வாரே வாவ்.. ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆஸ்திரேலிய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியல் நிலைப்பாடுகள், கருத்துக்களை தவிர்த்துப் பார்த்தால், நடிகர் என்ற வகையில் ரஜினிகாந்த்தை ரசிக்காத தமிழ் சினிமா ரசிகர்களே இருக்க முடியாது.

Australian cops use Rajinikanths 2.0 meme to talk drunk driving. The tweet is viral now

ஆனால், கலைக்கு மொழி பேதம் இல்லை என்பதை ரஜினிகாந்த் தொடர்ச்சியாக, நிரூபித்து வருகிறார். தமிழ் கலைக்கு தொடர்பில்லாத, ஜப்பானிலும் ரஜினிகாந்த்துக்கு ரசிகர்கள் உண்டு என்பது இதற்கு ஒரு உதாரணம் என்றால், இப்போது ஆஸ்திரேலிய காவல்துறையும், ரஜினிகாந்த்துக்கு ரசிகர்களாகியுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 10ம் தேதி, ஆஸ்திரேலியாவின் தெர்பி போலீசார், ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஒரு மீம், இதற்கு காரணம். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் மீம் ஒன்றை காவல்துறையினர் வெளியிட்டனர்.

அதில், ரத்தத்தில் ஆல்கஹால் அளவு, 0.341%, என்ற அளவில் ஒருவருக்கு இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது மிக அதிக அளவாகும். அறுவை சிகிச்சையின்போது வழங்கப்படும் அனஸ்தீசியா மருந்தால் ஒருவர் கோமா நிலைக்கு சென்றால் எந்த அளவுக்கு அவர் ரத்தத்தில் ஆல்கஹால் இருக்கும். அந்த அளவுக்கானது இது. அப்படியிருக்கும், அந்த நபர் கார் ஓட்டிச் சென்றபோது பிடிபட்டுள்ளதுதான், காவல்துறைக்கே ஆச்சரியமான விஷயம்.

இந்த ஆச்சரியத்தை மீம் மூலம் வெளிப்படுத்தியுள்ளது தெர்பி காவல்துறை. ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான 2.O திரைப்படத்தில், செல்போன்களை வேறு ஒரு சக்தி இழுத்துக்கொள்வது போன்ற காட்சி இருக்கும். அதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் ஆலோசனை நடத்துவார்கள். இதற்கு வாய்ப்பே இல்லை என்று அப்போது வசனம் வரும். இதைத்தான், ஆல்கஹால் அளவு மீமுக்கு ஆஸ்திரேலிய போலீசார் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த மீம் காரணமாக ரஜினிகாந்த் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் ட்வீட் செய்து சந்தோஷம் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+