குடும்பத்துடன் காஞ்சிபுரம் வருகிறார் குடியரசுத் தலைவர்... அத்தி வரதரை தரிசனம் செய்கிறார்
சென்னை: காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசனம் செய்ய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாளை குடும்பத்துடன் சென்னை வருகிறார்.
இதற்காக பிற்பகல் 2.10 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வருகிறார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் விமான நிலையத்தில் இருந்து தனி ஹெலிகாப்டரில் காஞ்சிபுரம் புறப்பட்டு செல்கிறார்.

அங்கு அத்திவரதரை தரிசனம் செய்கிறார். அதன்பிறகு ஹெலிகாப்டரில் மீண்டும் மாலை 5 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமானநிலையம் வருகிறார். அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று தங்குகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், சனிக்கிழமை மாலை 4.35 மணிக்கு தனி விமானத்தில் ஆந்திர மாநிலம் ரேனிகுண்டா விமான நிலையத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து காரில், திருப்பதி திருமலை கோவிலுக்கு செல்கிறார். அன்று இரவு மலை கோவிலில் தங்குகிறார்.
ஞாயிற்றுக்கிழமை காலை திருமலை வெங்கடேஸ்வரரை தரிசனம் செய்கிறார். அன்று மாலை திருமலையில் நடைபெறும் ஆர்ஜித சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதன்பிறகு 15 -ந்தேதி தனது குடும்பத்தினருடன் ரேனிகுண்டா விமான நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications