எப்படி விஜய்க்கு 98 சீட் கொடுத்தீங்க? உடனே 30 சீட்டை குறைத்த பிரதீப் குப்தா.. Axis My India யூடர்ன்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக குறைந்தபட்சம் 70 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளதாக Axis My India கருத்துக்கணிப்பு நிறுவன தலைவர் பிரதீப் குப்தா தெரிவித்துள்ளார். Axis My India எக்ஸிட் போல் முடிவுகளில் தவெக குறைந்தபட்சம் 98 தொகுதிகளில் வெல்லும் என்று கூறப்பட்டிருந்த சூழலில், திடீரென சுமார் 30 தொகுதிகளை நேரலையிலேயே பிரதீப் குப்தா குறைத்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமாக 4.88 கோடி வாக்களித்த நிலையில், 85.15% வாக்குகள் பதிவாகியது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருக்கிறது. அதில் எந்த எக்ஸிட் போல் நிறுவனமும் தவெக அதிக இடங்களை கைப்பற்றும் என்று சொல்லவில்லை.

ஆனால் ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் மட்டும் தவெக 98 இடங்கள் முதல் 120 இடங்கள் வரை செல்லும் என்று எக்சிட் போல் முடிவில் கூறி இருக்கிறது. இது தவெகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் திமுக கூட்டணி 92 முதல் 110 இடங்கள் வரை வெல்லும் என்றும், அதிமுக 22 முதல் 32 இடங்கள் வரை மட்டுமே வெல்லும் என்று தெரிவித்திருக்கிறது.
திமுக மற்றும் தவெகவின் வாக்கு சதவிகிதம் 35ஆக இருக்கும் என்றும் Axis My India கூறி இருக்கிறது. மற்ற நிறுவனங்கள் தவெக அதிகளவில் வாக்குகளை பிடிக்கும் என்றும், சுமார் 20 தொகுதிகள் வரை அதிகபட்சமாக வெல்லும் என்றே கணித்துள்ளனர். ஆனால் Axis My India தவெக ஆட்சியை பிடிக்கும் என்றே கூறி இருக்கிறார்.
ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக கூட்டணி 400 தொகுதிகளை வெல்லும் என்றும், பாஜக தனித்து 300 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் Axis My India கணித்திருந்தது. ஆனால் பாஜகவுக்கு பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை. கூட்டணி ஆட்சியே அமைத்தது. இதனால் தொலைக்காட்சி நேரலையிலேயே Axis My India நிறுவன தலைவர் பிரதீப் குப்தா கண்ணீர்விட்டு அழத் தொடங்கினார்.
இந்த நிலையில் Axis My India எக்ஸிட் போல் முடிவுகள் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பிரதீப் குப்தா பேட்டி அளித்துள்ளார். அதில் வேறு யாரும் எக்ஸிட் போலில் தவெகவுக்கு அவ்வளவு அதிக இடங்களை கொடுக்கவில்லை. ஆனால் நீங்கள் மட்டும் குறைந்தபட்சமாக 98 இடங்கள் கொடுத்துள்ளீர்களே என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பிரதீப் குப்தா, நான் மற்ற எக்ஸிட் போல் தொடர்பாக கருத்து சொல்ல விரும்பவில்லை. Axis My India வேண்டுமென்றால் கொஞ்சம் கூடுதல் இடங்களை கொடுத்திருக்கும். ஆனால் 98 தொகுதிகளை தவெக வெல்லவில்லை என்றாலும், மற்றவர்கள் சொல்வதை போல் 20, 30 தொகுதிகள் என்று குறையாது. நிச்சயமாக 70 தொகுதிகளை தவெக குறைந்தபட்சம் வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.
-
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தவெகவில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம்.. கட்சித் தலைமை தெரிந்துதான் வசூல் நடக்கிறதா? -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
“நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் சாப்பிடல”.. பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன் -
அரசு மருத்துவமனையில் தந்தையை அனுமதித்து இரவு முழுவதும் தங்கிய அமைச்சர் மதன் ராஜாவுக்குப் பாராட்டு












Click it and Unblock the Notifications