சிம்பு ரொம்ப நல்லவர்.. அவருக்கு வாயாடி பொண்ணுதான் மனைவியா கிடைக்கும்... கலகலக்கும் லட்சுமி அம்மா!
சென்னை: நடிகர் அஜீத் அரசியலுக்கு வர போகிறார். அவர் வருவதற்கு நிச்சயம் வாய்ப்பு உள்ளது என ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா அடித்துச் சொல்கிறார். அரசியல் குறித்த காட்சிகளை கூட தனது படங்களில் வைக்காத அஜீத், எப்படி அரசியலுக்கு வருவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
இதுகுறித்து ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா (எ) ஜெயலட்சுமி ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் பஞ்ச பூதங்களை இயக்கிக் கொண்டிருப்பதே ஆன்மாக்கள்தான். ஒருவரது பெயரை கெட்ட எண்ணம் கொண்டவர்கள் உச்சரித்தால் அவருடைய கெட்ட சக்தி உங்களுக்கு வேலை செய்யும்.
நல்லவர்கள் கூப்பிடும் போது வைப்ரேஷன் அதிகமாக இருக்கும். ஒரு மனிதன் செய்த தவறுகள் அவனது மரணத்தில் படம் போல் தெரியும். நான் இறந்து மறு ஜென்மம் எடுத்துள்ளேன். அதனால்தான் நான் சொல்வேன் பூத உடலை கொண்டு நான் பிறருக்கு நன்மை செய்கிறேன்.

ஆன்மா
இதை சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். எனக்கும் ஆன்மாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நமது ஆன்மா வேறு, உடல் வேறு. என்னை யாராவது கிண்டல் கேலி செய்தால் அவர்களுடைய ஆன்மாவே என்கிட்ட அவர்களை இழுத்துட்டு வந்துடும். நான் அவர்களுடைய கனவில் போவேன். என்னுடைய கம்பை கொண்டு அடித்துள்ளேன்.

ஆன்மா
அடிக்கடி நான் சுடுகாட்டுக்கு சென்று ஆவிகள், ஆன்மாக்களுடன் பேசுவேன். சுடுகாட்டில் விடிய விடிய தவத்தில் இருப்போம். அப்போது எங்களுடைய சக்தியுள்ள ஆன்மாக்களை துஷ்ட ஆன்மாக்கள் கிழித்து எடுத்துக் கொண்டு செல்லும். அதிலிருந்து எங்களை காத்துக் கொள்ள இந்த கம்பில் கருங்காலி குச்சியை தயார் செய்து வைத்துள்ளோம்.

வளையம்
கருங்காலி குச்சிகளால் வளையம் போட்டு நாங்கள் நடுவில் உட்கார்ந்து கொள்வோம். அப்போது இந்த ஆன்மாக்கள் எங்களிடம் குறைகளை சொல்லி அழும். குழந்தையில்லாமல் இருப்பவர்களுக்கு குழந்தை உண்டாவதற்காக இந்த ஆன்மாக்களுக்கு முக்தி கொடுத்து இன்னார் வயிற்றில் போய் பிறந்துவிடு என கூறி அனுப்புவோம். இது பெண் பிள்ளை, சாதிக்க பிறந்த பிள்ளை என நாங்கள் கூறுவோம், அதே போல் அதெல்லாம் நடந்திருக்கிறது.

கமண்டலம்
கமண்டலத்தில் உள்ள கங்கா ஜலத்தை கொண்டு கொரோனாவால் பாதிக்கப்படும் மக்கள் ஏராளமானோரை நான் காப்பாற்றியுள்ளேன். எனக்கு கீழ் 3000 சாமியார்கள் உள்ளனர். சிம்பு மிகவும் நல்லவர். குழந்தை மாதிரி தனக்கு இப்படித்தான் மனைவி வேண்டும் என தேடி வருகிறார். சிம்புவின் ஜாதகத்தில் தோஷம் உள்ளது. அவருக்கு தோஷம் நிவர்த்தி செய்ய வேண்டும்.

ஆன்மீகவாதி
அவர் நான் சொல்கிற மாதிரி கேட்டால் அவருக்கு அழகான பொண்ணு கிடைக்கும். சிம்புவுக்கு வாயாடி பெண்ணாகத்தான் கிடைக்கும். சிம்பு விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ரஜினிகாந்த் ஒரு ஆன்மீகவாதி. அவர் இதுதான் பாதை என செல்ல மாட்டார்.

கொரோனா
நடிகர் அஜித் அன்புக்கு ஏங்குபவர். அன்பினால்தான் அவர் ஷாலினியை திருமணம் செய்து கொண்டார். இன்று அன்புக்கே உலை வைத்தது போல் உள்ளது. அஜித் நல்ல மனிதர். அவர் 2013-ஆம் ஆண்டு முதல் வேதனையில் இருக்கிறார். அவர் நிச்சயம் அரசியலுக்கு வர வாய்ப்பிருக்கிறது. கொரோனா வருவதற்கு முன்னரே மிகப் பெரிய அழிவு வர போகிறது என சொல்லியுள்ளேன்.

ஜெயலலிதாவின் ஆவி உக்கிரம்
ஜெயலலிதாவின் ஆவி தற்போது உக்கிரமாக இருக்கிறது. அவர் பழிவாங்கும் முயற்சியில் உள்ளார். அதிலிருந்து அவருக்கு தடை போட்ட நிலையிலும் அவர் நிச்சயம் பழி வாங்க துடித்துக் கொண்டிருக்கிறார். நித்தியானந்தாவை நான் நேரில் சந்தித்தால் பின் வருவனவற்றை கூறுவேன். நித்தியானந்தாவுடன் இருக்கும் நண்பர்கள் எல்லாரும் தவறானவர்கள். அவர்களை விட்டு அவர் விலக வேண்டும்.

நித்தியானந்தா
அறக்கட்டளை மூலம் கிடைத்த பணம் கடவுள் கொடுத்தது. அதை ஏழைகளுக்கு உதவ வேண்டும். வீடில்லாதோருக்கு வீடு அளிக்க வேண்டும். நித்தியானந்தா என்ன தவறு செய்துவிட்டார். தைரியமாக தமிழகத்திற்கு வர வேண்டும். தமிழக மக்களுக்கு நன்மைகளை செய்ய வேண்டும். இது போல் நித்தியானந்தாவுக்கு அறிவுரை வழங்க நிறைய இருக்கிறது. இதில் நான் சொல்வது எதையும் அவர் கேட்டுக் கொள்ள மாட்டார் என்றார்.












Click it and Unblock the Notifications