Tamilnadu Auto: தமிழக அரசு அதிரடி.. இன்று முதல் ஆட்டோக்களை இயக்க அனுமதி.. முக்கிய கன்டிஷன்கள் உண்டு
சென்னை: சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை தவிர, பிற மாவட்டங்களில் இன்று வெள்ளிக்கிழமை முதல் ஆட்டோக்கள் இயக்கப்படலாம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
Recommended Video
சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆட்டோக்கள் இயங்கலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது.
அதேநேரம், ஆட்டோக்களை இயக்க, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுகுறித்த விவரமும் அரசின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. அப்படி என்ன கூறியுள்ளது அரசு என்பதை பார்க்கலாம்.

ஒரே பயணி
ஒரு ஓட்டுனர், ஒரு பயணி என்ற விகிதத்தில் ஆட்டோக்களை இயக்க வேண்டும், அதற்கு மேல் ஆட்களை ஏற்றக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஷேர் ஆட்டோக்கள் என்ற பெயரிலான ஆட்டோ கான்செப்ட் இனி இருக்காது. ஷேர் ஆட்டோ என்றாலே, ஒருவருக்கு மேல் பயணிக்கும் ஆட்டோதான்.

சென்னைக்கு அனுமதியில்லை
கிருமி நாசினி கொண்டு பயணி கைகளை சுத்தப்படுத்திய பிறகே ஆட்டோவில் ஏற வேண்டும். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோக்களை இயக்கலாமே தவிர, பிற நேரங்களில் இயக்க கூடாது. நாளை முதல் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஆட்டோக்களை இயக்க முடியும்.

முகக்கவசம்
டிரைவர் ற்றும் பயணிக்கு, முகக்கவசம் கட்டாயம். முகக் கவசம் அணியாமல் பயணிகள் ஏறக் கூடாது. டிரைவர் இயக்க கூடாது. ஒவ்வொரு முறை பயணி இறங்கி சென்ற பிறகும், கிருமி நாசினி கொண்டு, ஆட்டோ சுத்தம் செய்யப்பட வேண்டும். கண்டெயின்மென்ட் பகுதியில் ஆட்டோக்களை இயக்குவதற்கு அனுமதி கிடையாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டங்கள்
ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக பல்வேறு மாவட்ட தலைநகரங்களிலும் தினசரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வந்த நிலையில் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே ஊரகப் பகுதிகளில் மட்டும் சலூன் கடை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications