Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆகஸ்ட் மாத மத்தியில் அதிரடி மாற்றம்!.. அதிர்ஷ்டம் யாருக்கு வரப்போகிறது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆகஸ்ட் மாதம் பலருக்கும் யோகங்கள் நிறைந்த மாதமாக அமைகிறது. ஆகஸ்ட் மாதத்தில் சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியம். கிரகங்களின் ராசி மாற்றத்தினால் இந்த மாத பிற்பகுதியில் எந்த ராசியில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கும் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

ஆகஸ்ட் மாதம் சூரியன் கடகம் ராசியில் பாதி நாட்களும், சிம்மம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார். இந்த சூரியனுடன் கூடவே புதன் பயணக்கிறார். இந்த மாதத்தில் கிரகங்களின் பயணத்தைப் பார்த்தால் மேஷத்தில் ராகு, மிதுனத்தில் சுக்கிரன், சூரியன் சிம்மத்தில் புதன், துலாம் ராசியில் கேது மகரம் ராசியில் சனி, மீனம் ராசியில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

ஆகஸ்ட்7ஆம் தேதி சுக்கிரன் கடக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். 10ஆம் தேதி செவ்வாய் மேஷ ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். ஆகஸ்ட் 16ஆம் தேதி சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். ஆகஸ்ட் 20 ஆம் தேதி புதன் கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்து உச்சம் பெற்று அமரப்போகிறார். 12 ராசிகளில் நவ கிரகங்களின் சஞ்சாரம் கிரகங்களின் ராசி மாற்றத்தினால் கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசிகளில் பிறந்தவர்களுக்குப் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாதகமான மாதம். ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டிலும் உங்கள் ராசியில் ஆட்சி பெற்றும் அமர்கிறார். அதிர்ஷ்டங்கள் தேடி வரும். ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குப் பிறகு சாதகமான நாட்களாக இருக்கும். வேலையில் செய்யும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குரு, சுக்கிரன் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். காதல் திருமணம் கை கூடும். குருவின் பார்வையால் திருமணத்திற்காக செய்யும் முயற்சிகள் தடையைத் தாண்டி வெற்றி கிடைக்கும். சாப்பிடும் உணவில் கவனம் தேவை. மாணவர்களுக்கு இந்த மாதம் அற்புதமாக உள்ளது. எதிர்காலத்திற்காக திட்டமிடுவீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும். சேமிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். உடல் உஷ்ணம் தொடர்பான நோய்கள் வந்து போகும்.

துலாம்

துலாம்

ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு சாதகமான இடத்தில் பயணம் செய்வதால் நல்ல வேலை கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு திடீர் புரமோசன் கிடைக்கும். கிரகங்கள் பயணம் சாதகமாக உள்ளதால் மனதில் உற்சாகமாக இருக்கும். உடலில் சுறுசுறுப்பும் கூடும். சனி, குரு வக்ரமடைந்து பயணம் செய்கின்றனர். செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு மேல் செவ்வாய் 8 ஆம் வீட்டிற்குள் வருவதால் பேச்சில் நிதானமும் கவனமும் அவசியம். எத்தனையோ சிக்கல்களை சந்தித்து இருப்பீர்கள். களத்திர ராகு, எட்டில் செவ்வாய் என இருப்பதால் வீட்டில் குடும்பத்தினருடன் பேசும் போது கோபத்தைக் கட்டுப்படுத்தவும். வெளியாட்களிடம் பேசும் போது குடும்ப விசயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். மூன்றாவது நபர்களால் தேவையில்லாத சிக்கல்கள் வந்து செல்லும். திருமண சுப காரியங்களை இந்த மாதம் செய்ய வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். உணவு விசயத்தில் கூடுதல் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம். காரமான உணவுகள், எண்ணெயில் பொறித்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. இந்த மாதத்தில் கூடுதல் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அற்புதமாக உள்ளது. நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குப் பிறகு நல்ல நேரம் கை கூடி வந்துள்ளது. காரணம் ராசிநாதன் செவ்வாய் இரண்டாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார். நிறைய நன்மைகள் கைகூடி வரும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். புது வேலையும் தேடலாம். குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக கை கூடி வரும். உங்கள் ராசி அதிபதி செவ்வாய் ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். போராட்டங்கள் முடிவுக்கு வரப்போகிறது. நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு நன்மைகள் நடைபெறப்போகிறது. யோகம் நிறைந்த மாதமாகவும் அமைந்துள்ளது. முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் மாதமாகவும் அமைந்துள்ளது.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் ஆகஸ்ட் மாதத்தை அமைதியாக கடந்து விடுங்கள். பெரிய அளவில் புதிய முயற்சிகள் தேவையில்லை. வேலையில் சில குழப்பங்கள் ஏற்படும். செவ்வாய் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். சுக்கிரன் எட்டாம் வீட்டில் பயணம் செய்வது சிறப்பானதல்ல. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இருக்கும் வேலையை தக்கவைத்துக்கொள்ளுங்கள். குடும்பத்தில் சில பிரச்சினைகள் வரலாம். திருமணத்திற்காக செய்யும் முயற்சிகள் சின்னச் சின்ன தடங்களை ஏற்படுத்தும். புது வியாபாரம் தொடர்பான முயற்சிகளை மாத பிற்பகல் வரை தள்ளிப்போடவும். மாணவர்கள் உயர் கல்வி தொடர்பான முயற்சிகளில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. நோய்கள் எட்டிப்பார்க்கும் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். அவசரப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது.

மகரம்

மகரம்

உங்கள் ராசிக்கு இந்த மாதம் சூரியன், சுக்கிரன் பார்வை கிடைப்பதால் வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். வேலையில் மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்காக முயற்சி செய்யலாம். மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பண வரவு அதிகரிக்கும். செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் சின்னச் சின்ன விவாதங்கள் வந்து போகும். திருமண விசயமாக பேசுதற்கு இது ஏற்றமாதமல்ல. ஜென்ம சனி நடப்பதால் திருமணம் பேச நல்ல மாதமல்ல. குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை. வண்டி வாகனங்களில் போகும் போது நிதானம் தேவை.

கும்பம்

கும்பம்

விரைய சனி காலமாக இருப்பதால் பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். இருக்கிற வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு முயற்சி செய்ய வேண்டாம். தேவையற்ற செலவுகள் வந்து போகும். குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தள்ளிப்போடவும். திருமணமானவர்களுக்கு சின்னச்சின்ன சண்டை சச்சரவுகள் வந்து போகும். ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் வந்து போகும். திருமண சுப காரியத்திற்காக பேசலாம். மாணவர்கள் இந்த மாதத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்களை கேட்டு முடிவு செய்வது நல்லது. வாகனங்களில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை. சின்னச் சின்ன சோதனைகள் வந்து போகும். பொறுமையும், சகிப்புத்தன்மையும் அதிகம் தேவைப்படும் மாதமாகும்.

மீனம்

மீனம்

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே.. குரு பகவான் உங்கள் ராசியில் வக்ரமடைந்து பயணம் செய்கிறார். ஆகஸ்ட் 10 முதல் செவ்வாய் மூன்றாம் வீட்டிற்கு செல்வதால் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வது நல்லது. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வரும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வரன் பார்க்கின்றவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் கூடும். எதையும் பெரிய அளவில் எதிர்பார்க்காதீர்கள். மாத இறுதியில் புதன் உங்கள் ராசிக்கு நேர் எதிரே பயணம் செய்வார். உங்களுக்கு பத்ரா யோகம் கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் கை கூடி வரும். மொத்தத்தில் ஆகஸ்ட் மாதம் கவனமும் நிதானமும் தேவைப்படும் மாதமாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+