கனிமொழிக்காக கட்டணமின்றி 1 நாள் ஆட்டோ சவாரி! பெட்ரோல் விற்கும் விலையிலும் ஆட்டோ ஓட்டுநர்களின் அன்பு!
சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியின் பிறந்தநாளையொட்டி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் ஒன்றில் கட்டணமின்றி ஒரு நாள் சவாரி இயக்கப்பட்டுள்ளது.
கனிமொழி மீது கொண்ட அன்பு காரணமாக பெட்ரோல் விற்கும் விலையிலும் அதைப்பற்றி பொருட்படுத்தாமல் இலவசமாக ஆட்டோக்களை இயக்கியிருக்கிறார்கள் ஆட்டோ ஓட்டுநர்கள்.
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கனிமொழி ஏற்கனவே தனது சொந்த நிதியின் மூலம் பல உதவிகள் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கனிமொழி பிறந்தநாள்
திமுக துணைப் பொதுச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி நேற்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்தாண்டு அவரது பிறந்தநாள் விழா சற்று எளிமையாக கொண்டாடப்பட்டது. ஆனால் அதே சமயம் எந்த வருடமும் இல்லாத வகையில் இந்த வருடம் ஏராளமான மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் என ஒருய் பெரிய கூட்டமே திரண்டு வந்து கனிமொழிக்கு நேரில் வாழ்த்துச் சொல்லியது.

ஆட்டோ ஓட்டுநர்கள்
இதனிடையே சென்னை திருவல்லிக்கேணி ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வரும் ஆட்டோ ஓட்டுநர்களான மதியழகன், அண்ணாமலை, சரவணன், வெங்கடேஷ் பெருமாள், விஜி, முனியன், உள்ளிட்ட 7 பேரும் நேற்று ஒரு நாள் முழுவதும் ஒரு ரூபாய் கூட கட்டணம் வசூலிக்காமல் இலவசமாக சவாரி இயக்கியிருக்கின்றனர். முதலில் கட்டணமில்லாமல் ஆட்டோ சவாரி இயக்கப்படும் தகவல் பொதுமக்களுக்கு தெரியவில்லை. நண்பகலுக்கு பிறகு இது குறித்து தெரிந்த பின்னர் ஆளாளுக்கு ராயப்பேட்டை போகனும், தேனாம்பேட்டை போகனும் எனக் கூறி ஆட்டோவில் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.

நேரில் அழைத்து
பெட்ரோல் விற்கும் விலையில் தனக்காக இந்தளவுக்கு சேவை செய்து அன்பை வெளிப்படுத்திய ஆட்டோ ஓட்டுநர்களை கனிமொழி எம்.பி. நேரில் அழைத்து நன்றி தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினின் திருவல்லிக்கேணி தொகுதியில் கனிமொழிக்கும் ஆதரவாளர்கள் கணிசமாக உள்ளார்கள் என்பதை இது போன்ற நிகழ்வுகள் உணர்த்துகின்றன. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கனிமொழி ஏற்கனவே தனது சொந்த நிதியின் மூலம் பல உதவிகள் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல்வாதிகள்
பொதுவாக ஒரு நாள் முழுவதும் டீ 1 ரூபாய், சாப்பாடு 1 ரூபாய் என்பன போன்ற நிகழ்வுகள் எல்லாம் சினிமா நடிகர்களின் பிறந்தநாள்களின் போது அவரவர் ரசிகர்களால் நடைபெறும். ஆனால் பெண் அரசியல்வாதி ஒருவரது பிறந்தநாளுக்கக நாள் முழுவதும் சென்னையில் கட்டணமில்லாமல் ஆட்டோ இயக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.












Click it and Unblock the Notifications