பெட்ரோலை விட கம்மி.. சிஎன்ஜி பைக் தெரியுமா? 100 கி.மீ மைலேஜ்! களமிறங்கும் பஜாஜ் ஃபீரிடம் 125..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஎன்ஜி மூலம் இயக்கப்படும் பைக்கை பஜாஜ் நிறுவனம் அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. பெட்ரோல் மூலம் இயக்கப்படும் பைக்குகளுக்கு மாற்றாக இது இருக்குமா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்த காலத்தில் பைக்குகள் பெரும் கவனம் பெற்றன. அதற்கு முன்னர் வரை சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த மக்கள் பைக்கை பார்த்து வியந்தனர். பைக்கில் போவது என்பது ஒரு கனவாகவே இருந்தது. இப்போது ஏறத்தாழ எல்லா குடும்பங்களிலும் பைக் இருக்கிறது. ஆனால், பெட்ரோல் விற்கும் விலைக்கு, பைக்கை தொடவே மக்கள் தயங்குகிறார்கள். இதற்கு தீர்வாகத்தான் சிஎன்ஜி வந்திருக்கிறது.

Bajaj CNG

சிஎன்ஜியில் இயங்கும் கார்கள் பயன்பாட்டுக்கு வந்த நிலையில், அதை பைக்கில் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை பஜாஜ் நிறுவனம் உலகின் முதன் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது பஜாஜ் நிறுவனம் இறக்கியிருக்கும் ஃப்ரீடம் எனும் பைக், சிஎன்ஜியால் இயங்கும் திறன் கொண்டது. மட்டுமல்லாது இந்த பைக்கில் பெட்ரோல் டேங்கும் இருக்கிறது.

ஒரு கிலோ சின்ஜி போட்டால் 100 கி.மீ வரை பயணிக்க முடியும். விலையும் பெட்ரோலைவிட கம்மிதான். ஃபீரிடம் பைக்குகள் 3 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது.

1.பஜாஜ் ஃப்ரீடம் 125: டிரம்

விலை - ரூ 95,000 (எக்ஸ்-ஷோரூம்)

அம்சங்கள்: ஹாலோஜன் ஹெட்லேம்ப், எல்சிடி திரை, டிரம் பிரேக்குகள், 17-இன்ச் முன் டயர், 16-இன்ச் பின் டயர்.

2.பஜாஜ் ஃப்ரீடம் 125: டிரம் LED

விலை - ரூ 1,05,000 (எக்ஸ்-ஷோரூம்)

அம்சங்கள்: எல்இடி ஹெட்லேம்ப், ஷஎல்சிடி திரை, டிரம் பிரேக்குகள்

3.பஜாஜ் ஃப்ரீடம் 125: டிஸ்க் எல்இடி

விலை - ரூ 1,10,000 (எக்ஸ்-ஷோரூம்)

அம்சங்கள்: எல்இடி ஹெட்லேம்ப், ப்ளூடூத் இணைப்புடன் முழு எல்சிடி திரை, டிஸ்க் பிரேக்குகள்

இப்படியாக 3 வேரிண்ட்களில் 5 நிறங்களில் இந்த பைக்குகள் விற்பனைக்கு வருகின்றன. முதல் கட்டமாக குஜராத், மும்பை உள்ளிட்ட நகரங்களில் முன்பதிவு தொடங்கியது. அடுத்தடுத்து இந்தியா முழுவதும் முன்பதிவு தொடங்கப்பட்டு விற்பனை செய்யப்படும் என பஜாஜ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இந்த பைக்கில் 2 கிலோ வரை சிஎன்ஜியை நிரப்ப முடியும். சிஎன்ஜி 100 கி.மீ வரை மைலேஜ் கொடுக்கும். அப்படியெனில் 2 கிலோவுக்கு 200 கி.மீ வரை பயணிக்க முடியும். அதேபோல 2 லிட்டர் வரை பெட்ரோலை நிரப்பிக்கொள்ளலாம். இது ஒரு லிட்டருக்கு 65 கி.மீ வரை மைலேஜ் கொடுக்கும். ஆக பெட்ரோலில் 130 கி.மீ வரையும், சிஎன்ஜியில் 200 கி.மீ வரையும் பயணிக்கலாம்.

இந்த பைக்கின் சீட்-க்கு அடியில் சிஎன்ஜி டேங்க் பொருத்தப்பட்டிருக்கிறது. அதேபோல மற்ற பைக்குகளில் இருப்பதை போலவே சிறிய அளவில் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டிருக்கிறது. 125சிசி திறன் கொண்ட இந்த பைக் சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 9.4 பிஎச்பி மற்றும் 9.7 என்எம் டார்க்கை வழங்குகிறது. இது 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் வருகிறது. மட்டுமல்லாது உலகின் மிக நீளமான இருக்கையுடன் கொண்ட பைக்காக இது இருக்கிறது.

சிஎன்ஜி டேங்க் வைக்க இடம் ஒதுக்கப்பட்டு, 785 மிமீ அளவில் பைக் சீட் வைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இட நெருக்கடியின்றி தாராளமாக அமர முடியும். இந்த அம்சங்கள் அனைத்தும் பைக் உலகில் பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கை தனித்துவமானதாக மாற்றும் என்று பைக் பிரியர்கள் கூறுகின்றனர்.

ஆட்டோமொபைல் துறையில் ஒரு காலம் வரை ஹீரோ ஹோட்னாவின் ஸ்பெலண்டர் பைக்குகள்தான் ஆதிக்கம் செய்து வந்தன. அனால் பஜாஜ் பல்சர் களமிறங்கிய பின்னர் ஒட்டுமொத்த ஆட்டொமொபைல் துறையும் முழுவதுமாக மாறியது. அப்படியான மாற்றத்தை இந்த சிஎன்ஜி பைக் ஏற்படுத்தும் என்று பேசப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+