அதிமுகவுக்கு அறிவுரை கூற ஆடிட்டர் குருமூர்த்தி யார்..? வெளுத்து வாங்கும் பெங்களூரு புகழேந்தி..!
சென்னை: அதிமுகவுக்கு அறிவுரை கூற ஆடிட்டர் குருமூர்த்தி யார் என அதிமுக செய்தித் தொடர்பாளரும் அக்கட்சியின் முக்கிய பிரமுகருமான பெங்களூரு புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சை கேட்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என அவர் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.
செய்தி தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாதத்தின் போது பெங்களூரு புகழேந்தி இதனைக் கூறினார்.

சசிகலா இணைப்பு
துக்ளக் இதழின் 51-வது ஆண்டுவிழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை மேடையில் வைத்துக் கொண்டே திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் சசிகலாவையும் அதிமுக இணைத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்தார். இவரது இந்தக் கருத்துக்கு அதிமுக மேல்மட்ட தலைவர்களிடம் இருந்து இன்னும் எந்த ரியாக்ஷனும் வராத நிலையில் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியிடம் இருந்து பதிலடி வந்திருக்கிறது.

இவர் யார்?
செய்தி தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய புகழேந்தி, ஆடிட்டர் குருமூர்த்தி போன்ற நபர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் இல்லை என்றும் அதிமுகவுக்கு அறிவுரை கூற இவர் யார் எனவும் வெளுத்து வாங்கினார். மேலும், குருமூர்த்திக்கும் அதிமுகவுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது எனவும் வினவினார்.

ராஜேந்திர பாலாஜி
இதேபோல் சசிகலாவை புகழும் வகையில் கோகுல இந்திரா அப்படி பேசியிருக்கக் கூடாது என்றும் இதேபோல் அதிமுகவும் அமமுகவும் இணைய வாய்ப்பிருப்பதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறிய கருத்தையும் கட்சி ஏற்கவில்லை எனவும் தெரிவித்தார். சொந்தக் கட்சியை சேர்ந்த அமைச்சர் மற்றும் அமைப்புச் செயலாளரின் கருத்தை பெங்களூரு புகழேந்தி உதாசீனப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் களேபரம்
பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா இன்னும் ஓரிரு வாரங்களில் விடுதலையாக உள்ள சூழலில் வெளியில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் அவரது வருகைக்கு பிறகு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்து வருகின்றன. சசிகலா விவகாரத்தில் ஆளுக்கொரு கருத்து தெரிவிப்பது 2017-ம் ஆண்டு நடைபெற்ற அரசியல் களேபரங்களையே நினைவூட்டுகின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications