பி.எட் வினாத்தாள் முன்பே கசிந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி! உடனடியாக அதிரடி முடிவெடுத்த உயர்கல்வித்துறை
சென்னை: இன்று நடைபெறவிருந்த பி.எட். தேர்வு வினாத்தாள் நேற்றே கசிந்த நிலையில் மாற்று வினாத்தாள் வழங்கப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது. புகாரை தொடர்ந்து உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய உயர்கல்வித்துறை, மாற்று வினாத்தாளை தேர்வு மையங்களுக்கு அனுப்பி தேர்வை திட்டமிட்டபடி நடத்தி வருகிறது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய பி.எட் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று பி.எட் இரண்டாம் ஆண்டு 4வது செமஸ்டர் "Creating an inclusive school" என்ற பாடத்திற்கான தேர்வு நடைபெறுவதாக இருந்தது.

இந்த நிலையில், காலை 10 மணிக்கு இந்த தேர்வு நடக்கவிருந்த இந்த பாடத்திற்கான வினாத்தாள் முன்கூட்டியே, அதாவது நேற்று இரவே வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் கவனத்திற்குச் சென்றதையடுத்து, கசிந்த வினாத்தாள் திரும்பப் பெறப்பட்டது. மாற்று வினாத்தாள் வழங்கப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், காலை 9.15 மணிக்குள் புதிய வினாத்தாள் தேர்வு மையங்களுக்கு இணையதளம் வாயிலாக அனுப்பி வைக்கப்படும் என்றும், பழைய வினாத்தாளைப் பயன்படுத்த வேண்டாம் என்று தேர்வு மையங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று காலை மாற்று வினாத்தாள் கொண்டு, பி.எட் மாணவர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. நீட், நெட் உள்ளிட்ட மத்திய அரசு தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தமிழ்நாட்டில் பி.எட் தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
ஜூலையில் 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! எப்படி விண்ணப்பிப்பது? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications