ஏடிஎம்மில் பணம் மாட்டிக்கிட்டா என்ன செய்வது? ஏடிஎம் மிஷினில் இந்த நம்பர் இருக்கா? ஈஸியா சரி பண்ணலாம்
சென்னை: ஏடிஎம் செல்லும்போது, வாடிக்கையாளர் தன்னுடைய வங்கியின் ஏடிஎம் அல்லது வேறு எந்த வங்கியின் ஏடிஎம்மிலும் பணம் எடுக்கும்போது, பணம் சிக்கிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இதோ குட்டி டிப்ஸ்களை பார்ப்போம்.
சில சமயம், ஏடிஎம் மிஷினில் பணம் எடுக்கும்போது திடீரென பணம் வராமல் நின்றுவிடும்.. அப்படி நடக்கும்போது, உடனே அருகிலுள்ள வங்கி கிளையை தொடர்பு கொள்ள வேண்டும். ஒருவேளை வங்கி பூட்டப்பட்டிருந்தால் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு போன் மூலம் தகவல் தெரிவிக்கலாம்..
ஏடிஎம்: ரிசர்வ் வங்கி விதிப்படி, எப்போதுமே, ஏடிஎம் மிஷினில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர்கள், அவர்களது போன் நம்பர்கள் / கட்டணமில்லா பேசும் எண்கள் (Toll free)/ உதவி கோரும் ஹெல்ப் டெஸ்க் (Help Desk) எண்கள் ஆகியவை தெளிவாக எழுதப்பட்டிருக்கும். இதேபோன்று ஒயிட் லேபிள் ஏடிஎம்களிலும் புகார் தெரிவிப்பதற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின்/ உதவி கோரும் எண்கள் எழுதப்பட்டிருக்கும்.

எனவே, ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது பணம் சிக்கிக்கொண்டால், ஏடிஎம் மிஷினின் நம்பரை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் அக்கவுண்ட்டிலிருந்து பணம் கழிக்கப்பட்டதற்கான பில்லையும் ஏடிஎம்மில் இருந்து பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். பணம் வராத பட்சத்தில், இந்த வங்கி ஸ்டேட்மென்டே முக்கிய ஆதாரமாகும்.. காரணம்., இந்த பில்லில்தான், ஏடிஎம் ஐடி, இடம், பணம் எடுத்த நேரம் போன்ற தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இதை வைத்தே சிக்கலை சரிசெய்யலாம்..
இழப்பீட்டு தொகை: ரிசர்வ் வங்கி விதிகளின்படி புகார் கொடுக்கப்பட்ட 7 நாட்களுக்கு வாடிக்கையாளர் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட வேண்டும். அப்படி வைக்கப்படவில்லை என்றால், வங்கியை நேரடியாக அணுகி பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிக்கலாம். 7 நாட்களுக்குள் பணம் திரும்ப வரவில்லை என்றால், அதற்கடுத்த ஒவ்வொரு நாளுக்கும் 100 ரூபாய் வங்கி மூலம், வாடிக்கையாளருக்கு ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் 100 வீதம் இழப்பீட்டு தொகை வழங்கப்படும்.
இந்த இழப்பீட்டைப் பெற நீங்கள் உங்கள் புகாரை, உங்கள் ஏடிஎம் பரிவர்த்தனை நடந்த 30 தினங்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். சில நேரங்களில் சில ஏடிஎம்களில் ரசீது வராது. அப்போது உங்கள் செல்போன் நம்பருக்கு வந்த பரிவர்த்தனை தொடர்பான மெசேஜ்ஜை புகாரின்போது காட்ட வேண்டி வரும்.
புகார்கள்: இதையும் மீறி உங்கள் புகாருக்கு உரிய தீர்வை நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி தீர்த்து வைக்காமல் போனாலோ அல்லது வங்கியின் நடவடிக்கை உங்களுக்கு திருப்தி அளிக்காமல் போனாலோ, இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கியிடமிருந்து பதில் கிடைத்த 30 நாட்களுக்குள் வங்கி தீர்ப்பாயத்துக்குப் புகார் தரலாம்.. ஒருவேளை உங்கள் வங்கி, உங்களுக்கு எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை என்றாலும், வங்கியிடம் புகார் கொடுத்த 30 தினங்களுக்குள் வங்கி தீர்ப்பாயத்திடம் புகார் அளிக்கலாம்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications