ஒரே ஒரு இடத்தில் தேமுதிக வெல்லும்.. கூட்டணி மாற்றினாலும் கொட்டாத முரசு.. ஆக்சிஸ் மை இந்தியா!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் 60 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக ஒரே ஒரு தொகுதியில்தான் வெல்லும் என ஆக்சிஸ் மை இந்தியா கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. இதனால் தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்து கொண்டிருந்த போது ஒரு மாற்றம் நிகழாதா என மக்கள் எண்ணிய வேளையில் கடந்த 2006ஆம் ஆண்டு தேமுதிக என்ற தனிக்கட்சியை தொடங்கினார் விஜயகாந்த்.
அந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேமுதிக தனது வேட்பாளர்களை களமிறக்கியது. அது போல் விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட்டு அவர் மட்டுமே வென்றார்.

போட்டி
தனது அசாத்திய வாக்கு சதவீதத்தால் 2011 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க கருணாநிதியும் ஜெயலலிதாவும் போட்டி போட்டதாகவும் சொல்லப்படுகிறது.

ஒரு தொகுதி
அதில் அதிமுகவுடன் தேமுதிக போட்டியிட்டு 29 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பெற்றது. பின்னர் நடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முதல் தேமுதிகவுக்கு இறங்குமுகம் ஏற்பட்டது. கணிசமான வாக்குகளை பெற்றாலும் ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை.

தேமுதிக
கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை. இதனால் தேமுதிகவை அதிமுக கடைசிவரை தொகுதி ஒதுக்கீட்டுக்கு அழைக்கவே இல்லை. பாமக, பாஜக ஆகிய கட்சிகளை அழைத்த பின்னர் தேமுதிகவை அழைத்தது.

தேமுதிக அமமுக கூட்டணி
அதிலும் தேமுதிக கேட்ட தொகுதிகளை கொடுக்க எடப்பாடியார் கறாராக இருந்து விட்டார். தேமுதிக இறங்கி வர இறங்கி வர அதிமுகவோ 13 தொகுதிகளுக்கு மேல் ஒரு தொகுதி கூட கொடுக்க முடியாது என சொல்லவிட்டது. இதனால் அக்கூட்டணியிலிருந்து விலகிய தேமுதிக, அமமுகவுடன் கூட்டணி அமைத்தது.

தேமுதிக 60 இடங்களில் போட்டி
அமமுக தலைமையில் கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா மட்டுமே போட்டியிட்டார். எல் கே சுதீஷோ விஜய பிரபாகரனோ போட்டியிடவில்லை. இந்த முறை அதிமுக கூட்டணியில் இடம்பெறாத தேமுதிக கணிசமான தொகுதிகளில் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எத்தனை இடங்கள்
இந்த நிலையில் நேற்றைய தினம் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகின. இதில் பெரும்பாலான கணிப்புகளில் திமுகவே ஆட்சியை பிடிக்கும் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் ஆக்சிஸ் மை இந்தியா கருத்து கணிப்பில் அமமுக 1 முதல் 2 இடங்களிலும் தேமுதிக ஒரு இடத்திலும், மக்கள் நீதி மய்யம் கட்சி 2 இடங்களிலும் நாம் தமிழர் கட்சி 2 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

தேமுதிகவின் நிலை
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் கட்சி தொடங்கி மக்கள் நீதி மய்யம் கூட 2 இடங்களில் வெல்லும் வாய்ப்புள்ள நிலையில் கட்சி தொடங்கி 15 ஆண்டுகள் ஆன தேமுதிக ஒரு தொகுதியில் வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுவதை கண்டு தொண்டர்கள் வருந்துகிறார்கள். கருத்துக் கணிப்பு முடிவுகளில் கூட குறைய இருந்தாலும் தேமுதிகவின் நிலையால் வேதனையே மிஞ்சுகிறது.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications