"ஊதுப்பா ஊது.!" பாடாய் படுத்திய போதை ஆசாமி.. போலீஸ் கன்னத்தை கிள்ளி முத்தம் தந்து.. சும்மாவே இருக்கல

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைநகர் சென்னையில் விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அதன் பிறகு போலீசாரிடம் செய்த காமெடி அலப்பறைகள் தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

குடிபோதையில் வாகனத்தை ஓட்டி மாட்டிக் கொண்டால் அதன் பிறகு போதை ஆசாமிகள் செய்யும் காரியங்கள் காமெடியாக இருக்கும். அப்படியொரு சம்பவத்தின் வீடியோ தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Auto driver kissed police to avoid alcohol testing in Chennai

ஆட்டோ டிரைவர்: ஆட்டோ டிரைவர் ஒருவர் சென்னையில் விபத்தை ஏற்படுத்தியுள்ளார். அந்த ஆட்டோ டிரைவர் பைக்கில் வந்த நபர் மீது மோதியுள்ளார். இது விபத்து குறித்த தகவல் கிடைத்த உடன் டிராபிக் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் யார் மீது தவறு என்பதைத் தெரிந்து கொள்ள விசாரணையை ஆரம்பித்துள்ளனர். முதலில் பைக்கில் வந்த அந்த நபர் மது குடித்துள்ளாரா என்பதைக் கண்டறிய டெஸ்ட் செய்துள்ளனர்.

தொடர்ந்து அடுத்து அந்த ஆட்டோ டிரைவரிடமும் சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த ஆட்டோ டிரைவர் செய்த செயல்கள் தான் காமெடியின் உச்சம்.. அந்த ஆட்டோ டிரைவிடம் சென்ற டிராபிக் போலீசார் அவரை ஊதுமாறு கேட்டுள்ளனர். ஆனால், அந்த டிரைவரோ, நான் என்ன சார் பண்ணுணேன்.. என்னை ஏன் சார் ஊத சொல்றீங்க எனத் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார். தொடர்ந்து ஊத மறுத்த டிரைவர், போலீசாரிடம் ஏதோதொ சொல்கிறார்.

டிராபிக் போலீசார்: அப்போது டிராபிக் போலீசார், "ஊதினால் தானேப்பா தெரியும்.. முதலில் ஊது எவ்வளவு வருது என்பதைப் பொறுத்து அப்புறம் பார்க்கலாம்" என்கிறார்கள். ஆனாலும், அந்த ஆட்டோ டிரைவர் ஊதாமல், வீடு கிட்டதான் சார்.. நான் எதுவுமே பண்ணல.. எதற்காக என்னை ஊத சொல்றீங்க எனக் கேட்கிறார். மேலும், தன் மீது எந்தவொரு தவறும் இல்லை என்ற அந்த டிரைவர், பைக்கில் வந்த நபர் தான் தவறாக வந்து மோதிவிட்டார் என்கிறார்.

அப்போது போலீசார், "யார் மீது தப்புனு பார்க்கலாம்ப்பா.. அவர் தான் ஊதிவிட்டாரு.. நீ ஊதுப்பா.. அப்போ தான் தெரியும்" என்கிறார். என்ன செய்தாலும் போலீசார் விட மாட்டார்கள் என்பதை ஒரு கட்டத்தில் உணர்ந்த அந்த ஆட்டோ டிரைவர் ஒரு கட்டத்தில் அந்த மெஷின் அருகே வருகிறார். ஆனாலும் ரிடிங் வரவே இல்லை. கொஞ்சம் ஊற்று பார்த்தால் தான் தெரிந்தது. அந்த டிரைவர் ஊதவில்லை.. அதைக் கடிக்கிறார் என்று... உடனே அருகே இருந்த போலீசாரும் "கடிக்கக் கூடாது ஊதுப்பா" எனக் குழந்தைக்குச் சொல்வது போலச் சொல்கிறார்.

ஊதுப்பா ஊது: ஆனால், அப்போதும் அவர் ஊதுவது போலத் தெரியவில்லை. "என்ன சார்.. சும்மா இனிப்பு சாப்பிட்டு வந்தவன போய்.." என்று ஏதேதோ சொல்கிறார். ஒரு கட்டத்தில் போலீசாரிடம் இருந்து எஸ்கேப் ஆக காமெடி எல்லாம் செய்துவிட்டு அவரே சிரிக்கிறார். அப்போது தான் அங்கே மற்றொரு போலீசார் வருகிறார். அவர் இன்னுமே ஒருபடி மேலே போய், நீ மட்டும் ஊது போதும்.. நான் உன் ஆட்டோ சாவியைத் தந்துவிடுகிறேன் என்று ஆட்டோ சாவியைக் காட்டியும் கேட்கிறார்.

முத்தம் எல்லாம் தந்து: அப்போதும் டிரைவர் அதற்கெல்லாம் மசியும் நபராக தெரியவில்லை.. ஒரு கட்டத்தில் வழியில்லாமல் அந்த மெஷின் அருகே சென்ற போதிலும் ஊதாமல் அவர் உறிகிறார். அட என்னப்பா மறுபடியும் முதல்ல இருந்தா என்பது போலவே அவரது ரியாக்ஷன் இருக்கிறது. ஒரு கட்டத்தில் போலீசாரிடம் சென்று அவர்கள் கன்னத்தை எல்லாம் தடவித் தந்த முத்தம் தருகிறார் அந்த போதை ஆசாமி.. ஆனாலும் போலீசார் விடுவதாக இல்லை.

பிறகு வேறு வழியே இல்லாமல் போகவே அவர் மெஷினுக்கு அருகே சென்று ஊதியுள்ளார். அப்போது பட்டென எகிறியது அந்த மீட்டர் 271இல் வந்து நின்றுள்ளது. ஆட்டோ டிரைவர் குடிபோதையில் இருப்பது உறுதியான நிலையில், அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+