இதை கட்டாயம் கடைபிடியுங்கள்…மழைக்கால நோய்கள் வரவே வராது…மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்
சென்னை மாநகராட்சி பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் துறையின் மழைக் காலங்களில் பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை கடைபிடித்து மழைக்கால நோய்களை தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி சென்னை மக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளார்.

*மழைக்காலங்களில் பரவும் வயிற்றுப்போக்கு, காலரா, மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்கள் வராமல் தடுக்க குடிநீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்கவும்.
* உணவு உட்கொள்ளும் முன்பு, கழிவறையை பயன்படுத்திய பின்பு சோப்பு உபயோகப்படுத்தி முறையாக 20 நொடிகள் கைகளை நன்கு தேய்த்துக் கழுவவும்.
* வீட்டுக்கு வெளியில் செல்லும்போது காலணிகளை அணிந்து செல்லவும்.
* வீட்டிற்கு வெளியில் சென்று வந்த ஒவ்வொரு முறையும் கை கால்களை சோப்பு தேய்த்து கழுவவும்.
* சென்னை குடிநீர் வாரியம் குடிநீர் வழங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அடி பம்புகளில் தேங்கிய நீரை குடிநீராக பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
* சாலையோரங்களில் விற்கப்படும் ஈ மொய்த்த மற்றும் தூசு படிந்த உணவுப் பண்டங்களை உண்பதை தவிர்க்கவும்.
* சமைத்த உணவினை சூடான நிலையிலேயே சாப்பிடவும் பழைய உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
* திறந்தவெளியில் மலம், சிறுநீர் கழிப்பதை தவிர்த்து பொதுக் கழிப்பறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவரிடம் முறையான சிகிச்சைப் பெற வேண்டும், சுய சிகிச்சை செய்யக் கூடாது.
* வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி பேதி ஏற்பட்டால் உப்பு சர்க்கரை கரைசல் மற்றும் வீட்டில் உள்ள நீர் ஆகாரங்களை அடிக்கடி பருகவும் உடன் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும்.
* தங்கள் வீட்டில் உள்ள மேல்நிலை, கீழ்நிலை தொட்டிகளை வாரம் ஒருமுறை ப்ளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்து கொண்டு நன்கு தேய்த்து கழுவி உலர வைத்து பயன்படுத்த வேண்டும்.
* வீட்டின் திறந்த மேல் நிலம் மற்றும் வீட்டை சுற்றி மழை நீர் தேங்க வாய்ப்புள்ள அனைத்து தேவையற்ற பொருட்களை அகற்றி கொசு உற்பத்தி ஆகாமல் தடுக்கவும் சுகாதாரத்தை காக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க உதவும்.
* புகார் மற்றும் கூடுதல் தகவல்களுக்கு 1913 அவசர மற்றும் சிகிச்சைக்கு மாநகராட்சி தொற்று நோய் மருத்துவமனை தண்டையார்பேட்டை 044-25912686/87/88 மற்றும் 108 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications