ஆதார் கார்டு.. குழந்தைகளுக்கான "பால் ஆதார்" வாங்கிட்டீங்களா? நீலநிற ஆதார் அட்டைக்கு இதுதான் ரூல்ஸ்
சென்னை: குழந்தைகளுக்கு பெற்றோர்கள் எடுக்க வேண்டிய ஆதார் அட்டை குறித்தான முக்கிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றை பதிவு செய்வதற்கான வழிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளது. அது என்ன?
ரேஷன் கார்டுகளை போலவே ஆதார் கார்டுகளும் ஒவ்வொரு இந்திய குடிமகனின் ஆவணமாகிவிட்டது.. ஒரு தனிப்பட்ட குடியினரின் பெயர், வயது, முகவரி, பயோமெட்ரிக் விவரங்கள் போன்ற எல்லா தகவல்களுமே இதில் பதிவு செய்யப்படுகிறது.
பால் ஆதார்: அதேபோல, குழந்தைகளுக்கும் இப்போதெல்லாம் ஆதார் எடுக்க சொல்கிறார்கள்.. கடந்த 2018ம் ஆண்டிலிருந்தே 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் ஆதார் அட்டை எடுப்பதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது. இதன்பெயர்தான், குழந்தை ஆதார் அட்டை அதாவது "பால் ஆதார்" (Baal Aadhaar) அல்லது நீல ஆதார் அட்டை என்பார்கள்.

இந்த ஆதார் கார்டு பார்ப்பதற்கு நீல கலரிலேயே இருக்கும்.. குழந்தைகளுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.. இந்த ஆதார் அட்டையிலும் 12 இலக்க நம்பர்கள் தரப்பட்டிருக்கும் என்றாலும், ஆதார் கார்டுக்கும் - பால் ஆதார் கார்டுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளன..
நீலநிற ஆதார்: இந்த நீலநிற ஆதார் அட்டைகளில் குழந்தையின் கருவிழி, கைரேகை ஸ்கேன் இவையெல்லாம் தேவையில்லை... குழந்தையின் ஆதார் அட்டையை சரிபார்க்க வேண்டுமனால், பெற்றோர்களில் ஒருவர் அவர்களின் அசல் ஆதார் அட்டை மற்றும் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழை சமர்ப்பித்தாலே போதும்...
ஆனால், குழந்தைகளின் ஆதார் அட்டையின் செல்லுபடியாகும் காலம் வெறும் 5 வருடங்கள்தான். குழந்தைக்கு 5 வயதாகும்போது, குழந்தையின் போட்டோ, கைரேகை, கருவிழி ஸ்கேன் போன்றவற்றை பெற்றோர்கள் புதுப்பிக்க வேண்டும்.. இல்லாவிட்டால் கார்டு ரத்தாகிவிடும். நீலநிற கார்டு புதுப்பிக்க கட்டணம் எதுவும் தேதவையில்லை.
பால் ஆதார் கார்டு பெறுவது எப்படி: நீல ஆதார் அட்டை பெற வேண்டுமானால், நேரடியாக ஆதார் மையத்துக்கு மட்டுமே செல்ல வேண்டும். பிறப்பு சான்றிதழ் அல்லது மருத்துவமனை டிஸ்சார்ஜ் சீட்டு, பெற்றோரின் ஆதார் அட்டைகள் போன்றவற்றை ஆவணங்களாக கொண்டு செல்ல வேண்டும்,.. ஆதார் மையத்திலேயே விண்ணப்ப படிவத்தை நிரப்பி தந்து, ஆவணங்களையும், குழந்தையின் போட்டோவையும் தர வேண்டும்.
அப்பாயிண்ட்மென்ட்: இதெல்லாம் சரிபார்க்கப்பட்டு, 60 நாட்களுக்குள் நீல நிற ஆதார் அட்டை வழங்கப்படும். பிறந்த குழந்தைக்கு கூட நீல நிற ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், இதற்கு குழந்தையின் பிறந்த சான்று, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ரசீதுகள் கட்டாயம் தேவைப்படும். ஆன்லைனிலும் இந்த பால் ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள முடியும்.. எப்படி தெரியுமா?
- UIDAI என்ற அதிகாரப்பூர்வமான வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும்
- அதில், "My Aadhar" பகுதியில், "Book an appointment" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் -
- இப்போது "Child Aadhaar" என்ற கேட்டரிகியை தேர்வு செய்து, அதில், "New Aadhar" என்பதை தேர்ந்தெடுத்து, உங்களது செல்போன் நம்பர் மற்றும் கேப்ட்சா நம்பரை பதிவிட வேண்டும்
- பிறகு "Relationship with Head of Family" என்ற ஆப்ஷனில் உள்ள "Child (0-5 years)" என்பதை தேர்ந்தெடுத்து, உங்கள் குழந்தையின் விவரங்களை நிரப்ப வேண்டும்
- இப்போது உங்களது அப்பாயிண்ட்மென்ட்டை பதிவு செய்து கொள்ளலாம். அதாவது, அருகிலிருக்கும் ஆதார் சேவை மையத்தில் வசதியான தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்து, உங்கள் முன்பதிவை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications