Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷாக்! வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் விபத்துகள்.. தமிழகத்தில் வெறும் 15 நாட்களில் 38 பேர் உயிரிழப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 15 நாட்களில் மட்டும் மாநிலத்தில் மொத்தம் 38 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளைப் போல இல்லாமல் இந்த ஆண்டு மழைக்காலம் தொடங்கியது முதலே நல்ல மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, கடந்த அக். 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உட்பட வடதமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை

கனமழையால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. அதேபோல சில பகுதிகளில் மரங்களும் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டன. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தும், மரம் விழுந்தும் ஏற்படும் விபத்துகளும் ஆங்காங்கே ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

38 பேர் பலி

38 பேர் பலி

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல், கடந்த 15 நாட்களில் மட்டும் மாநிலத்தில் கனமழை தொடர்பான அசம்பாவித சம்பவங்களால் மொத்தம் 38 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2 வாரங்களில் மின்னல் தாக்கி 12 பேரும் சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர். அதேபோல மழை வெள்ளம் காரணமாக 10 பேரும் மரம் விழுந்து ஏற்பட்ட விபத்தில் மூவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

சென்னையில் தான் அதிகம்

சென்னையில் தான் அதிகம்

மாவட்ட வாரியாக பார்க்கும் போது தலைநகர் சென்னையில் 5 போர் மழை வெள்ளம் சார்ந்த நிகழ்வுகளால் உயிரிழந்துள்ளனர். மேலும் மதுரை மற்றும் தேனி மாவட்டத்தில் தலா 4 பேர் பலியாகியுள்ளனர். அதேபோல மழை வெள்ள பாதிப்புகளால் அரியலூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை அரசு சார்பில் நிதியுதவி எதுவும் அறிவிக்கப்படவில்லை.

Recommended Video

    உயிருக்கு போராடிய இளைஞரை தோளில் சுமந்து சென்ற பெண் Inspector Rajeshwari
    கனமழை தொடரும்

    கனமழை தொடரும்

    வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று மாலை ஸ்ரீஹரி கோட்டாவுக்கும், காரைக்காலுக்கும் இடையே இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வடதமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+