Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய்யால் தமிழக அரசியலில் சாதிக்க முடியும்.. ஆனா ஒரே ஒரு பிரச்சனை.. ஆடிட்டர் குருமூர்த்தி பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் விஜய்யால் சாதிக்க முடியும் என்றாலும் தனி ஆளாகச் செயல்படும் திறன் விஜய்யிடம் இல்லை என ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார். எம்ஜிஆரை போல விஜய்யால் தேர்தலில் வெல்ல முடியாது எனக் கூறிய அவர், விஜய்யிடம் கூட்டம் இருக்கிறதே தவிர முறையான கட்சி கட்டமைப்பு இல்லை என்றும் இதனால் அவர் தனித்துவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கும் சூழலில், இந்தியா டுடே நிகழ்ச்சியில் குருமூர்த்தி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்க்கு அரசியல் களத்தில் தனித்துச் சாதிக்கும் ஆற்றல் இல்லை என்று அவர் தெரிவித்தார். விஜய்க்கு ஆற்றல் இருந்தாலும், தனி ஆளாகச் செயல்படும் திறன் இல்லை என்றும், எம்.ஜி.ஆர் அமைந்தது போல அவருக்கு ரெடிமேடாக ஒரு கட்சி அமைப்பு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Auditor Gurumurthy on Vijay TVK had the potential but he can t achieve in tamil nadu politics alone

தனித்துச் சாதிக்க முடியாது

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "விஜய்யால் தமிழக அரசியலில் தனித்துத் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. முன்பு எம்ஜிஆர் இதைச் செய்திருக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆர், திமுகவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தார். சுமார் 15 ஆண்டுகள் வரை திமுக உள்ளேயே அதிமுக இருந்தது.. சுமார் 40 முதல் 45 சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என அதிமுகவின் மொத்தக் கட்டமைப்பும் திமுகவால் பயிற்றுவிக்கப்பட்ட ஒன்று.

எனவே, அதிமுக தனியாகச் சென்றபோது, திமுக பிளவுபட்டது. எனவே எம்ஜிஆர் ஒரு புதிய கட்சியை உருவாக்கவில்லை, மாறாக திமுகவுக்குள்ளேயே அவருக்கு ஒரு ரெடிமேட் கட்சி இருந்தது. ஆனால் விஜய்க்கோ அத்தகைய சூழல் இல்லை. அவரிடம் ஒரு முறையான கட்டமைப்பு இல்லை. அண்மையில் நடந்த கரூர் சம்பவம் அவரது கட்சிக்குள் எந்த ரூல்ஸ்ஸும் இல்லை என்பதை வெளிப்படுத்தியது.

விஜய்க்கு கூட்டம் மட்டுமே உள்ளது

கூட்டத்தைக் கட்டுப்படுத்த அங்குத் தலைவர்கள் இல்லை. திமுக, அதிமுக அல்லது பாஜக கூட்டங்களில் இதுபோல குழப்பம் ஏற்படாது. ஏனெனில் தலைவர் யார், அடுத்த நிலையில் யார், மாவட்டத் தலைவர் யார் என்பதை போலீசார் அறிந்து வைத்திருப்பார்கள். அவர்களைத் தொடர்பு கொள்வார்கள். ஆனால் விஜய்க்கு ஒரு கூட்டம் மட்டுமே உள்ளது. கூட்டத்தை ஒரு கட்சியாக மாற்ற முடியாது.

என்டிஆர் போலக் கட்சியை ஆரம்பித்து முதல் தேர்தலிலேயே வென்று ஆட்சியை அமைக்கும் அரசியல்வாதியாக விஜய் உருவெடுப்பாரா கேள்விக்கு, "இல்லை" என்று குருமூர்த்தி பதிலளித்தார். அவர் மேலும், "விஜய் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என முதலில் சொன்னேன். அதிமுகவிடம் அமைப்பு உள்ளது, விஜய்யிடம் இமேஜ் உள்ளது. இது நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும்..

தனித்து விடப்பட்டுள்ளார்

ஆனால், பின்னர் களச் சூழல் மாறியது. அப்போது காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதே விஜய்க்குச் சிறந்ததாக இருந்தது. ஆனால், தேசிய அளவில் திமுகவை காங்கிரஸ் கைவிட முடியாது. அதேபோல, தமிழக அளவில் காங்கிரஸை திமுக கைவிட முடியாது. இதனால் அவை பிணைக்கப்பட்டுள்ளன. எனவே, கூட்டணி எதுவும் இல்லாத ஒரு ஆளாக விஜய் இருக்கிறார். அவரால் எதையும் செய்ய முடியாது" என்றார்.

பாஜகவுக்கும் திராவிடக் கட்சிகளுக்கும் இடையிலான உறவு குறித்த பேசிய அவர், "1998 தேர்தலில் ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். 1999 தேர்தலில் கருணாநிதி பாஜகவுடன் கூட்டணி வைத்தார். எனவே, பாஜக ஒரு தீண்டத்தகாத கட்சி என்று எதுவும் இல்லை. அரசியல் தீண்டாமை நீண்ட காலத்திற்கு முன்பே மறைந்துவிட்டது.

திராவிடக் கட்சிகள் சரிவு

இரண்டாவதாக, இன்றைய சூழலில் அதிமுகவுக்கும் பாஜக தேவை உள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. ஆனால் 2024 லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுக இப்போது பாஜகவுடன் கூட்டணிக்கு வந்துள்ளது. மேலும், பிரதமர் மோடியும் அமித் ஷாவும் இப்போது வரை என்டிஏ அரசு என்றே குறிப்பிடுகிறார்கள். முன்பு இதுபோல எதாவது பேச்சு வந்திருந்தால் அதிமுக தலைவர்கள், 'இது NDA அரசு அல்ல, அதிமுக அரசு' என்று எதிர்த்து குரல் எழுப்புவார்கள். ஆனால் இப்போது அவர்கள் அதை ஏற்று கொள்கிறார்கள்.

அதேபோல, திமுக தரப்பிலும் கூட்டணிக் கட்சிகள் அதிகாரத்தில் பங்கு கேட்கின்றன. திமுகவிடம் யாரும் "இதுவரை இப்படிக் கோரியது இல்லை. இது திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் சரிவையும் காட்டுகிறது. தமிழக அரசியல் களம் மாறிக் கொண்டு இருப்பதையே இது காட்டுகிறது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+