செந்தில் பாலாஜியை தியாகி போல சித்தரிக்கிறார்கள்.. ஆளுநரை சந்தித்த பிறகு அதிமுக சிவி சண்முகம் ஆவேசம்
சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை தியாகி போல சித்தரிப்பதாகவும் அவர் அமைச்சராக தொடர்வது சட்ட விரோதம் எனவும் அதிமுக நிர்வாகிகள் ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினர்.
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, இன்று அதிமுக நிர்வாகிகள் குழு சந்தித்து மனு அளித்தது. அதிமுக மூத்த தலைவர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு சிவி சண்முகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கைது செய்யப்பட்ட உடன் செந்தில் பாலாஜியை நீக்குவதற்கு பதிலாக முதல்வரும் அமைச்சர்களும் கூட்டனி கட்சியினரும் தியாகியை போல சித்தரித்து கொண்டு இருக்கிறார்கள். செந்தில் பாலாஜி மீது அனுதாபத்தை ஏற்படுத்த முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.
அமைச்சராக இருந்து கொண்டு மக்களுக்கு நியாயமாக படித்து விட்டு வேலை வாய்ப்புக்காக இளைஞர்கள் காத்துக்கொண்டு இருக்கும் நிலையில், பணத்தை பெற்றுக்கொண்டு ஒரு வேலைக்கு 10 பேரிடம் பணத்தை பெற்று மோசடி செய்து இன்று கைதியாக இருக்கும் செந்தில் பாலாஜியை முதல்வர் பார்த்து இருக்கிறார். இது முற்றிலும் தவறான செயல். கைது செய்யப்பட்டு இருக்கும் அமைச்சருக்கு ஏன் முதல்வர் இந்த அளவிற்கு இறங்கி வந்து ஆதரவு கொடுக்கிறார்.
கனிமொழி கைதுக்கு கூட இந்த அளவுக்கு வருந்தாத, கஷ்டப்படாத முதல்வர் மு.க ஸ்டாலின் இப்போது ஓடோடி சென்று பார்க்கிறார். கனிமொழியை ஒருமுறை கூட முதல்வர் மு.க ஸ்டாலின் டெல்லியில் சென்று பார்த்ததாக தெரியவில்லை. அவர் அப்பா தான் (கருணாநிதி) போய் பார்த்தார். அப்படி தனிப்பட்ட சகோதரிக்கு கூட வருத்தப்படாத முதல்வர் மு.க ஸ்டாலின் இன்றைக்கு வருத்தப்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
சி.வி.சண்முகத்திற்கு ஜாக்பாட்!தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ரெடி! தவெக பேச்சுவார்த்தை? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications