உங்க மகள் விர்ஜினா? பெண் கன்னித்தன்மை பற்றி தகாத பதிவு - ட்வீட்டால் வாங்கிக்கட்டும் பிஆர் சுந்தர்
சென்னை: பிரபல முதலீட்டு ஆலோசகரும் யூடியூபருமான சென்னையை சேர்ந்த பிஆர் சுந்தர், ட்விட்டர் பயனரிடம் அவரது மகள் குறித்து தரக்குறைவாக கருத்திட்டதற்காக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
சென்னையை சேர்ந்தவர் பி.ஆர்.சுந்தர். முதலீட்டு ஆலோசகராகவும் யூடியூபராகவும் இருந்து வரும் இவர் ட்விட்டரிலும் தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வந்து உள்ளார்.
இந்த நிலையில் இன்று ட்விட்டரில் #PRSundar64 என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாக தொடங்கியது. அந்த ஹேஷ்டேகிற்குள் சென்று பார்த்தால் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

டிரெண்டான ஹேஷ்டேக்
சுந்தர் அப்படி என்னதான் சொன்னார் என்று அவரது கணக்கிற்கு சென்று பார்த்தபோது அதை லாக் செய்து வைத்து உள்ளார். அவர் பெயரில் டிரெண்டாகி வரும் ஹேஷ்டேக்கில் அவரது ட்விட்டரில் வெளியான பதிவு மற்றும் அதற்கு வேறொரு தெரிவித்த கருத்துக்கு அளித்த பதிலின் ஸ்க்ரீன்ஷாட்டை பலரும் பகிர்ந்து உள்ளார்கள்.

சர்ச்சை பதிவு
ட்விட்டரில் ஆசிஷ் என்பவரது பதிவுக்கு பிஆர் சுந்தர் அளித்து இருக்கும் பதிலில், "நீங்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக இருந்தால் செய்துகொள்ளுங்கள். இல்லாவிட்டால் விட்டுவிடுங்கள். ஒருவேளை நீங்கள் அவரது கன்னித்தன்மையை சோதிக்க விரும்பி, அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தால், "எதற்கு இந்த பெண்கள் கன்னித்தன்மையை சோதிக்க அஞ்சுகிறார்கள்?" என்று குறிப்பிட்டு உள்ளார்.

கன்னித்தன்மை சோதனை
இதற்கு விஜய் என்ற ட்விட்டர் பதிவாளர் அளித்து இருக்கும் பதிலில், "ஒரு ஆண் தனது கன்னித்தன்மையை சோதித்துக்கொண்டால், அதற்கு பின் பெண்ணிடம் கன்னித்தன்மையை சோதிக்க சொல்லுங்கள். இல்லாவிட்டால் இதை கேட்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. சென்சிபுல் நிறுவனத்தின் பரிசோதிக்கப்பட்ட எம்டிஎம்-க்கு நீங்கள் ஏன் எதிராக இருக்கிறீர்கள்?

உங்கள் மகள் கன்னியா?
நீங்கள் பணம் சம்பாதிக்கிறீர்கள். அதனால் என்ன?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இதற்கு பதிலளித்த சுந்தர், "உங்கள் மகள் கன்னியாக இருந்தால் நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள். போய் சோதித்து பாருங்கள்." என்று பதிவிட்டு இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த விஜய், "வாவ். உங்களுக்கு என்ன பிரச்சனை? சில கோடிகளை சம்பாதித்துவிட்டதால் நீங்கள் நினைக்கும் அனைத்தையும் பேசிவிட முடியாது.

வலுக்கும் கண்டனம்
உங்களை விட நான் மிகவும் மோசமாக பேசுவேன். எனக்கு ஒரு மகள் இருக்கிறார். தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபடுவது சுலபம். உங்களுக்கும் மனைவி இருப்பார்." என்று பதிலளித்து உள்ளார். இப்படி காரசாரமாகவும் கொச்சையாகவும் இருவருக்கும் இடையே விவாதம் சென்று கொண்டு இருந்தது. இதனை பார்த்துக்கொண்டிருந்த பயனர்கள், பிஆர் சுந்தர் மீதே தவறு இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்கள்.

நிறுவனங்கள் நடவடிக்கை
பிஆர் சுந்தரை பிளாக் செய்து விட்டதாகவும் ட்விட்டர் பயனர்கள் தெரிவித்து வருகிறார்கள். சில நிறுவனங்களும் பிஆர் சுந்தருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து உள்ளார்கள். ஆப்ஷன்ஸ் நிறுவனம் கொச்சியில் டிசம்பர் மாதம் நடத்த இருந்த Conclave 3.0 என்ற மாநாட்டிற்காக பிஆர் சுந்தர் உடன் போடப்பட்டு இருந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

செபி கண்கானிப்பு
இதன் தொடர்ச்சியாக பல நிறுவனங்கள் பிஆர் சுந்தர் உடனான ஒப்பந்தங்களை முறித்துக்கொள்வதாக அறிவித்து வருகின்றன. தனது மன்சுன் கன்சல்டன்சி நிறுவனத்தை பதிவு செய்யாமல் முதலீட்டு ஆலோசனைகலை வழங்கியதற்காக சுந்தர் மற்றும் அவரது மகள் மங்கயர்கரசி சுந்தர் ஆகியோர் செபியின் கண்காணிப்பில் கீழ் வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications