திமுக அதிரடி.. ஆத்தூர் தொகுதி வேட்பாளர் ஜீவா ஸ்டாலின் திடீர் மாற்றம்.. பின்னணியில் "ஜாதி" விவகாரம்
சென்னை: சேலம், ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜீவா ஸ்டாலின் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சின்னத்துரை என்பவர் போட்டியிடுவார் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.
Recommended Video

தமிழக சட்டசபை தேர்தல் களைகட்டியுள்ளது. வேட்புமனுதாக்கல் துவங்கியுள்ளது. திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கப்பட்ட பிறகு, திமுக தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்தது.
இதன் பிறகு ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

தனித் தொகுதி
சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டசபை தொகுதி ஒரு தனி தொகுதியாகும். இங்கு ஜீவா ஸ்டாலின் என்ற பெண், திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில்தான் சீட் ஒதுக்கப்பட்டது.

ஜீவா ஸ்டாலின் மாற்றம்
இந்த நிலையில்தான், ஜீவா ஸ்டாலின், ஜாதி தொடர்பாக சில குழப்பங்கள் ஏற்பட்டன. அவர், ஆதிதிராவிடர் இல்லை என்று புகார்கள் எழுந்தன. ஏனென்றால் தந்தை ஒரு ஜாதியை சேர்ந்தவர், தாய் இன்னொரு ஜாதியை சேர்ந்தவர். அவர்கள் ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள், என்பதால் அவரை ஆதிதிராவிடர் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்பதுதான் விமர்சனம்.

சின்னதுரை
நேற்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக இதே போல சர்ச்சை எழுந்து. தேர்தல் ஆணையத்திற்கு சிலர் புகார் மனு அனுப்பினர். இந்த நிலையில்தான் ஆத்தூர் தொகுதிக்கு சின்னத்துரை என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 82.

சட்ட சிக்கல்
தேர்தல் நேரத்தில் அல்லது தேர்தலுக்குப் பிறகு சட்ட சிக்கல்கள் எதுவும் வந்துவிடக்கூடாது.. இதன் மூலமாக ஒரு தொகுதியில் வெற்றி வாய்ப்பு குறைந்து விடக்கூடாது என்பதால் திமுக தலைமை இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்!












Click it and Unblock the Notifications