வெப்ப காலத்தில் சாப்பிடக்கூடாத காய்கறிகள்? தப்பித்தவறி இதையெல்லாம் தொட்றாதீங்க
சென்னை: வெயில் கோர தாண்டவம் ஆடும் நிலையில், உடல் நிலை சராசரி வெப்ப நிலையை பராமரிக்க போராடும். இதனால் கோடை காலத்தில் உடலுக்கு அதிக வெப்பத்தை ஏற்படுத்தும் சில காய்கறிகளை தவிர்ப்பது நல்லது. அது எந்தெந்த உணவுகள் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
தற்போதே வெயிலின் தாக்கம் கொடூரமாக உள்ள நிலையில், வரும் நாட்களில் வெப்பம் இன்னும் ரண கொடூரமாக இருகும் எனத் தெரிகிறது. கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்து உடலை காப்பாற்றிக்கொள்ள ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது அவசியம்.
காய்கறிகள், பழங்கள் உடலுக்கு நல்லது என்றாலும் சில காய்கறிகள் கோடை காலத்தில் சாப்பிடுவது உடல் நலனுக்கு அவ்வளவு உகந்தது அல்ல.. கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னவென்பதை இங்கே பார்க்கலாம்.

இஞ்சி மற்றும் பூண்டு:
இஞ்சி, பூண்டு ஆகியவை மருத்துவ குணங்கள் அதிகம் கொண்டவை. ஆனாலும், இயற்கையாகவே அதிக வெப்பத்தை உண்டாக்க கூடியது. இஞ்சி மற்றும் பூண்டில் இருக்கும் ஜிஞ்சர் மற்றும் அலிசின் போன்ற சேர்மங்கள், ரத்த ஓட்டத்தை தூண்டும். இதனால் வளர்சிதை மாற்ற வெப்பத்தை அதிகரிக்க செய்துவிடும். வெப்ப அலையின் போது இந்த உணவை அதிகம் சாப்பிட்டால் வயிற்று எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். நீரிழப்பை ஏற்படுத்தும். எனவே வெயில் காலத்தில் இந்த உணவை அளவோடு சாப்பிடுவது நல்லது..
மிளகாய்:
மிளகாயில் உள்ள கேப்சைசின் உடல் அதிக வெப்பம் அடைவதாக வேதியியல் மாற்றத்தை உருவாக்கி மூளையை நம்ப வைக்கும். எனவே கோடைகாலங்களில் சமையலில் அதிகப்படியான மிளகாய் சேர்த்துகொண்டால் செரிமான பாதையில் எரிச்சலை ஏற்படுத்தும். இதனால் அஜீரணக்கோளாறுகள் உண்டாகும். எனவே காரமிக்க உணவுகளை தவிர்ப்பது நல்லது.
கீரைகள்:
பாலக்கீரையில் ஆக்சலேட்டுகள் உள்ளன. அவை கோடை காலத்தில் சிறுநீரங்களை கடினமாக வெலை செய்ய வைக்கும். எனவே செரிமான அமைப்புகள் அதிகம் வேலை செய்யாமல் இருக்க கோடை காலத்தில் கீரைகளை குறைத்துக்கொண்டு அதற்கு நீர்சத்து நிறைந்த சுரைக்காய் போன்ற காய்கறிகளை உட்கொள்ளலாம்.
வெங்காயம்:
வெங்காயம் குளிர்ச்சிக்கு ஏற்ற உணவு என்றாலும், அதில் இருக்க கூடிய கந்தகம் அதிக வெப்பத்தை உண்டாக்கும். வெளிப்புற வெப்ப நிலை அதிகமாக இருக்கும் போது வாயுத்தொல்லை, வயிறு உப்புசம் மற்றும் நெஞ்சு எரிச்சலுக்கு வழிவகுக்கும். எனவே வெயில் காலத்தில் இதனை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.
கேரட், முள்ளங்கி
கேரட், முள்ளங்கி போன்றவை குளிர்கால பயிர்கள் ஆகும். இதில் கோடை கால காய்கறிகளை போன்று அதிக நீர்சத்து இருக்காது. எனவே இந்த உணவுகள் செரிமானம் ஆக அதிக நீர்சத்து தேவைப்படும்.
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications