கெட்ட பழக்கம் Vs நல்ல பழக்கம்..! மணிமேகலை லைஃபை மாற்றிய 2024 ?
சென்னை: தொகுப்பாளினி மணிமேகலை இந்த 2024 ஆம் ஆண்டு தனக்கு எப்படி அமைந்தது என்பது பற்றியும் 2025இல் என்ன செய்யப் போகிறேன் என்பது பற்றியும் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இன்று இரவு 12 மணிக்கு புதிய ஆண்டு 2025 பிறக்கப் போகிறது. பலரும் பல கனவுகளுடன் புதிய வருடத்தை வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 2024இல் நடந்த நல்ல விசயங்களைச் சிலர் அசைபோட்டுப் பார்த்துக் கொண்டும் இருப்பார்கள். சிலருக்கு சில கஷ்டமான அனுபவங்களை இந்த 2024 கொடுத்திருக்கலாம். ஆகவே அவர்கள் இனி வரும் காலம் நல்ல காலமாக அமைய வேண்டும் எனப் பிரார்த்தனை செய்து கொண்டும் இருப்பார்கள்.

ஆனால், சிலர் என்ன நினைத்து என்ன நடந்துவிடப் போகிறது? நடக்கப் போவதை யாரால் தடுக்க முடியும்? என தத்துவம் கூட பேசலாம். வேறு சிலர் நாம் ஒன்று நினைத்தோம், தெய்வம் வேறு ஒன்றை செய்துவிட்டது என குமுறிக் கொண்டும் இருக்கலாம்.
ஆக, சென்று வா.. 2024.. புறப்பட்டு வா.. 2025 என காத்துக் கொண்டிருப்பது மட்டும் கன்ஃபார்ம். அப்படி கடந்த 2024 தனது வாழ்க்கை எப்படி அமைந்தது என ஒரு ரீவைண்ட் அடித்து அலசி இருக்கிறார் விஜே மணிமேகலை. அவரும் அவரது கணவரும் அதைப் பற்றி ஆழமாகப் போய் அலசி ஆராய்ந்து நக்கல் நையாண்டியுடன் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
அவர் இந்த 2024 நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்த வருடம் என்றே சொல்லலாம் என்கிறார். வேலையைத்தான் நாம் காதலிக்க வேண்டுமே தவிர, வேலையில் இருக்கின்ற கம்பெனியை காதலிக்கக் கூடாது என்ற தத்துவத்தை கற்றுக் கொடுத்ததும் இந்த 2024தான் என்கிறார்.
இந்தக் காதல் ஜோடிக்கு கடந்த 6 வருடங்களாகச் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது கனவாக இருந்துள்ளது. அது நிறைவேறியது இந்த 2024இல்தான். அதில் பெரிய சந்தோசம் என்கிறது இந்தத் தம்பதி. தொடர்ந்து மணிமேகலை பேசுகையில், "வழக்கமாக வெளிநாடுகளுக்குச் சுற்றுலா போவோம். ஆனால், இந்த வருஷம் எங்கேயும் போகவேயில்லை. அதைத் தவறவிட்டுவிட்டோம். அது ஏன் எனத் தெரியவில்லை" என்கிறார்.
இந்த ஜோடி டிசம்பர் மாதம் மட்டும் ஆர்டர் போட்டு வாங்கி சாப்பிட்ட உணவுக்கான பில் எவ்வளவு தெரியுமா? 10,294 ரூபாய். இது 30 நாட்களுக்கான பில் இல்லை. 15 நாட்கணக்கானதுதான். இது போக சமையல் பொருட்கள் வாங்கியதற்கு தனியாகச் செலவு செய்திருக்கிறோம்.
சுமார் மாதம் 10 ஆயிரம் என்றால் வருடத்திற்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள். ஆகவே அதை அப்படியே குறைத்து உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த இவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். அதை விட முக்கியம் வரும் 2025இல் மணிமேகலை சமைக்க கற்றுக் கொள்ளப்போகிறேன் என்று சபதம் எடுத்திருக்கிறார். குறைந்த பட்சம் சில உணவுகளைச் சமைக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்பது இவரது விருப்பமாக இருக்கிறது.

அடுத்து மொபைல் போனுக்கு அடிமையாவதிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்கிறார் மணிமேகலை. கடந்த 29 ஆம் தேதி மட்டும் இரவு 2 மணியிலிருந்து விடிவதற்குள் 2 மணிநேரம் 15 நிமிடம் மொபைல் போனை பயன்படுத்தி இருக்கிறார். அப்படி என்றால் தினமும் இவ்வளவு நேரம் வீணாகிறது. அதை குறைப்பதே 2025 ஆண்டின் லட்சியம்.
அதைத்தாண்டி கணவர் ஹூசைன் 2025 முதல் ஜிம் போய் உடம்பை குறைக்க முடிவு செய்துள்ளார். காலையில் குறைந்தது 6 அல்லது 7 மணிக்குள் தூங்கி எழவேண்டும் என்றும் அவர் இலக்கு வைத்திருக்கிறார். அது நடக்குமா? நடக்காதா என்பதை 2025 டிசம்பரில் போடப் போகும் புதிய வீடியோவை வைத்தே நாம் முடிவுக்கு வர முடியும்.












Click it and Unblock the Notifications