பாபா வங்கா சொல்லிட்டார்.. நிச்சயம் உச்சத்தில் பறக்க போகுது தங்கம்.. 2026ல் இதுதான் நடக்குமாம்!
சென்னை: எதிர்காலத்தை முன்கூட்டியே துல்லியமாகக் கணித்த வெகு சிலரில் முக்கியமானவர் பாபா வங்கா.. அப்படி 2026க்கு இவர் விட்டுச் சென்ற கணிப்புகளில் தங்கம் பற்றிச் சொல்லியுள்ள சில விஷயங்கள் நமக்குக் கவலையை ஏற்படுத்துவதாக இருக்கிறது. அதாவது தங்கம் விலை அங்கிருந்து 20% வரை உயரலாம் என அவர் கணித்திருக்கிறார். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
எல்லாருக்குமே வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் ஆசை இருக்கவே செய்யும். இருப்பினும், சிலரால் மட்டுமே எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைத் துல்லியமாகக் கணிக்க முடியும். அப்படி எதிர்காலம் பற்றி துல்லியமாகக் கணித்தவர்களில் ஒருவர் தான் பாபா வங்கா..

பாபா வங்கா
20ம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்கேரியா நாட்டை சேர்ந்த பாபா வங்கா எதிர்காலத்தில் நடக்கும் பல விஷயங்கள் குறித்து துல்லியமான கணிப்புகளை விட்டுச் சென்றவர். டயானா மரணம், சீனாவின் எழுச்சி, இரட்டைக் கோபுரத் தாக்குதல் எனப் பல விஷயங்களைப் பாபா வங்கா துல்லியமாகக் கணித்துள்ளார். அப்படித் தான் அவர் 2026ம் ஆண்டிற்கும் சில கணிப்புகளை விட்டுச் சென்றுள்ளார். அதில் தங்கம் பற்றி அவர் சொல்லியிருக்கும் சில தகவல்கள் அதிர்ச்சி கொடுப்பதாகவே இருக்கிறது.
2026ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை உச்சம் தொடும் என்று பாபா வங்கா கணித்துள்ளார். இது முதலீட்டாளர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகப் பொருளாதாரம் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் இச்சூழலில் இது ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை
தங்கம் விலை இப்போது சில நாட்களாகக் குறைந்தாலும் கூட இவ்வாண்டு தொடக்கம் முதலே அது உச்சத்தைத் தொட்டு வந்தது. கடந்த அக்டோபர் 17ம் தேதி 24 காரட் தங்கம் ஒரு கிராம் அதிகபட்சமாக ₹13,277 வரை போனது. அதன் பிறகு மெல்லக் குறைந்து இப்போது 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.12,300 என்ற ரேஞ்சில் இருக்கிறது. இப்போது தங்கம் விலை குறைந்தாலும் கூட அது சீக்கிரமே உயரலாம் என்கிறார். குறிப்பாகப் பொருளாதார மந்தநிலை ஏற்படும்போது தங்கம் விலை மிக வேகமாக உயரும் என நிபுணர்கள் கருதுகின்றனர். கடந்த மந்தநிலையின்போது தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 50% உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
எவ்வளவு உயரும்
அடுத்தாண்டு, அதாவது 2026 தீபாவளிக்குள் தங்கத்தின் விலை 25% முதல் 40% வரை உயரக்கூடும் என வல்லுநர்கள் சொல்கிறார்கள். அதாவது 24 காரட் ஒரு கிராம் ரூ.16,000 முதல் ரூ.18,000 வரை செல்லக்கூடும் என அவர்கள் சொல்கிறார்கள். உலக வர்த்தகப் பதற்றங்கள், பணவீக்கம் மற்றும் வங்கித் துறையின் ஸ்திரமற்ற தன்மை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகச் சொல்லப்படுகிறது. எப்போதும் உலகில் பதற்றம் ஏற்படும்போது தங்கத்தை நோக்கி மக்கள் செல்வார்கள்..
பாபா வங்கா
இந்தச் சூழலில் தான் 2026ம் ஆண்டிற்கான பாபா வங்கா கணிப்புகள் கவனம் பெற்றுள்ளது. அதாவது 2026ல் நிதி பற்றாக்குறை அல்லது சர்வதேச வங்கி நெருக்கடி ஏற்படக்கூடும் என்றும் இது நிதி அமைப்புகளைச் சீர்குலைக்கலாம் என்றும் பாபா வங்கா கணித்திருக்கிறார். நாம் கடந்த காலங்களைத் திரும்பிப் பார்த்தால் ஒவ்வொரு முறையும் இதுபோல நடக்கும்போது தங்கத்தின் விலை 20% முதல் 50% வரை உயர்ந்துள்ளது. மீண்டும் அப்படி ஒரு நெருக்கடி ஏற்பட்டால், 2026 இறுதிக்குள் 24 காரட் தங்கம் விலை ரூ.18 ஆயிரம் வரை போகலாம்..
வல்லுநர்கள் சொல்வது என்ன
இது முதலீட்டாளர்களுக்கு இது தெளிவான ஒரு செய்தியைத் தருகிறது. நிச்சயமற்ற காலங்களில் தங்கம் தான் எப்போதும் ஒரு பாதுகாப்பான முதலீடாகத் தொடர்கிறது. பிட்காயின், பங்குகள் என ஏகப்பட்ட முதலீடுகள் வந்தாலும் கூட ஆபத்தான காலகட்டத்தில் தங்கம் தான் "கிங்" என்பதையே இது காட்டுகிறது. எனவே, இப்போது தங்கம் விலை குறைவதை ஒரு வாய்ப்பாகவே பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள்.
அதேநேரம் தங்கம் விலையில் இதுபோன்ற கணிப்புகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டாம் என்றும், பொருளாதார டேட்டா, பணவீக்கம் மற்றும் புவிசார் அரசியல் ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும் என்றும் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
சர்வதேச தங்க மார்கெட்டில் பூகம்பம்.. 25 ஆண்டுகளில் முதல்முறையாக தங்கத்தை விற்று தள்ளும் ரஷ்யா! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர்












Click it and Unblock the Notifications