மஞ்ச டீ ஷர்ட்.. கமல் காரை நோக்கி திடுதிடுவென ஓடி வந்த மர்ம நபர்.. திடீர் தாக்குதல்.. நடந்தது என்ன?
சென்னை: நேற்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கூடுதல் விவரங்கள் வெளியாகி உள்ளன.
மஞ்சள் டீ ஷர்ட்.. நீண்ட தலைமுடி.. வாய் முழுக்க ரத்தத்தோடு நேற்று கமல்ஹாசன் பிரசாரத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கமல்ஹாசனை தாக்கும் திட்டத்தில் இவர் கல் வீசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. மக்கள் நீதி மய்யத்தினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த விஷயம் குறித்து நிர்வாகிகளிடம் விசாரித்தோம்.
இந்த தாக்குதலை அந்த மர்ம நபர் திட்டமிட்டு நடத்தி இருக்கலாம்.. இவரை விசாரித்தால் உண்மை தெரியும் என்று நிர்வாகிகள் கூறுகிறார்கள்.. நேற்று என்ன நடந்தது?

தெரியும்
மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் இது குறித்து கூறும்போது.. கமல்ஹாசன் காஞ்சிபுரத்தில் தங்கி இருக்கும் ஹோட்டல் இருக்கும் இடத்தை தெரிந்த நபர்தான் இந்த தாக்குதலை நடத்தி உள்ளார். காஞ்சிபுரத்தில் கமல்ஹாசன் பிரசாரம் முடித்துக் கொண்டு திரும்பும் போதுதான் தாக்குதல் நடந்துள்ளது. அவர் திரும்பி செல்லும் வழியை தெரிந்து வைத்து தாக்கி உள்ளனர்.

மெதுவாக சென்றது
கமல்ஹாசன் வாகனம் மெதுவாக சென்றதை பயன்படுத்தி அந்த மஞ்சள் டீ ஷர்ட் போட்ட இளைஞர் வேகமாக ஓடி வந்தார். நேராக கமலை நோக்கி ஓடி வந்தவரை , நாங்கள் தடுத்துவிட்டோம். ஆனால் அவர் கையில் வைத்து இருந்த கல்லை வைத்து கண்ணாடியை உடைத்துவிட்டார். உள்ளே கமல் இருந்தாலும் அவருக்கு எதுவும் ஆகவில்லை.

திட்டமிட்டு
இதை பார்த்தால் திட்டமிட்டு செய்தது போல இருந்தது. எந்த இடத்தில் கூட்டம் குறைவாக இருக்கும் என்று தெரிந்து அந்த மர்ம இப்படி செய்ததாக நிர்வாகிகள் கூறியுள்ளனர். இவரை அடித்து துவைத்து போலீசாரிடம் நிர்வாகிகள் ஒப்படைத்துவிட்டனர். அதே சமயம் கமல்ஹாசனுக்கு பாதுகாப்பு குறைவாக இருக்கிறது.

பாதுகாப்பு
இன்னும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். அவரின் வளர்ச்சியை யாரும் விரும்பவில்லை. இது திட்டமிட்ட சதி போல இருக்கிறது . ஒவ்வொரு முறையும், எங்கே சென்றாலும் இப்படி பிரசாரத்தில் கமலுக்கு இடைஞ்சல் செய்ய சிலர் வருகிறார்கள். இதெல்லாம் பார்த்தால் திட்டமிட்டு யாரோ அனுப்புவது போல இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் புலம்புகிறார்கள்.

கூட்டம்
கமலுக்கு நிறைய கூட்டம் வருகிறது. அதை சகித்துக்கொள்ள முடியாமல் இப்படி செய்கிறார்கள் என்று கூறுகிறார்கள் நிர்வாகிகள். கமல்ஹாசனும் கடந்த வாரம் பிரசாரத்தில் இதை குறிப்பிட்டு இருந்தார்.. என்னுடைய பிரசாரத்திற்கு தடங்கல் செய்ய சிலர் முயற்சிக்கிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications