தமிழகத்தில் உயர்கிறதா ஆட்டோ கட்டணம்? அமைச்சர் சிவசங்கர் சொன்னது என்ன?
சென்னை: ஆட்டோ மீட்டர் கட்டணம் விரைவில் மாற்றம் செய்யப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அது போல் மினி பேருந்துகள் இயக்கம் குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொது போக்குவரத்துகள் இருக்கும் போதிலும் ஆட்டோக்களும் இயங்கி வருகின்றன. இவை ஷேர் ஆட்டோக்களாகவும் இயங்கி வருகின்றன. பொது போக்குவரத்தில் பயணிக்க இயலாதவர்கள் ஆட்டோவில் பயணிக்கிறார்கள்.

தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு பேருந்துகளோ மெட்ரோ ரயில்களோ இல்லாவிட்டால் அவர்கள் ஆட்டோவில் பயணிக்கிறார்கள். பிரசவத்துக்கு இலவசம் என்பதை போல் அவசரத்திற்கு ஆட்டோ என சொல்லலாம்.
ஆனால் ஆட்டோ ஓட்டுநர்கள் அதிகபடியான கட்டணத்தை வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது. இது எப்போதும் இருந்து வருகிறது. ஓலா, ஊபர் உள்ளிட்ட செயலிகளில் புக் செய்தால் ஒரு இடத்திற்கு 80 ரூபாய் காட்டினால், அந்த ஆட்டோ ஓட்டுநர் போன் செய்து 100 ரூபாய் தாங்க வரேன் என்பார்.
வாடிக்கையாளரும் அவசரத்திற்காக சரி வாங்க என்கிறார். இப்படித்தான் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது புகார்கள் எழுகின்றன. நேரடியாக ஆட்டோக்களை அணுகினால்தான் இப்படி அதிக கட்டணம் கேட்கிறார்கள் என்றால், செயலிகள் மூலம் ஆட்டோவை புக் செய்தாலும் அதே நிலைதான்.
இந்த நிலையில் கடைசியாக 2013 ஆம் ஆண்டு ஆட்டோ மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் மீண்டும் ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. 2013 ஆம் ஆண்டு தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க உத்தரவிட்டது.
அதன்படி பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இன்னும் கட்டணம் உயர்த்தப்படவில்லை. கடந்த பிப்.1 ஆம் தேதி முதல் உயர்த்தப்படும் என சங்கங்கள் அறிவித்திருந்தன. இந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை, தமிழக ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜாஹிர் உசேன், பொதுச் செயலாளர் வெற்றிவேல் உள்ளிட்டோர் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
அப்போது அமைச்சர், ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு குறித்து அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார். விரைவில் கட்டணம் மாற்றப்படும் என்றார்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications