குளிக்க வச்சு வீடியோ எடுத்தாங்க.. மிரட்டறாங்க.. பெரம்பலூர் பெண் கதறல்.. பரபரப்பு ஆடியோ

பெரம்பலூர் பாலியல் சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் அருள் ஆடியோ வெளியிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: "குளிக்கும்போது எனக்கே தெரியாமல் வீடியோ எடுத்துட்டாங்க சார். அந்த வீடியோவையும் வெச்சு என்னை ரொம்ப பிளாக்மெயில் பண்ணிட்டே இருந்தாங்க" என்று பெரம்பலூர் பாலியல் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது.

சில தினங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டத்தில் ஆளும் தரப்பு எம்எல்ஏ ஒருவர் பல இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் கொடூரம் செய்ததாகவும், இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தர போனால் நடவடிக்கை ஏதும் எடுப்பதில்லை என்றும் ஒரு பரபரப்பு தகவல் வெளியானது.

இதனை நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான அருள் என்பவர்தான் முதன்முதலில் வெளியே கொண்டுவந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமே இது சம்பந்தமான புகார் மனுவையும் பெயரை குறிப்பிடாமல் தந்திருந்தார். இந்த புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டும் உள்ளது.

Audio has released in the Perambalur Sexually harassment Issue

இந்நிலையில், இந்த பாலியல் கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடியோ ஒன்றினை வழக்கறிஞர் அருள் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:

பெண்: ஹலோ வணக்கம் சார்!

வக்கீல்: ஹலோ சொல்லுங்கம்மா!

பெண்: நான் இப்போ வெளியே வந்து பேசுறேன். பர்ஸ்ட்ல என்னாச்சுன்னா, பெரம்பலூர் பஸ் நிலையம் பகுதியில் உள்ள லாட்ஜுக்கு இன்டர்வியூவுக்கு வர சொன்னாங்க. அங்க போனோம், திடீர்னு இங்க இன்டர்வியூ கிடையாது. இன்னொரு ஓட்டலில் இன்டர்வியூனு சொன்னாங்க. சரின்னு சொல்லி மறுபடியும் அங்க போனோம்.

வக்கீல்: ரூம் நம்பர் 114?

பெண்: 114? 104-ன்னா, தெரியல சார். இன்டர்வியூ முடிஞ்சிருமோ என்னமோனு பதற்றத்தில கிளம்பி போயிட்டோம். அங்க போனா, அவுங்களுடைய நடவடிக்கை எல்லாம் வேற மாதிரி இருந்தது.

வக்கீல்: யாருமா அங்க இருந்தா?

பெண்: அங்க 2, 3 பேர் இருந்தாங்க சார். இன்டர்வியூ நடக்குற மாதிரி தெரியல. பெரிய முதலாளி யாராவது வந்திருப்பாங்களோனு நாங்க நினைச்சோம். அங்க ரொம்ப வல்கரா பேசுனாங்க. ரொம்ப ஒரு மாதிரி தப்பாவெல்லாம் நடந்துக்கிட்டாங்க. வாக்குவாதம் நடக்கும்போதே வீடியோவா வேற ஷூட் பண்ணீட்டாங்க. இதுக்கு ஒத்துழைக்கலனா இந்த வீடியோவ நெட்ல போட்டிருவோம்னு அப்டிஇப்டின்னு சொன்னாங்க.

