மீன் விற்கும் பெண்ணுடன் மெரினா பீச்சில் சல்லாபம்.. உயிரை இழந்த ஆட்டோ டிரைவர்.. சென்னையில் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் குற்ற சம்பவங்கள் ஓரளவு குறைந்து வந்த நிலையில், மீண்டும் தலைதூக்கியிருப்பதாகவே தெரிகிறது.. நேற்று சென்னை புளியந்தோப்பில் குடிபோதையில் செல்போனுக்காக இளைஞரின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் ரெயில் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்திவிட்டது. அதேபோல மெரினா பீச்சில் ஒரு கொலை நேற்று நடந்துள்ளது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டுள்ளதுடன், கொலையாளிகளையும் தேடி வருகிறார்கள். மேலும் சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.

சென்னை மெரினா நொச்சிக்குப்பம் லூப் சாலை அருகே உள்ள கடற்கரை பகுதியில் இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது..

Chennai Marina Beach Auto Driver

நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு, கடற்கரையில் தூங்குவதற்காக பொதுமக்கள் சிலர் சென்றிருக்கிறார்கள்.. அப்போது மணலில் ஒருவர் மயங்கி விழுந்து கிடப்பதை கண்டனர்..

அவரது தலையின் பின்புறம் பயங்கரமான வெட்டுக்காயங்கள் காணப்பட்டன.. உடம்பெல்லாம் ரத்தம் காணப்பட்டது.. இதைப்பார்த்து பதறிப்போன பொதுமக்கள், உடனடியாக மெரினா போலீசாருக்கு தகவல் தந்தார்கள்..

மெரினா பீச்சில் நள்ளிரவில்

போலீசாரும் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்து, குத்துயிரும் குலையுயிருமாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்... நேற்றிரவு முழுவதுமே அவருக்கு தீவிரமான சிகிச்சை தரப்பட்டது.. ஆனால், அந்த நபர் இன்று காலை 8 மணிக்கு இறந்துவிட்டார்..

இதையடுத்து உயிரிழந்த நபர் யார் என்ற விசாரணையை போலீசார் மேற்கொண்டனர்.. இறந்த நபரின் ஷர்ட் பாக்கெட்டில் இருந்த ஏடிஎம் கார்டை எடுத்த போலீசார், அதைக்கொண்டு விசாரணையை துவங்கினர்..

மீன் விற்கும் பெண்

அப்போதுதான், கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த 40 வயது அந்தோணி என்பவர்தான் இறந்த நபர் என்பது தெரியவந்தது. இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார்.. அந்தோணிக்கு திருமணமாகிவிட்டது.. மனைவி, குழந்தைகளும் இருக்கிறார்கள்..

ஆனால், பட்டினப்பாக்கத்தில் பெண் ஒருவருடன் அந்தோணிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.. இது தகாத உறவாகவும் வளர்ந்து வந்துள்ளது.. இந்த கள்ளக்காதலிக்கும் திருமணமாகிவிட்டது.. பெண் பிள்ளைகளும் இருக்கிறார்கள். நொச்சிக்குப்பத்தில் மீன் விற்கிறாராம் இந்த பெண்.

எச்சரித்த உறவினர்கள்

கடந்த வாரம் இந்த கள்ளக்காதல் ஜோடி நெருக்கமாக இருந்தபோது, அந்த பெண்ணின் உறவினர்களுக்கு தெரிந்து கொந்தளித்துள்ளார்கள்.. உடனே அந்தோணியை கடுமையாக எச்சரித்து, அங்கிருந்து அடித்து விரட்டியிருக்கிறார்கள்.. அப்போது கள்ளக்காதலியின் மகள்களும், அந்தோணியை அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றைய தினமும் கள்ளக்காதலியை சந்திப்பதற்காக பீச்சுக்கு கிளம்பியிருக்கிறார்.. தன்னுடைய அக்காவுக்கு குழந்தை பிறந்துள்ளதால், அதை பார்த்துவிட்டு வருவதாக மனைவியிடம் பொய் சொல்லிவிட்டு பீச்சுக்கு கிளம்பி வந்துள்ளார். அதேபோல கள்ளக்காதலியும் அந்தோணியை சந்திக்க மெரினா பீச் வந்துள்ளார்.

பீச்சில் கள்ளக்காதலி

இருவரும் பீச்சில் நள்ளிரவு வரை ஒன்றாக பேசி கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த நபர்கள், அந்தோணியை சரமாரியாக தாக்க ஆரம்பித்துவிட்டார்கள்.. பிறகு கத்தியால் அந்தோணியின் தலையையும் ஆவேசமாக வெட்டுவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார்கள் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து தப்பியோடியவர்களை தேடி வருகிறார்கள்.. அவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. மெரினா பீச்சில் நள்ளிரவில் ஆட்டோ டிரைவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+