ந்து ஆதரவு தரது சாதாரண விஷயம் இல்ல.
ஆனா, என்னோட ரசிகர்கள் அதை எனக்கு தந்துருக்காங்க. அதற்கு வெறும் நன்றினு மட்டும் சொல்லாமா, நன்றி கடன் செலுத்தும் விதமாக அவங்களுக்காக நிக்குறேன். எனக்காக எல்லாத்தையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவையே விட்டுக் கொடுக்குறேன்.
எச்.வினோத் எப்போதுமே சமூக பொறுப்போட படம் எடுக்குற இயக்குனர். நாங்க ரொம்ப முன்னாடிய படம் பண்ண வேண்டியது. இப்ப சேர்ந்து இருக்குறது சந்தோஷம். பொதுவாக, சிறந்த கெமிஸ்ட்ரி ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் இடையேதான் இருக்கும். ஆனால் எனக்கு, அது கில்லி காலத்திலிருந்தே பிரகாஷ் ராஜ் சாருடன் எப்போதும் இருந்து வருகிறது. நன்றி, பிரகாஷ்ராஜ் சார்.
வலுவானவங்களை தானே எதிர்த்தா தானே, நாம ஜெயிக்கிற அளவுக்கு வலிமையா இருக்கோம்னு அர்த்தம். இப்போ ரீசென்டா நம்மள பத்தி ஒரு பேச்சு ஓடிட்டு இருக்கு. விஜய் தனியா வருவார, அணியா வருவாரானு கேக்குறங்க.. நாம எப்போ தனியா இருந்துருக்கோம்.. 33 வருஷமா மக்களான உங்களோட மிகப்பெரிய அணியோட தானே இருக்கேன்.
என்னடா இப்போ கூட சஸ்பென்ஸ் வைக்குறாரேனு தோணும். சஸ்பென்ஸ் இருந்தா தானே கிக் இருக்கும். இதெல்லாம் கைதட்டல் வாங்கனும்னு பேசல. மனசுல இருக்குறத பேசுறேன். மக்களுக்காக பேசுறேன். மக்களுக்காக பேசுறதோட நிறுத்தாம அவங்களுக்காக செய்யனும். அதைவிட முக்கியம் செய்யுறத தான் சொல்லனும்.. 2026.. History repeats itself.. Lets be prepared to embrace it for the people.. Thank You.." எனத் தெரிவித்தார் விஜய்.
-
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
2026 தேர்தலில் புதிய சக்திகள்! 5 முனை போட்டிக்கு வழிவகுத்த ஜூனியர்ஸ்! யாருக்கு சாதகம்? பாதகம்? -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா!












Click it and Unblock the Notifications