சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் வளர்ந்திருந்த கஞ்சா செடி.. பார்த்ததுமே ஆடிப்போன அதிகாரிகள்
சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகத்தில் 3 அடி உயரத்துக்கு வளர்ந்திருந்த கஞ்சா செடி வளர்ந்திருக்கிறது. இதை பார்த்து ஆடிப்போன அதிகாரிகள் இது எப்படி வந்தது.. யார் வளர்த்தது என்று விசாரித்து வருகிறார்கள். மருத்துவமனையின் பின்புறம் யாரேனும் விதைகளை வீசிவிட்டு சென்றார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை தமிழ்நாட்டின் மிகப்பழமையான மற்றும் புகழ்பெற்ற மருத்துவமனைகளில் ஒன்றாக இருக்கிறது. சென்னையின் ராயபுரத்தில் அமைந்துள்ள இம்மருத்துவமனை மற்றும் அதன் மருத்துவக் கல்லூரி ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே புகழ் பெற்ற மருத்துவமனையாகும்.

இங்குள்ள 'இலாசர் கரம் மற்றும் நுண் அறுவை சிகிச்சைத் துறை' உலகத்தரம் வாய்ந்தது. இந்தியாவில் முதன்முறையாக கைகளை ஒட்டு அறுவை சிகிச்சை செய்த பெருமை இம்மருத்துவமனைக்கு உண்டு. அதேபோல் தமிழ்நாட்டில் ள்ள அரசு மருத்துவமனைகளுக்கு எல்லாம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் முன்னோடி மருத்துவமனையாக திகழ்கிறது.
இங்கு தனியாக ஒரு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. அதேபோல் செரிமான மண்டலம் சார்ந்த சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கு இது தென்னிந்தியாவின் சிறந்த மையமாகத் திகழ்ந்து வருகிறது. அதேபோல் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, நாட்டின் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. டாக்டர் ஆக விரும்பும் மருத்துவக்கல்லூரி மாணவர்களின் தேர்வாக ஸ்டான்லி மருத்துவமனையாக இருக்கிறது.
இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான உள்நோயாளிகளும், வெளிநோயாளிகளும் வந்து செல்கிறார்கள். 24 மணி நேரமும் செயல்படும் அவசரச் சிகிச்சை மற்றும் அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள் அதிகம் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக சொல்வது என்றால், மொத்த வடசென்னைக்கும் சிறப்பு வாய்ந்த மருத்துவமனையாக இருக்கிறது. ஆந்திராவில் இருந்து பலரும் இங்கு வந்து சிக்சை பெற்று செல்கிறார்கள்.இவ்வளவு சிறப்பு வாய்ந்த மருத்துவமனையின் வளாகத்தில் 3 அடி உயரத்திற்கு கஞ்சா செடி வளர்ந்திருப்பது அதிகாரிகளை ஆடிப்போக வைத்துள்ளது. யார் வளர்த்தது என்று விசாரித்து வருகிறார்கள். மருத்துவமனையின் பின்புறம் யாரேனும் விதைகளை வீசிவிட்டு சென்றார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications