ஆட்டோ கட்டணம்.. முதல் 1.5 கி.மீ.க்கு 60 முதல் 70 ரூபாய் கேட்கும் சங்கங்கள்.. அரசின் முடிவு என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறையுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில், ஆட்டோ ரிக்ஷா சங்கங்கள் முதல் 1.5 கிலோமீட்டருக்கு ₹60 முதல் ₹70 வரையிலும், அதைத் தொடர்ந்து வரும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ₹25 முதல் ₹30 வரையிலும் அடிப்படை கட்டணமாக நிர்ணயிக்கக் கோரியுள்ளன. ஆனால் தமிழக அரசோ, முதல் 1.5 கிலோமீட்டருக்கு 50 ரூபாயும், அதற்கு அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 22 ரூபாய் வசூலிக்கலாம் என்று க பரிந்துரைக்க வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த இறுதி முடிவை மாநில அரசு விரைவில் எடுக்க உள்ளது.

ஆட்டோக்களின் கட்டணம் பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளது. அதனால் ஆட்டோ ஓட்டுநர்கள், பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்குஏற்ப அவர்களே கட்டணம் வசூலிக்கிறார்கள். சிலர் குறைந்த தூரத்திற்கே 100 கொடு, 200 கொடு என்று கேட்பதும் உள்ளது. இத்தகையாக சூழலில் பலர் பைக் டாக்ஸியை நாடி வருகின்றனர். இது அவர்களின் தொழிலுக்கே எமனாக மாறி வருகிறது. மறுபுறம் அரசு மகளிருக்கு இலவச பேருந்து பயணம் அறிவித்ததும், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சிக்கலாக மாறி உள்ளது. இந்த சூழலில் ஆட்டோ ஓட்டுநர்கள் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

Autorickshaw unions demanded a base fare of 60 to 70 for the first 1 5km

கடந்த கடந்த 2024-ஆம் ஆண்டில், அரசு அமைத்த குழு ஒன்று அடிப்படை கட்டணமாக ₹40 மற்றும் கூடுதல் கிலோமீட்டருக்கு ₹18 என பரிந்துரைத்திருந்தது. ஆப்-அடிப்படையிலான டாக்ஸி மற்றும் ஆட்டோ செயலிகளின் கட்டணங்களை முறைப்படுத்துவதற்கான விதிகளுடன் சேர்த்து இந்த யோசனையும் இன்னும் நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக நேற்று ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டம் முடிவடைந்தபோது எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை, ஏனெனில் அதிகாரிகள் எங்களுக்கு எந்த உறுதியும் அளிக்கவில்லை" என்று CITU ஆட்டோ தொழிலாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் எஸ். பாலசுப்ரமணியன் கூறினார்.

இதனிடையே இன்று திட்டமிடப்பட்டிருந்த போக்குவரத்துத் துறையின் மானியக் கோரிக்கை மீதான சட்டமன்ற விவாதம் செப்டம்பர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வாரம் புதிய கட்டணம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பு தாமதமாகியுள்ளது. "மீண்டும் அவர்கள் வழக்கமான பதிலையே கூறுகிறார்கள். அரசு விரைவில் முடிவெடுக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளாக இதையே கேட்டு நாங்கள் சலித்துவிட்டோம்" என்று எஸ். பாலசுப்ரமணியன் கூறினார்.

உரிமைக் குரல் ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் ஜாகீர் உசேன் கூறுகையில், "தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் இது. பயணிகள் சங்கங்களும் ஏற்றுக்கொண்ட எங்கள் முன்மொழியப்பட்ட கட்டண அட்டவணையை அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளோம், ஆனால் அவர் முடிவை மீண்டும் மீண்டும் தள்ளிப்போடுகிறார். எரிபொருள் விலை, பராமரிப்புச் செலவு மற்றும் போக்குவரத்து நெரிசலால் இயக்கச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை ஓட்டுநர்கள் எப்படிப் பின்பற்றுவார்கள் என்று அரசு எதிர்பார்க்கிறது என அவர் கேள்வி எழுப்பினார்.

ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "ஆப்-அடிப்படையிலான நிறுவனங்கள் அரசின் கட்டண அட்டவணையைப் பின்பற்றுவதில்லை என்பதால் அது பயனற்றதாகிவிட்டது. ஆப் நிறுவனங்கள் தங்களின் விருப்பப்படி 'சர்ஜ் ப்ரைசிங்' மூலம் கட்டணத்தை உயர்த்துகின்றன. மேலும் சில ஓட்டுநர்கள் திரையில் காட்டும் தொகையை விட கூடுதலாகக் கேட்கிறார்கள், இது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது" என்றார். அதிக கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

ஆட்டோவிற்கு தற்போதுள்ள கட்டணம்:

அடிப்படை கட்டணம் (முதல் 1.5 கி.மீ): ₹25

அடுத்தடுத்த ஒவ்வொரு கி.மீ-க்கு: ₹12

2024-ல் பரிந்துரைக்கப்பட்டது:

அடிப்படை கட்டணம் (முதல் 1.5 கி.மீ): ₹40

அடுத்தடுத்த ஒவ்வொரு கி.மீ-க்கு: ₹18

2026-ல் ஓட்டுநர்களின் கோரிக்கை:

அடிப்படை கட்டணம் (முதல் 1.5 கி.மீ): ₹60 - ₹70

அடுத்தடுத்த ஒவ்வொரு கி.மீ-க்கு: ₹25 - ₹30

அரசின் விருப்பம்:

அடிப்படை கட்டணம் (முதல் 1.5 கி.மீ): ₹50

அடுத்தடுத்த ஒவ்வொரு கி.மீ-க்கு: 22 ரூபாய்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+