வலது கை காயத்திற்கு இடது கையில் பேண்டேஜ் போட்டது ஏன்? அண்ணாமலை ஆதரவாளர்கள் விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வலது கை கட்டை விரல் காயத்திற்கு இடது கையில் பேண்டேஜ் போட்டுவிட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், இதற்கு அண்ணாமலையின் ஆதரவாளர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். அண்ணாமலையின் பாத யாத்திரை கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித்ஷா, அண்ணாமலையின் பாத யாத்திரையை தொடங்கி வைத்தார்.

Bandage on the left hand for the right hand thumb injury for TN BJP Leader annamalai, video spread

முதல் கட்ட பயணத்தில் மொத்தம் 22 நாட்கள் பாத யாத்திரை சென்ற அண்ணாமலை 41 சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்தார். பிறகு அண்ணாமலையின் முதல் கட்ட யாத்திரை கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி நிறைவு பெற்றது. அதன்பிறகு கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி அண்ணாமலை தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து தனது 2-வது கட்ட நடைபயணத்தை தொடங்கினார்.

தொடர்ந்து பல்வேறு தொகுதிகளில் அண்ணாமலையின் பாத யாத்திரை நடைபெற்று வருகிறது. லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பாஜகவை வலுப்படுத்தும் நோக்கில் அண்ணாமலை பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அண்ணாமலை தனது பாத யாத்திரைக்கு இடையே வேனில் நின்றபடி முக்கிய சந்திப்புகளில் கட்சியினர் மத்தியில் உரையாற்றி வருகிறார்.

அப்போது, தமிழகத்தில் ஆளும் பாஜக குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதனிடையே அண்ணாமலையின் பாத யாத்திரை கடந்த வாரம் வால்பாறை வந்தது. பாதயாத்திரையின் போது வேனில் அண்ணாமலை ஏறிய போது அவரது வலது கை கட்டை விரலில் அடிபட்டதாக தெரிகிறது. இதனால், அண்ணாமலை தனது கையை உதறிக்கொண்டே இருந்தார்.

இதைப்பார்த்த சுற்றியிருந்த பாஜக நிர்வாகிகளும் உடனே பேண்டேஜ் கொண்டு வர ஏற்பாடு செய்தனர். இதற்கு இடையே, அண்ணாமலை மைக்கை பிடித்து பேச ஆரம்பித்து விட்டார். அருகே இருந்த பாஜக பொதுச்செயலாளர் முருகானந்தம் பேண்டேஜ் வாங்கி வர சொன்னார். சில நிமிடங்களில் தொண்டர்களும் பேண்டேஜ் வாங்கி வந்தனர். அண்ணாமலை தனது வலது கையால் மைக்கை பிடித்து ஆவேசமாக பேசிக்கொண்டு இருந்தார்.

Bandage on the left hand for the right hand thumb injury for TN BJP Leader annamalai, video spread

உடனே அருகில் இருந்த பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ. பி முருகானந்தம் அண்ணாமலையின் இடது கை ஆள் காட்டி விரலில் பேண்டேஜ் போட்டு விட்டார். ஒரு இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அடி பட்டது என்னமோ...வலது கை கட்டை விரலில் ஆனால், பேண்டேஜ் இடது கை ஆள்காட்டி விரலில் போடுகிறார்களே.. என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதனிடையே, அண்ணாமலைக்கு வலது கை இடது கை என இரண்டு பக்கமும் காயம் ஏற்பட்டதாகவும் வலது கையில் பேசிக்கொண்டு இருந்ததால் இடது கையில் பேண்டேஜ் போட்டு விட்டார்கள் என்றும் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+