ஏடிஎம் கார்டு இனி செல்லாதா? கிரெடிட் கார்டு இருக்கா? உடனே இதை முடிங்க.. வங்கி வெளியிட்ட அறிவிப்பு
சென்னை: நீங்க கிரெடிட் கார்டு, ஏடிஎம் கார்டு பயன்படுத்துகிறீர்களா? பேங்க் ஆஃப் இந்தியா (BOI) வங்கி, ஒரு முக்கியமான அறிவிப்பை தன்னுடைய கஸ்டமர்களுக்கு வெளியிட்டுள்ளது.
பணபரிவர்த்தனை என்பதெல்லாம் இப்போது ரொம்ப ஈஸியாகிவிட்டது.. கையில் நாம் பணமே வைத்திருக்க தேவையில்லை.. இதற்கு உதவக்கூடிய ஒரு வழிவகைதான், கிரெடிட் கார்டு.. இந்த கிரெடிட் கார்டு வைத்திருப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? உங்கள் பட்ஜெட்டுக்கு மேல் நீங்கள் கொள்முதல் செய்யமுடியும்..

அதே நேரத்தில் மாதாந்திர அடிப்படையில் முழு/பகுதி பணத்தை திருப்பி செலுத்தவும் முடியும்.. பணம் கடன் வாங்க மற்றும் அதைத் தவணைகளில் திருப்பி செலுத்த (தேவைப்பட்டால்) அனுமதிக்கும் ஒரு வசதியாகும்.. கையில் அதிகம் பணம் வைத்து இருக்க வேண்டிய அவசியமில்லை.. இதற்காக தரப்படும் கடனட்டைதான் இது.
சீக்ரெட் நம்பர்: இந்த கார்டினை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்... கடனட்டையின் பின்புறம் CVV (Card Verification Value) எண் இருக்கும். இந்த நம்பரை யாரிடமும் சொல்லக்கூடாது.. நண்பர்களுக்கும் கொடுக்கக்கூடாது இந்த கிரெடிட் கார்டு சமீபகாலமாகவே பிரபலமாகி வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன..
உங்கள் வங்கியில் போதுமான இருப்பு இல்லாவிட்டாலும்கூட, கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்.. இது ஒரு வகையான கடன் ஆகும்... ஆனால், இதை நீங்கள் பின்னாளில் கட்டாயம் திருப்பி செலுத்த வேண்டும்.. இதற்கான சலுகை காலமும் உண்டு.. சலுகை காலத்தில் செலவழித்த தொகையை நீங்கள் திருப்பி செலுத்தினால், அந்த தொகைக்கு வங்கி உங்களிடம் எந்த வட்டியையும் வசூலிக்காது...
எப்படி பயன்படுத்துவது: ஷாப்பிங் செய்தாலும்கூட, நிறைய சலுகைகள், வெகுமதிகள், தள்ளுபடிகள் இந்த கிரெடிட் கார்டு மூலம் கிடைக்கின்றன. கிரெடிட் கார்டில் இருந்து பணத்தை எடுக்கலாம், ஆனால், அதற்கும் ஒரு லிமிட் உள்ளது..
கிரெடிட் கார்டு பில்லை செலுத்தாமல் தவறவிடுவதும் மோசமான விளைவை தந்துவிடும்.. தாமதமாக கட்டணங்களை செலுத்துவதால், வட்டி விகிதமும் அதிகரித்துவிடும். அத்துடன், கிரெடிட் ஸ்கோர் எதிர்மறையாக பாதிக்கப்படலாம்... எனவே, அதிக சுமை இருந்தால் கிரெடிட் கார்டை பயன்படுத்தாமல், முதலில் உங்கள் நிலுவை தொகையை செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
கிரெடிட் கார்டு: இதெல்லாம் கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கான அடிப்படை விஷயங்களாகும்.. இந்நிலையில், பேங்க் ஆப் இந்தியா, திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. அதாவது, வங்கிக்கு நேரடியாக சென்று செல்போன் நம்பரை பதிவு செய்யாவிட்டால், வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு, ஏடிஎம் கார்டுகள் நவம்பர் 1 ம் தேதியில் இருந்து செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அக்டோபர் 31ம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் கட்டாயமாக உங்கள் வங்கி கிளைக்கு சென்று மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறது.
எப்படி பதிவு செய்வது: வங்கிகள் தொடர்பான அனைத்து சேவைகளையும் வாடிக்கையாளர்கள் பெற விரும்பினால், கட்டாயமாக செல்போன் நம்பரை பதிவு செய்திருக்க வேண்டும். வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை ஆன்லைனில் அல்லது ஏடிஎம் மூலமாக மாற்ற முடியாவிட்டால், கிளைக்கு சென்று நேரடியாகவே மாற்றலாம்.
இதற்காக, வங்கி கிளைக்கு சென்று, மொபைல் எண்ணை மாற்றுவதற்கான படிவத்தை நிரப்பி, அங்கு கேட்கப்பட்ட தகவல்களைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அத்துடன், பாஸ்புக் மற்றும் ஆதார் கார்டு நகலையும் சமர்ப்பிக்க வேண்டும். அக்டோபர் 31ம் தேதிக்குள் இதை செய்ய தவறினால், மறுநாளே நவம்பர் 1லிருந்து உங்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாது.எந்த பணப்பரிவர்த்தனையும் செய்ய முடியாது.












Click it and Unblock the Notifications