என்னா பண்ணனும்னே எனக்கு தெரியல. அப்புறம் என்னன்னா மறுபடியும் கால் பண்ணி, அதிமுக எம்எல்ஏ பெயரை சொல்லி நீ அவங்ககிட்ட போகணும், பாக்கணும்னு சொல்லிட்டே இருந்தாங்க. அவுங்கக்கிட்ட நீ வரணும் என 2, 3 தடவை கூப்பிட்டுக்கிட்டே இருந்தாங்க. வர முடியாதுனு சொன்னா என்ன பண்ணுவீங்கனு கேட்டப்போ, உன்னுடைய வீடியோ எல்லாமே இருக்கு. அத கண்டிப்பா நெட்ல ரிலீஸ் பண்ணப்போறோம் அப்புடீன்ற மாதிரி சொன்னாங்க. அப்புறம் மறுபடியும் அந்த வீடியோவ மறுபடியும் எனக்கே அனுப்பி காமிச்சு, காமிச்சு.. நீ வா நீ வானு கூப்பிட்டுக்கிட்டே இருந்தாங்க.

ஒருதடவை நான், வெளியில தெரிஞ்சிருமோ, வீட்டுக்கு தெரிஞ்சிருமோ என பயந்து நான் போனேன். ரொம்ப கட்டாயப்படுத்தி குளிக்க போ குளிக்க போன்னு சொன்னாங்க. குளிச்சிட்டு வந்தால் விட்டுருவாங்கன்னு பார்த்தால், குளிக்கும்போது எனக்கே தெரியாமல் வீடியோ எடுத்துட்டாங்க. அந்த வீடியோவையும் வெச்சு என்ன ரொம்ப பிளாக்மெயில் பண்ணிட்டே இருந்தாங்க. இது வீட்டுக்கு தெரிஞ்சா என்னாகும். வெளியில சொல்ல முடியாம ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டு இருந்தேன். இப்ப என்னன்னா, ஒரு ஸ்டேஜ்ல சூசைடு அட்டண்ட் பண்ணக்கூட ரெடியாகிட்டேன். ஏன்னா வீட்டில் தெரிஞ்சா குடும்பத்தோட சாவாங்க. எங்களுக்கு பேமிலி பேக்கிரவுண்ட் எல்லாம் கிடையாது சார்.

வக்கீல்: அப்படியெல்லாம் பண்ணக்கூடாதும்மா... வீடியோ எடுத்த பையன் யார்?

பெண்: வேலுனு நினைக்கிறேன். பேரு சரியா தெரியலை. பதட்டத்துல என்ன பண்றதுன்னு தெரியல.

வக்கீல்: நீங்க மட்டும்தான் அதில் இருந்தீங்களா வேற யாராவது இருக்காங்களா

பெண்: நிறைய புள்ளங்களை இப்படித்தான் பண்றாங்க.இன்டர்வியூனுனு சொல்லிட்டு இப்படித்தான் பண்றாங்க.

வக்கீல்: உங்களுக்கு தொடர்ச்சியா த்ரட்டன் இருக்கா,

பெண்: ஆமா இருக்கு. நான் ஏன் என்பெயர் சொல்ல மாட்டேங்கிறேன். என்னா, நேர்ல வர மாட்டோங்கிறேன்னா ரொம்ப மிரட்டுறாங்க. வீட்ட விட்டு வெளியே போக முடியலை, 2 நாளா சொந்தக்காரங்க வீட்டில் தங்கி இருக்கோம். என் பெயர் வெளியில் வரக்கூடாது. இப்ப இருக்கிற காலத்துல ரொம்ப பயமா இருக்கு. எனக்கு நடந்த மாதிரி வேற யாருக்கும் நடக்க கூடாது. என் பேர் வெளியே வந்துடக்கூடாது சார்.

வக்கீல்: உச்சநீதிமன்ற தீர்ப்புபடி பெயர் வெளியிட்டால் அவங்க மேல லீகல் ஆக்‌ஷன் எடுப்பாங்க. அதனால உங்க பேரை வெளியிட மாட்டோம். இது பொள்ளாச்சிய மிஞ்சிய சம்பவம்ம்மா இது.. புகார் தெரிவிக்க மாட்டோம்கிற தைரியத்துலதான் இப்படியெல்லாம் நடக்குது" என்று தொடர்ந்து உரையாடல் போய் கொண்டே இருக்கிறது. இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+