பேட் கேர்ள்: படத்தை போல அவர் வீட்டு பெண்களையும் வெற்றிமாறன் செய்ய சொல்வாரா? பஞ்சாயத்துக்கு வந்த பாஜக
சென்னை: படமே இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'பேட் கேர்ள்' படத்தின் டீசரே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. பள்ளிக்காலம் முதல் இளமைக் காலம் வரையிலான ஒரு பெண்ணின் கதையை கூறும் படத்தை பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், பிராமண பெண்கள் குறித்து இழிவாக படம் எடுத்துள்ளதாக எதிர்ப்புகளும் கிளம்பியுள்ள நிலையில், பாஜகவும் களத்தில் குதித்துள்ளது.
அனுராக் காஷ்யப், இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம், பேட் கேர்ள் என்ற படத்தை தயாரித்துள்ளனர். வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வர்ஷா பாரத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டிஜே அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோ நடித்துள்ள இப்படத்தின் டீசர் நேற்று முன் தினம் வெளியானது. இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் நேற்று முன் தினம் நடந்த டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு டீசரை வெளியிட்டனர்.
பள்ளியில் படிக்கும் டீன் ஏஜ் பருவ பெண்ணின் ஆசைகள், எதிர்பார்ப்புகள், முதல் காதல், முதல் முத்தம் என இளமை கனவுகளையும் பெற்றோரின் கட்டுப்பாடு அவர்களை விட்டு பிரிந்து தனியாக வாழும் வாழ்க்கை, அவளது காதல் தேர்வுகள் என ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையை குறித்து விவரிப்பதாக படம் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என படம் எடுக்கப்பட்டு இருப்பதாகவும், படத்தில் பிராமண சமுதாயத்தை சேர்ந்த பெண்ணாக அவர் சித்தரிக்கப்பட்டு இருப்பதாக சிலர் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
இதற்கிடையே படத்தை பாராட்டிய இயக்குனர் பா.ரஞ்சித், பேட் கேர்ள்ஐ பார்க்க நேர்ந்தது, இது உண்மையிலேயே தைரியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் படம்! இப்படிப்பட்ட துணிச்சலான கதையை ஆதரித்ததற்காக இயக்குனர் வெற்றிமாறன் மகத்தான பெருமைக்கு உரியவர். அஞ்சலி சிவராமன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் எனப் பாராட்டியிருந்தார்.

அதற்கு பதிலடி கொடுத்திருந்து திரவுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய மோகன் ஜி, ஒரு பிராமணப் பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சித்தரிப்பது இந்த குலத்திற்கு எப்போதும் தைரியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் படம். வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் & கோவிடம் இன்னும் என்ன எதிர்பார்க்க முடியும். இது போன்ற படங்களை உங்கள் சொந்த சாதிப் பெண்களுடன் முயற்சி செய்து, முதலில் உங்கள் சொந்த குடும்பத்தாரிடம் காட்டவும்" என காட்டமாக கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து இரு தரப்பு ரசிகர்களும் அடுத்தடுத்து மோதல் போக்கை கையாண்டு வரும் நிலையில் தற்போது வரை இந்த டீசரை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர். இதற்கிடையே பிராமண பெண்கள் குறித்து அவதூறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி படத்துக்கு பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்ஆர் சேகர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," வெற்றிமாறன் தனது #BadGirlTheMovie படத்தில் காட்டியது போல அவர் வீட்டு பெண்களை செய்ய சொல்வாரா? ஒரு பிராமண பெண்ணை வைத்து படம் எடுத்தவர் வேறு சமூக/ மதம் சார்ந்த பெண்ணை வைத்து அவர்கள் சமூக குறியீடுகள் வைத்து படம் எடுக்க துணிவு உள்ளதா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications