ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேசியக் கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகளுக்கு இடையே கலாச்சார அடையாளங்களை முன்னிறுத்திய அரசியல் விவாதங்கள் சூடுபிடித்து வருகிறது- குறிப்பாக, பாஜகவின் தேசியத் தலைவர்கள் சமீபகாலமாகத் தமிழ் கலாச்சாரத்தை முன்னிறுத்திச் செய்யும் செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் ஆதரவாகவும், விமர்சன ரீதியாகவும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. ஏனெனில் ஒடிசாவில் தமிழரான விகே பாண்டியவை விமர்சிப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. இதற்கு திமுக தமிழர்களை விமர்சிக்கும் வகையில் உள்ளதாக அப்போது கடும் எதிர்ப்பும் தெரிவித்திருந்தது.
பாஜகவின் தேசியப் பொறுப்பாளர் நிதின் நபின், தமிழக பாஜக நிர்வாகிகளுடன் இணைந்து வாழை இலையில் அமர்ந்து பாரம்பரியத் தமிழ் உணவை அருந்தும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். "Breakfast done right, Tamil style!" என்ற வாசகத்துடன் பகிரப்பட்ட இந்தப் புகைப்படங்கள், பாஜக தமிழகத்தின் வேர் வரை செல்ல விரும்புவதைக் காட்டுகிறது. இதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி ஐநா சபையில் கணியன் பூங்குன்றனாரின் பாடலை மேற்கோள் காட்டியது முதல், செங்கோல் நிறுவியது வரை பாஜகவின் 'தமிழ் பாசம்' தொடர்ந்து வெளிப்பட்டு வருகிறது.

எனினும் இந்தச் செயல்பாடுகளை திமுக ஒரு 'தேர்தல் கால வியூகம்' என்றே விமர்சிக்கிறது. இதற்கு முக்கியக் காரணமாக ஓடிசா மாநிலத் தேர்தலின் போது நடந்த நிகழ்வுகள் சுட்டிக்காட்டப்படுகிறது.
ஓடிசா தேர்தலில் முன்னாள் முதல் பிஜூ பட்நாயக்கிறகு நெருக்கமானவரான வி.கே. பாண்டியன் ஐஏஎஸ்க்கு எதிராகப் பிரசாரம் செய்தபோது, அங்கு 'ஒடிசா கலாச்சாரம்' காக்கப்பட வேண்டும் என்ற வாதத்தை பாஜக முன்வைத்தது. அப்போது தமிழர்களுக்கெதிரான சில கருத்துக்கள் முன்னிறுத்தப்பட்டதாகத் திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டின.
ஓடிசாவில் ஒரு நிலைப்பாடு, தமிழகத்தில் ஒரு நிலைப்பாடு என பாஜக எடுக்கும் இந்த 'இரட்டை அணுகுமுறை' (Dual approach) அக்கட்சியின் உண்மைத்தன்மையைச் சோதிப்பதாக திமுக கடுமையாக விமர்சிக்கிறது.
பாஜக தரப்போ, ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரத்தையும் மதிப்பதே பாஜகவின் கொள்கை என்கிறது. ஓடிசாவில் நாங்கள் பேசியது அந்த மாநில மக்களின் உணர்வு; இங்கே பேசுவது தமிழக மக்களின் மீதான அன்பு. இதில் முரண்பாடு ஏதுமில்லை. தமிழும், தமிழும் சார்ந்த அடையாளங்களும் இந்தியாவின் பெருமை" என்று கூறி வருகிறது.
தேர்தல் காலங்களில் தலைவர்கள் வேட்டி கட்டுவதும், வாழை இலையில் உண்பதும் வாடிக்கையான ஒன்றுதான் என்றாலும், இன்றைய டிஜிட்டல் உலகில் ஒரு மாநிலத்தில் பேசும் பேச்சு மற்றொரு மாநிலத்தில் உடனடியாக எதிரொலிக்கிறது. ஓடிசா தேர்தலின் போது முன்வைக்கப்பட்ட வாதங்களும், தற்போது தமிழகத்தில் காட்டப்படும் கலாச்சார நெருக்கமும் ஒன்றோடொன்று முரண்படுவதாகப் பொதுவெளியில் கருத்துக்கள் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது..
𝐁𝐫𝐞𝐚𝐤𝐟𝐚𝐬𝐭 𝐝𝐨𝐧𝐞 𝐫𝐢𝐠𝐡𝐭, 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐬𝐭𝐲𝐥𝐞! ⚪🥥🌴
— BJP (@BJP4India) April 13, 2026
BJP National President Shri @NitinNabin had an authentic Tamil breakfast on banana leaves with hardworking karyakartas of BJP. 🎥 pic.twitter.com/uuiRUZ64EI
இதுபற்றி முன்பு கருத்து தெரிவித்த திமுக, ஓடிசா தேர்தலின் போது, பாண்டியன் ஒரு தமிழர் என்பதையே மிகப்பெரிய குற்றமாகச் சித்தரித்து பிரசாரம் செய்தார்களே, அப்போது எங்கே போனது இந்த 'தமிழ் ஸ்டைல்' பாசம். ஒருபுறம் வாழை இலையில் சாப்பிட்டுவிட்டு, மறுபுறம் கல்வி நிலையங்களிலும், பெயர்ப் பலகைகளிலும் இந்தியைத் திணிக்கும் பாஜகவின் 'இரட்டை வேடம்' தமிழர்களுக்குத் தெரியாதா? என்றும் விமர்சித்தது.
மழை வெள்ள நிவாரணம் முதல் மெட்ரோ ரயில் நிதி வரை தமிழகத்தை வஞ்சித்த பாஜக, தேர்தலுக்காக மட்டும் தமிழ் வேடம் தரிப்பது தமிழர்களை ஏமாற்றும் செயல் என்றும் முன்பு திமுகவினர் விமர்சித்துள்ளனர். வட மாநிலங்களில் தமிழர்களை 'வந்தேறிகள்' போலப் பேசிவிட்டு, இங்கே வந்து வேட்டி கட்டுவதும், பொங்கல் கொண்டாடுவதும் வெறும் 'தேர்தல் நாடகம்' என்றும் திமுக முன்பு விமர்சித்திருந்தது.
-
முக்குலத்தோர் VS நாயக்கர்.. நயினார் நாகேந்திரனின் சாத்தூர் தொகுதியில் எந்த ஜாதி வாக்காளர்கள் அதிகம்? -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலர் உமாநாத் மீது நடவடிக்கை கோரி வழக்கு.. ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
வானதி சீனிவாசன் ஐசியூவில் அனுமதி.. 3-4 நாட்கள் தொடர் சிகிச்சை தேவையாம்.. என்ன பிரச்சனை? -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
சைக்கிள் ஓட்டறதெல்லாம் ஓ.கே.. வாயை திறந்து பேசுங்க விஜய்.. அண்ணாமலை அட்வைஸ் -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
ஜோசப் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக, கணவராக இருக்கணும்.. மீண்டும் தாக்கி பேசிய நயினார் -
“விஜய்க்கு தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை”.. காட்டமாக விளாசிய சரத்குமார். -
மம்தாவை தூக்கி எறியும் பாஜக? ஸ்கெட்ச் போட்டு இறங்கிய அமித் ஷா.. மேற்கு வங்கத்தில் பரபர அரசியல் களம் -
நிலம் வாங்குற பிளான் இருக்கா? அப்போ ஹென்றி சொன்ன இந்த மேஜர் விஷயத்தை பாருங்க.. அப்புறம் முடிவெடுங்க -
ஏப்ரல் 18 வரை தமிழகத்தில் வெளுக்கப் போகும் மழை.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?














Click it and Unblock the Notifications