இளையராஜா நல்லா மியூசிக் போட்டிருந்தாலும்.. நான்தான் திறமையாக வாயசைத்தேன்.. தெலுங்கு நடிகரின் காமெடி!
சென்னை: இசைஞானி இளையராஜாவின் பாடலுக்கு நான் திறமையாக வாயசைத்திருக்கிறேன் என அவரை புகழ்வது போல் தற்பெருமை பேசிய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.
Recommended Video
ஆந்திராவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் பாலகிருஷ்ணா. தெலுங்கு நடிகராக இருந்தாலும் இவரது படங்களின் காட்சிகளை பார்த்து சிரிப்பதற்கென்றே தமிழ் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.
அத்தகைய ரசிகர் பட்டாளத்தை தகர்ப்பது போல் ஏ.ஆர். ரஹ்மான் குறித்து பாலகிருஷ்ணா அளித்த பேட்டி உள்ளது. அது மட்டுமல்லாமல் ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித், ஜேம்ஸ் கேமரான் உள்ளிட்டோரையும் அவர் மிகவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தற்பெருமை
இசைஞானி இளையராஜாவையும் புகழ்வது போல் தனது தற்பெருமையையே பேசியுள்ளார் இந்த பாலகிருஷ்ணா. அந்த பேட்டியில் இசை குறித்து கேள்வி எழுப்பிய போது இளையராஜா பாடலுக்கு நான் திறமையாக வாயசைத்திருக்கிறேன் என்று பதில் அளித்திருக்கிறார்.

மியூசிக் டைரக்டர்
2011- இல் வெளிவந்த ஸ்ரீராமராஜ்ஜியம், 1992 இல் வெளிவந்த அஸ்வமேதம், தர்மஷேத்ரம், 1991 இல் வெளிவந்த ஆதித்யா 369, 1989 ஆம் ஆண்டில் வெளிவந்த அசோக சக்கரவர்த்தி, 1988 இல் வெளிவந்த ரக்தாபிஷேகம், 1984 ஆம் ஆண்டு வெளியான சஹாசமே ஜீவிதம் உள்ளிட்ட படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

பல மொழிகள்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இவரது பாடல்களுக்காகவே தியேட்டர் சென்று பார்த்த ரசிகர்களும் உள்ளனர். வசனமே இல்லாமல் தனது பின்னணி இசை மூலம் மக்களுக்கு புரிய வைப்பதில் வல்லவர்.

திறமை
இத்தகைய இளையராஜாவை புகழ்வது போல் புகழ்ந்துவிட்டு பின்னர் அவரது பாடலுக்கு நான் திறமையாக வாயசைத்திருக்கிறேன் என கூறியுள்ளது இளையராஜாவின் ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது. இன்றும் குடும்பச் சண்டை, காதல் தோல்வி, வேலை பளு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அருமருந்தாக இருப்பது இளையராஜாவின் இசை என்பதை அறிந்தே இவ்வாறு வாய் கொழுப்பில் பாலகிருஷ்ணா பேசியுள்ளாரா? என்ற கேள்வி எழுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications