2 நாள் லீவு எடுத்தால் 5 நாள் ஹாலிடே கிடைக்கும்.. ஆகஸ்ட் மாதத்தில் இப்படி ஒரு யோகமா? எப்டினு பாருங்க
சென்னை: சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி உள்ளிட்டவை காரணமாக இந்த ஆகஸ்டு மாதம் (government holidays in august) அடுத்தடுத்த ஹாலிடேக்கள் உள்ளன. சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை வருவதால் சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளது. இதேபோன்று இதே ஆகஸ்டு மாதத்தில், விநாயகர் சதுர்த்தி முடிந்து இரண்டு நாள் விடுமுறை எடுத்தால் போதும், மொத்தமாக 5 நாட்கள் லீவு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி இந்த மாதம் காத்திருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் இந்த சர்ப்ரைஸ் காத்திருக்கிறது.

3 நாட்கள் விடுமுறை
அதாவது ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு நாட்கள் ஆஃப் எடுத்தால் 5 விடுமுறை நாட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம். இந்தியாவின் 78-வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை வருவதால் எந்த ஒரு விடுப்பும் எடுக்காமலே மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.
5 நாட்கள் ஹாலிடே கிடைக்கும்
எனவே, இந்த மூன்று நாள் தொடர் விடுப்பு காரணமாக சொந்த ஊருக்கும், டூருக்கும் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் இதை பயன்படுத்திக்கொள்ள முடியும். இது வெறும் டிரெய்லர் தான். இந்த மாத இறுதியில்தான் 5 நாள் தொடர் விடுமுறைக்கு வாய்ப்பு உள்ளது. அதாவது விநாயகர் சதுர்த்தி விடுமுறை வருவதால் இடையில் இரண்டு நாள் லீவ் எடுத்தால் 5 நாள் தொடர் விடுப்பு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 27 ஆம் தேதி புதன்கிழமை வருகிறது. பல மாநிலங்களில் விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதற்கு மறுநாளான வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28), மற்றும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) அன்று விடுப்பு எடுத்தால் போதும் வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வந்துவிடும். எனவே, இந்த இரண்டு தினங்கள் லீவு எடுத்தால் 5 நாள் தொடர் விடுமுறை கிடைக்க சான்ஸ் உள்ளது.
ரக்ஷா பந்தன் பண்டிகை
வெயில் அனலாக அடித்துக்கொண்டு இருக்கும் நிலையில் ஜில்லென்று குறுகிய டூர் ஒன்றை போட திட்டமிடுபவர்கள் இந்த 5 நாள் லீவை பயன்படுத்திக்கொண்டு ஊட்டி, கொடைக்கானலுக்கோ அல்லது சொந்த ஊருக்கோ சென்றுவிட்டு சற்று ரிலாக்ஸ் ஆகலாம். ஆகஸ்ட் 9 ஆம் தேதி ரக்ஷா பந்தன் தினம் கொண்டாடப்படுகிறது. சனிக்கிழைமை ரக்ஷா பந்தன் தினம் கொண்டாடப்பட உள்ளது.
சகோதர சகோதரிகளுடன் ரக்ஷா பந்தனை உற்சாகமாக கொண்டாட பலரும் திட்டமிட்டு உள்ள நிலையில், வார விடுமுறையில் இந்த முறை வருகிறது. இதனால், அலுவலக பணிகளை பாதிக்காமல் ரக்ஷா பந்தனை சிறப்பாக கொண்டாட முடியும். சில மாநிலங்களில் ரக்ஷா பந்தனுக்கு அரசு விடுமுறையும் அளிக்கப்படுகிறது.
வங்கி ஊழியர்களுக்கும் சர்ப்ரைஸ் தான்
இது மட்டும் இன்றி வங்கிகளுக்கும் இந்த மாதம் தொடர் விடுமுறை வருகிறது. விநாயகர் சதுர்த்தி, ரக்ஷா பந்தன், சுதந்திர தினம், ஜன்மாஷ்டமி போன்ற முக்கியப் பண்டிகைகளும், வழக்கமான வார இறுதி விடுமுறை நாட்கள் உள்ளன. வங்கிகளை பொறுத்தவரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை நாட்களாகும்.
அதுபோக ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர நாள் விடுமுறையாகும். பல்வேறு மாநிலங்களிலும் அந்த மாநில விடுமுறை தினங்கள் ஆகஸ்ட் 19, 25 உள்ளிட்ட தினங்களில் வருகிறது. இவை அனைத்தையும் கணக்கிட்டால் ஆகஸ்ட் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது. எனினும், மாநிலத்திற்கு மாநிலம் இது வேறுபடும்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications