முதல்வர் விஜய் குறித்த கேள்விக்கு! Atlee-யின் ரியாக்ஷனை பாருங்க! ஒரு வேளை புஸ்ஸி சொன்ன இயக்குநர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை விமான நிலையத்தில் அரசியல் குறித்த கேள்வி இயக்குனர் அட்லீயின் ரியாக்ஷன் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். முதல்வர் விஜய்யை அட்லீ அண்ணா என சொல்லும் அளவுக்கு அவர்களுக்கிடையே பழக்கம் உள்ளது.

சென்னை விமான நிலையத்திற்கு வந்த பிரபல திரைப்பட இயக்குனர் அட்லீயிடம், தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் ஆட்சி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

Atlee TVK government

"விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் ஆட்சி எப்படி இருக்கிறது?" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு அட்லீ நேரடியாக எந்த பதிலும் அளிக்காமல் புன்னகையுடன் கடந்து சென்றார்.

தொடர்ந்து, அரசியல் தொடர்பான கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பியபோதும், அதற்கு பதிலளிக்காமல் புன்னகையுடன் இருந்த அட்லீ, பின்னர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் ஆட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், இயக்குனர் அட்லீ பதில் அளிக்காமல் புன்னகையுடன் சென்ற சம்பவம் சென்னை விமான நிலையத்தில் கவனம் பெற்றது.

இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், அட்லீ, நெல்சன் உள்ளிட்டோருடன் விஜய்க்கு நல்ல நட்புள்ளது. இவர்களை விஜய் உரிமையுடன் தம்பி என குறிப்பிட்டு, "வாடா போடா" என அழைத்து பேசும் அளவுக்கு உரிமை உள்ளது.

முதல்வராவதற்கு முன்பு லண்டனில் தனது மகளின் பட்டமளிப்பு விழாவுக்குக் கூட போகாமல், மும்பையில் அட்லி மனைவி வளைகாப்பு நிகழ்ச்சிக்கு பிளைட் பிடித்து விஜய் போனது பெரும் விமர்சனத்திற்குள்ளானது. மலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த லோகேஷ் கனகராஜ், அட்லீ, நெல்சன் உள்ளிட்டோரை விஜய் கட்டி அணைத்து தனது பிரியத்தை காட்டினார்.

தமிழக சட்டசபையில் நடந்த மானிய கோரிக்கையின் போது அமைச்சர் ஆனந்த் கூறியதாவது: விஜய்யின் படத்தை இயக்கிய பிரபல இயக்குநர் ஒருவர் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது ஒரு குறிப்பிட்ட ஒரு தொகுதியில் போட்டியிட தனக்கு சீட் கேட்டார்.

ஆனால் முதல்வர் விஜய்யோ, அந்த தொகுதியில் தவெக மாவட்டச் செயலாளர் நீண்ட காலமாக உழைத்திருக்கிறார். எனவே அவருக்கே கொடுக்க போகிறேன், மன்னிக்கவும் என கூறிவிட்டார் என ஆனந்த் தெரிவித்திருந்தார்.

அந்த நாள் முதல், விஜய் மறுத்த இயக்குநர்கள் யார் என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து லோகேஷ் கனகராஜிடம், அந்த இயக்குநர் நீங்களா என கேட்டதற்கு "நான் இல்லை" என பதிலளித்து சென்றார். அந்த வகையில் அந்த இயக்குநர் அட்லியா என்ற கேள்வி எழுந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+