ரவுடிங்க ரெடி.. சைரன் வச்ச காரில் "சேகர்பாபு"வை பார்த்தேன்.. அடிச்சு விட்ட சாமியார்.. அள்ளிய போலீஸ்

திருச்சி சாமியாரின் பரபரப்பு ஆடியோ வெளியாகி உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு வக்கீலுடன் திருச்சி சாமியார் பேசும் ஆடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியையும், பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது.

யார் இந்த சாமியார்?

திருச்சி மாவட்டம் அல்லித்துறை வன்னியம்மன் கோவில் அருகில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன்.. ஆனால், இவர் சாமியாராகிவிட்டதால், தேஜஸ் சுவாமிகள் என்று அழைக்கப்படுகிறார்.

31 வயதாகிறது.. கடந்த 4 வருடமாகதான் சாமியார் ஆகி உள்ளார்.. இவரே இவரை சாமியார் என்று சொல்லி கொண்டு வருகிறார்.

வக்கீல்

வக்கீல்

இந்த நிலையில் சாமியார் ஒரு வக்கீலுடன் பேசும் ஆடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.. அதில், "எனக்கு உயர் அதிகாரிகள் எல்லாம் நல்ல நெருங்கின பழக்கம்.. தமிழகத்தில் 42 ரவுடிகள் இருக்காங்க.. அதில் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 12 ரவுடிகள்.. இவங்க 12 பேருமே என்கவுண்டர் லிஸ்ட்டில் இருக்கிறார்கள்.. இவங்களை எப்போது வேண்டுமானாலும் என்கவுண்டர் போடலாம் " என்பன உட்பட பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

 அட்வைஸ்

அட்வைஸ்

அதுமட்டுமல்ல, "திருச்சியை சேர்ந்த ரவுடிகள் சிலர் என்னை வந்து பார்த்தாங்க.. நான் அவங்ககிட்ட, உங்களுக்கு வேண்டப்பட்ட ரவுடியை பார்த்து இருந்துக்கங்கன்னு அட்வைஸ் பண்ணி இருக்கேன்" என்றும் கூறியுள்ளார்.. இதில் இன்னொரு ஹைலைட்டும் உள்ளது.. "நான் சைரன் வைத்த காரில் சென்று, அமைச்சர் சேகர்பாபுவை போய் சந்தித்தேன்" என்றும் இன்னொரு ஆடியோவில் தெரிவித்துள்ளார்.

 விசாரணை

விசாரணை

இந்த ஆடியோதான் சோஷியல் மீடியாவில் வேகமாக ஷேர் ஆகிவருகிறது.. இதையடுத்து, ஆடியோ பேச்சுகள் தொடர்பாக, ஜீயபுரம் போலீசார் அந்த சாமியாரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.. அதன்படியே நேற்றிரவு முதல் சாமியார் விசாரணையின் பிடியில்தான் சிக்கி உள்ளார்.. இனிமேல், பல தகவல்கள் வெடித்து வரும் என்றும், அந்த ரவுடிகள் எல்லாம் யார்? இவர்களுக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு என்றும் தெரியவரும்.

 அமைச்சர்

அமைச்சர்

இந்த முறை தேர்தல் நடந்தபோது, இந்த சாமியார் படுபிஸியாம்.. இவரிடம் ஆசி வாங்க ஏகப்பட்ட வேட்பாளர்கள் வந்து போயுள்ளனர்.. குறிப்பிட்ட அமைச்சர் ஒருவருக்கு தான் நெருக்கம் என்று போனில் எல்லாரிடமும் பந்தா காட்டி கொண்டே இருப்பாராம். அதற்கேற்றார்போல், சில அரசியல் தொடர்புகளும் இவருக்கு இருக்கிறது என்கிறார்கள்.

 நித்தி பெருமாள்

நித்தி பெருமாள்

இந்த சாமியார் போட்டோக்கள் எல்லாம் இணையத்தில் படுபேமஸ்.. நித்தியானந்தாவுக்கே டஃப் தருவது போல இருக்கும்.. நித்தி பெருமாள் அவதாரம் எடுத்தால், இவர் சிவபெருமான் அவதாரம் எடுப்பார்.. தன்னுடைய முகத்தை சிவபெருமான் போல எடிட் செய்து, சோஷியல் மீடியாவிலும் பரவிவிடுவாராம்.. பிறகு யாரோ பக்தர்கள் இதை அறியாமையாலும், தன்மீதுள்ள பிரியத்தினாலும் இப்படி செய்துவிட்டார்கன்ள என்றும், அறியாமல் செய்த தவறை மன்னித்தருள்க என்றும் சொல்வாராம்.

அலறல்

அலறல்

இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஐயோ.. அந்த குரல் என்னுடையதே இல்லை என்று அலறுகிறாராம்.. தொடர் விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே, தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சோமரசம்பேட்டை காவல் நிலையம், சைபர் க்ரைம் பிரிவு ஆகியவற்றில் புகார் அளித்திருப்பதாக சாமியார் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+